பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், டிசம்பர் 26

தமிழகத்தில் பாஜக &தேமுதிக ஏன் தொடர்ந்து தோற்கிறது



தமிழகத்தில் பாஜக &தேமுதிக ஏன் தொடர்ந்து தோற்கிறது
எல்லா இடங்களிலும் ஊழல் மயம் மாற்றுக் கருத்து இல்லை
அரசியல் கட்சிகளில் மிக அதிகம்
சாதாரண கழக தொண்டன் கூட 30 சவரனுக்கு குறையாமல் அணிந்து இருப்பான்
அதிமுக திமுக மகளிரணியினர் கேட்க வேண்டாம்
எப்படி இந்த வசதி வேறென்ன Loot Mar தான்
இந்த கட்சிகள் மாறி மாறி ஜெயிப்பதன் ரகசியம்
நாம் கட்சிக்கு உழைக்காவிட்டால் நம் பிழைப்பில் மண் தான் என்ற பயம்
பெரிய தலைவர்கள் மாட மாளிகை கூட கோபுரத்தில்
கீழே உள்ளவர்களுக்கு சைக்கிள் ஸ்டாண்ட் பூக்கடை செருப்பு காண்ராக்ட் ஜாதி மத பேதமில்லாமல்
சற்று மேலை உள்ளவர்களுக்கு அரசு வேலை அரசு வக்கீல் நீதித்துறை நியமனங்கள்
இன்னும் மேலே உள்ளவர்களுக்கு காண்ட்ராக்ட்டுகள்
தங்கள் கட்சிக்கார்ர்களுக்கு மட்டுமே
ஒரு தேர்தல் என்று வந்துவிட்டால் விழுந்து வேலை செய்வார்கள்
இது தான் அவர்களின் வெற்றிக்கான ரகசியம்
பாஜக &தேமுதிக தமிழகத்தில் பரிதாபமாக போனதன் காரணம் இனி பார்ப்போம்
அதற்கு முன்பாக
என் வீட்டு பணிப்பெண் ஒரு அதிமுக சுய உதவி குழுவில் தலைவி
அம்மா உணவகத்தில் வேலை
காலையிலேயே விரைவாக வந்து வேலையை முடிப்பாள்
பிறகு மாலையில் வருவாள்
நல்ல வருமானம்
இப்போது உணவகத்தில் வேலை இல்லை
ஆனாலும் மாலை வேளைகளில் சீக்கிரம் முடித்து விட்டு ஓடுவார்
கேட்டால் கட்சி மீட்டிங் என்பாள்
இவரை போல பல தொண்டர்களை அழைத்து வாரம் ஒருமுறை கட்சி மீட்டிங் நடத்துவார்கள்
ஒவ்வொரு மீட்டிங்குக்கும் 200 ரூபாய்கள்
இழந்த வருமானத்தை கட்சி ஈடுகட்டுகிறது
திமுகவும் இப்படித்தான்
பின் ஏன் இந்த கட்சிகள் வளராது
பாஜக மீட்டிங்குகளை பார்த்து இருக்கிறேன்
அழுக்கு வேட்டி ஜோல்னா பை சகிதம் ஒட்டிய வயிறு ஒரு ரகம்
பன்னீர் புகையிலையுடன் வெட்டி கதை பேசும் உயர்மட்டத்தினர் ஒரு ரகம்
இன்று வரை இப்படித்தான்
கொள்கை பிடிப்புடன் உழைப்பது முதல் ரகம்
காக்காய் பிடித்து கட்சி பொறுப்புகளை பிடிக்கும் இரண்டாம் ரகம்
இந்த ரகம் மாற்று கட்சிகளில் இருந்து ஒண்டவந்தவர்களே
மற்ற கட்சிகளில் வசதி வாய்ப்புகள் மேலிருந்து கீழே பாயும்
பாஜக &தேமுதிக...வில்?
அதனால் ஒட்டுக்களும் இல்லை
ஒரு புள்ளி விவரம் எடுத்துப் பாருங்கள்
எத்தனை பாஜக&தேமுதிக கட்சி வழக்கறிஞர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள்
இந்த பாஜக தலைவர்கள் சிபாரிசு செய்த காங்கிரஸ் திமுகவினரே அதிகம்
சமீபத்தில் கூட பாஜக வழக்கறிஞர் அணி கூட்டம் மதுரையில் நடந்தது
ஒரு ஐநூறு பேராவது கலந்து கொண்டிருப்பார்கள் தலைமையுடன் போட்டோ எல்லாம் எடுத்து கொண்டார்கள்
ஆன கட்சி சம்பந்தமான வழக்குகள் என்று வந்தால் எல்லோரும் ஒடி விடுவார்கள்
அவர்களை சொல்லி குற்றமில்லை
ஒன்று கட்சி அவர்களை பயன்படுத்துவதில்லை அல்லது கட்சி எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை
நெடுஞ்சாலை துறை துறைமுக காண்டிராக்டுகள் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன
பெரும்பாலும் காங்கிரஸ் திமுகவினருக்கு மட்டுமே
உழைப்பதற்கு மட்டும் தொண்டன் உல்லாசமாக இருப்பதற்கு மாற்று கட்சிக்காரனா
எத்தனை எத்தனை வாய்ப்புகள் இருக்கின்றன
கொடி பிடிக்க மட்டும் தொண்டன் கொள்ளையடிக்க.....
..
ஏன் இப்படி சொல்கிறாய் அதற்கெல்லாம் இங்கு இடமில்ல நாங்கள் ஊழலுக்கு எதிரிகள் என்று
சிலர் பாய்வது என் காதில் கேட்கிறது
Within permissible limits எதுவுமே தப்பில்லைய சாதரண வேலைகளை கூட அவர்களுக்கு பங்கிட்டு கொடுப்பதில்லையே
அவனுக்கும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே
பாரத் மாதாகீ ஜெய்
ஆப்கீ மோடி சர்க்கார் என்று கோஷம் போட மட்டும் அவன் தேவை
இது நியாயம் இல்லை
ஏர்போர்ட்டுகளில் நின்று சவால் விடுவது தொடர்ந்தால் இனி 234 ம் ஆர்கே நகர்களே 39 ம் பூஜ்யங்களே
ஒட்டிய வயிறுடன் தொண்டன் தொப்பை வயிறுகளுடன் நிர்வாகிகளா
உனக்கு ஏன் இந்த அக்கறை என நீங்கள் கேட்கலாம்
என்றாவது ஒரு நாள் பாஜக&தேமுதிக தமிழகத்தை ஆளவேண்டும் என விரும்பும் ஒருவன்
யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல
நிதர்சனமான நடப்பு இதுதான்...  மற்றபடி இங்கே வேரோடிய திராவிட சிந்தனை/ தேசப்பற்று  ஒரு மண்ணுமில்லை. எல்லாமே சுயநலம் 




0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக