பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், டிசம்பர் 2

கனமழை சதுர மழை என்பதெல்லாம் அபத்தங்கள்

மழை ஒரு நாட்டின் வரம், அது இயற்கையான விஷயமும் கூட, அது அன்றி அமையாது வாழ்வு
அந்த மழை , அதுவும் பருவமழை பொழிவது ஏதோ உலக அதிசயம் போல தமிழ்நாட்டு செய்திகள் சொல்லிகொண்டிருப்பது பெரும் வேடிக்கை
அரசு ஓடி ஓடி உதவுகின்றதாம், ஒரு மழையினை சமாளிக்க முடியா அளவு , விடுமுறை விடும் அளவு தமிழ்நாட்டை யார் சீரழித்து வைத்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள்தான்
சாதாரண மழையினை தாங்கமுடியா அளவு தமிழகத்தை கெடுத்திருப்பதும் அவர்களே, பின் மழை வந்தபின் இதோ உதவுகின்றோம் என ஓடி வருபவர்களும் அவர்களே
மழை என்பது அடிப்படை விஷயம், அதை எதிர்கொள்வதை அரசியல் செய்யும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்
மழை மிக சரியாக இருக்கின்றது, அது தன் போக்கில் எதெல்லாம் நீர் ஆதார பகுதியோ அதை சரியாக அடையாளம் காட்டுகின்றது, கால்வாய்களை தூர்வாராததும் ஏரிகளை குளங்களை முழுமையாக ஆக்கிரமிக்க துணை போனதும் இந்த அரசு
கடந்த அரசு ஆக்கிரமிக்க துணை போனதை இவர்கள் மீட்கவுமில்லை, இவர்கள் அமுக்கியதை சொல்லவுமில்லை
பின் என்னாகும்? வெள்ளம் வரத்தான் செய்யும்
முழு காரணமும் இவர்களே, காப்பாற்றுகின்றோம் என வருபவர்களும் இவர்களே
இதோ முழு மழை கொட்டுகின்றது, ஆலயங்களின் யாகங்களின் முழு பலன் கிடைத்திருக்கின்றத், திரும்பும் திசையெல்லாம் வெள்ளம்
ஆனால் குறித்து வைத்து கொள்ளுங்கள் இன்னும் சில மாதங்களில் ஜோலார் பேட்டைக்கு ரெயில் விடலாமால் ஆந்திர அரசிடம் கெஞ்சலாமா? கன்னடனிடம் அரசியல் செய்யலாமா? மலையாளியிடம் மல்லுக்கு நிற்கலாமா? என யோசிப்பார்கள்
மழை அதன் கடமையினை சரியாக செய்கின்றது, அரசு அதன் கடமையினை சரிவர செய்யாமல் மழைகாலத்தில் மக்களை தத்தளிக்க செய்கின்றது
ஆக மக்கள் தன் கடமையினை சரியாக செய்யவில்லை, இதனால் கடமை உணரா அரசு அமைந்து ஏக சிக்கலில் மக்களை தள்ளியிருக்கின்றது
குற்றம் சாட்டபட வேண்டியது இவர்களே, மற்றபடி மழை அதே அளவில் இயல்பு மாறாமல் பெய்கின்றது, கனமழை சதுர மழை என்பதெல்லாம் அபத்தங்கள்
மாறாக மழை பெய்யட்டும், அது எவ்வளவும் பெய்யட்டும்
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.."
"அரசை தூற்றுதும்
அரசை தூற்றுதும்,
மக்களையும் மீடியாவினை
கடுமையாய் தூற்றுதும்"

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக