பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், டிசம்பர் 17

நாடெல்லாம் ஒரு புகைச்சல் வருகின்றதா?

நாடெல்லாம் ஒரு புகைச்சல் வருகின்றதா?
ஒரு மாதிரி ஆளாளுக்கு குடியுரிமை மசோதாவுக்கு எதிராக பொங்குகின்றார்களா?
ஆம், அப்படித்தான் பொங்குவார்கள், ஏன் பொங்குவார்கள்?
குடியுரிமை மசோதா நிறைவேறிவிட்டது இனி தகுந்த அடையாளமில்லாதோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
இதில் வங்கதேசத்தவரும், பர்மியரும் இன்னும் சில கிழக்கு எல்லை மக்கள் மட்டும் உண்டு என்றால் உங்கள் எண்ணம் தவறு
காலவதியாகிவிட்ட விசாவின் பின்னரும் இங்கு வாழும் மிஷனரிகள், இன்னும் எப்படியோ வந்துவிட்டு போக மறுக்கு போதகர்கள்
கல்வி மருத்துவமனை என பெரும் முதலீடு செய்துவிட்டு போக மனமில்லாமல் சுற்று ஐரோப்பியர்கள்
இன்னும் பல வகையில் ஊடுருவியிருக்கும் இத்தேசத்தின் புற்றுநோய்கள் எல்லாம் அகற்றபடும்
அவர்களா செல்வார்கள்? மாட்டார்கள்
அட செல்வதாக இருந்தாலும் மாற்று ஏற்பாடு செய்துவிட்டல்லவா செல்லமுடியும்? எத்தனை பில்லியன் முதலீடுகள்?
ஆக அவர்கள் தூண்ட வேண்டிய கைகூலிகளை தூண்டிவிடுகின்றார்கள்
கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக என எங்கெல்லாம் தங்கள் ரகசிய கட்டுப்பாடு உண்டோ அங்கெல்லாம் கண்ணை காட்டுகின்றார்கள், அடிமைகள் தெருவுக்கு ஓடிவருகின்றன‌
இது இந்தியாவுக்கு புதிது
புல்வாமாவுக்கு பொங்காதவர்கள், நாட்டின் அச்சுறுத்தலுக்கு பொங்காதவர்கள்
ஆம் எத்தனையோ முறை பாகிஸ்தான் இங்கு குண்டுவெடிப்பை செய்தபொழுது பொங்காதவர்கள், சீன ஊடுருவலுக்கு பொங்காதவர்கள்
இப்பொழுது அந்நிய நாட்டுக்காரனை வெளியேற்றுவோம் என்றவுடன் வருகின்றார்கள் பார்த்தீர்களா?
விஷயம் வேறோன்றுமில்லை, புற்றுக்கு வெந்நீர் ஊற்றியாயிற்று நாகங்கள் வெளிவருகின்றன, குழவி கூட்டை கலைத்தாயிற்று குளவிகள் அலறி அடித்து பறக்கின்றன‌
வளையினை வெட்டியாயிற்று கருந்தேள்கள் வீதிக்கு வருகின்றன, குளத்தை கலக்கியாயிற்று முதலைகள் கரைக்கு ஓடிவருகின்றன‌
விஷ விருட்சத்தை வெட்டியாயிற்று, நச்சு பறவைகள் அலை மறிக்கின்றன.
தேசம் அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துகொண்டே இருக்கின்றது, அரசு செய்யவேண்டியதை மிக வேகமாக செய்யட்டும்
அவசரகால சட்டம் இயற்றும் நாழிகை நெருங்கிவிட்டது

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக