பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், டிசம்பர் 18

பல இஸ்லாமிய நாடுகள் கப்சிப்பாக இருக்கின்றன


இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் உலக அதிர்வுகளை கொடுத்துவிட்டது, சீனா போன்ற நாடுகள் வாயே திறக்கவில்லை
இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் கப்சிப்பாக இருக்கின்றன, ஐரோப்பிய நாடுகள் அமைதி
ஏதாவது சொல்லாவிட்டால் நாட்டாமை அல்ல என்பதால் அமெரிக்கா கடமைக்கு எதையோ சொல்லிவிட்டு பின் பக்கமாக இதெல்லாம் சும்மா பார்மாலிட்டி என சொல்லிவிட்டு ஓடிவிட்டது
மெக்ஸிகோ மக்களுக்காக சுவர் கட்டிவிட்டு, இந்தியரை கைகால் கட்டி அனுப்பிவிட்டு அந்நாடு ஒரு மண்ணாங்கட்டியும் உருப்படியாக பேச வாய்ப்பே இல்லை
சந்தடி சாக்கில் இம்ரான்கானும் உள்ளே வந்துவிட்டார், வந்து அவர் சொல்லியிருப்பதுதான் சீரியஸ் காமெடி
"இந்தியாவின் சட்டதிருத்தத்தால் அங்கிருக்கும் அனைத்து இஸ்லாமியரும் பாதிக்கபட்டு பாகிஸ்தானுக்கு அகதிகளாக வரும் ஆபத்து இருப்பதால் நாங்கள் எல்லையில் காவல் இருக்கின்றோம் , இந்தியாவின் 20 கோடி இஸ்லாமியரும் பாகிஸ்தானுக்கு வந்தால் நாங்கள் எப்படி சமாளிப்பது என கவலையில் இருக்கின்றோம்"
இதை கேட்டு முதலில் சிரித்த நாடு இந்தியா, இங்கிருக்கும் இந்திய முஸ்லீம்களுக்கு ஆபத்து இல்லை, ஒருவேளை பாகிஸ்தான் செல்கின்றீர்களா என கேட்டு ஆளாளுக்கு கையில் 20 கோடி கொடுத்தாலும் அவர்கள் பாகிஸ்தானுக்கு வருவார்களா? என தலையில் அடித்து சிரித்துகொண்டிருக்கின்றது
ஆம், இந்தியாவில் இருந்து எந்த முஸ்லீம் பாகிஸ்தானுக்கு செல்வான்? கோடி கொடுத்தாலும் செல்வானா?
இந்தியாவினை தொடர்ந்து உலகமே இம்ரான்கானை பார்த்து சிரிக்கின்றது, இதனால் அன்னார் அப்செட் ஆகிவிட்டார்
சரி, இந்தியாவில் உள்ள முஸ்லீம் பூராவும் பாகிஸ்தானுக்கு விரட்டபட போகின்றனர் என்ற தகவலை கொடுத்தது யாராக இருக்க முடியும்?
அறிவாலயத்து பட்சிகள்தான் இப்படி எல்லாம் செய்தி பரப்பிவிடும்.
ஆக இம்ரான்கான் இப்பொழுதெல்லாம் முரசொலி படிக்கின்றார் , கலைஞர் டிவி பார்க்கின்றார் , அந்த செய்திகளை நம்பி பேசிவிட்டு சர்வாதிகாரி போலவே மூக்கு உடைபட்டு அமர்கின்றார்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக