பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், டிசம்பர் 18

திமுக என்பது அறிவே இல்லாத கட்சி

இந்த திமுக என்பது அறிவே இல்லாத கட்சி, எல்லாவற்றையும் தாமதமாகவே புரிந்துகொள்ளும்
திராவிட நாடு என்பது கனவு என தேசம் சொன்னபொழுது "திண்ணையில் படுத்து வாங்குவோம்" என்றார்கள், பின் உண்மை தெரிந்தபின் பல்லிளித்து கைவிட்டார்கள்.
பின் ராஜாஜியினை எதிர்த்தார்கள், நாட்டுபற்றுள்ளோர் ராஜாஜியின் நாட்டுபற்றை ஆற்றலை சொல்லி அப்பெரியவரை எதிர்க்காதீர்கள் என சொன்னாலும் ஏற்கவில்லை
பின்பு 1967ல் ஆமாம் ராஜாஜி நல்லவர்தான் என கூட்டணி வைத்தார்கள்
பின் காமராஜரை எதிர்த்தார்கள், நாட்டுபற்றுள்ளோர் அதை செய்யாதீர்கள் அம்மனிதன் தியாகி எனும் பொழுது கண்டுகொள்ளவில்லை
பின்னொரு நாளில் ஆம் அவர் நல்லவர் என்றனர் திமுகவினர், கருணாநிதி பகிரங்கமாகவே அவரை எதிர்த்து அரசியல் செய்ததை நினைத்து வருந்துகின்றேன் என்றார்
நடிகர்களை வளர்க்காதீர்கள் சினிமா மாயையினை வளர்க்காதீர்கள் என நல்லோர் சொன்னபொழுது ஓடி ஓடி வளர்த்தார்கள்
அது அவர்களையும் கெடுத்து நாட்டையும் கெடுத்தபொழுது விஜயகாந்த் வீட்டின் பூட்டிய கதவு முன் நாங்கள் செய்தது தவறு என மனமார ஒப்புகொண்டார்கள்
பிராமணரை எதிர்காதீர்கள் என்பதை முதலில் கேட்கவில்லை, பின்பு மெதுவாக ஆமாம் பிராமணர் நல்லவரே பிராமணியம்தான் குழப்பம் என தலைகவிழ்ந்தார்கள்
இந்திராவினை எதிர்க்காதீர்கள் என்றது தேசம், மீறி எதிர்த்தார்கள்
பின்பு இந்திராவினை புரிந்து கொண்டோம் என சரணடைந்தார்கள்
புலிகளை ஆதரிக்காதீர் என்றது தேசம். வலிய ஆதரித்தார்கள், பின்பு ராஜிவ் கொலை எல்லாம் முடிந்தபின் "சோ சாரி " என புலிகளை கைகழுவினார்கள்
ராமனுக்கு கோவிலா என முதலில் சீற்றத்தோடு எழும்பினார்கள்..பின் தேசம் அதை ஒப்புகொண்டதை பார்த்து ராமனுக்கும் கோவில் அவசியம் என அமைதியானார்கள்
மதுவிலக்கை கொண்டுவராதே என்றால் கொன்டுவருவார்கள், பின்பு ஆம் தவறு செய்துவிட்டோம் இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் ரத்து செய்வோம் என்பார்கள்
ராமதாஸ் திருமா போன்றோரை வளர்க்காதீர்கள் என்றால் கேட்கமாட்டார்கள், பின்பு ஆமாம் தவறு என நிலம் நோக்கி அழுது நிற்பார்கள்
இன்னும் ஏராளமான சம்பவங்கள் உண்டு, அவர்கள் வரலாறு முழுக்க முதலில் ஒரு விஷயத்துக்கு குதிப்பதும் பின் சரணடைவதும் குழம்புவதும் மன்னிப்பு கேட்கும் காட்சிகளாகவே குவிந்து கிடக்கின்றது.
எல்லா தவறையும் அவர்களே செய்வார்கள், பலர் தடுக்க தடுக்க செய்வார்கள், பின் ஆமாம் தப்புதான் என குனிந்து நிற்பார்கள்.
தேசம் சொல்லும் எதையும் முதலில் கேட்காமல் குதிப்பார்கள், பின் உண்மையினை உணர்ந்து தலையினை தொங்க போட்டு வருவார்கள்
இப்பொழுதும் காஷ்மீர் விஷயத்தில் செய்து கடைசியில் முகத்தை மூடி திரிந்தார்கள்
இப்பொழுது குடியுரிமை சட்டத்துக்கும் முகத்தை மூட தயாராகின்றார்கள்
ஆக திமுக என்பது முதலில் அறிவு கெட்டு ஆடிவிட்டு பின் திருந்தி முகமூடிபோடும் கழகம் என்பதுதான் வரலாறு, மற்றபடி சொல்ல ஒன்றுமில்லை
அவர்களுக்கு கொஞ்சம் புத்தி குறைவு, எல்லோரும் முதலிலே புரிந்து கொள்வதை அவர்கள் முதுகில் வாங்கியபின்புதான் புரிந்துகொள்வார்கள்
அது அவர்களின் பகுத்தறிவால் வந்த ஆட்டிசம் அன்றி வேறொன்றுமில்லை பரிதாபம்
அந்த சிறப்பு குழந்தைகளை திட்டாதீர்கள், அவைகளுக்கு எல்லாமே மெதுவாகத்தான் புரியும் பாவம்
இந்த நாட்டில் எல்லா நல்ல விஷயத்தையும் மெதுவாக உணர்ந்து, தாமதமாக‌ பின்னால் வரும் கொஞ்சம் அல்ல நிறையவே மந்த புத்திகொண்ட கூட்டம் அது

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக