மதமாற்றத்தை தடுத்த திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு என்.ஐ.ஏ அறிவிப்பு..!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகரும், பாத்திரக்கடை நடத்தி வந்தவருமான ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிலர் மதபிரசங்கம் செய்துகொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக சென்ற ராமலிங்கம் என்பவர், மத பிரசங்கம் செய்தவர்களுக்கு எதிராக நடந்துகொண்டார், அங்கிருந்த இஸ்லாமியரின் குள்ளாவை வாங்கி தன் தலையில் போட்டுக்கொண்டு, அவர்கள் நெற்றியில் விபூதியை பூசி ஆக்ரோஷமாக பேசினார், இந்த சம்பவம் சமூக வளைதலங்களில் வைரலாகி பரபரப்பானது.
இந்த நிலமையில் அன்று பனிகளை முடித்துவிட்டு தனது மூத்தமகனோடு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார் ராமலிங்கம். அப்போது இடைமறித்த சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக 16 பேர் மீது திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கு மார்ச் மாதம் தேசிய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஏ.எஸ்பி. சவுகத் அலி தலைமையில் 4 பேர் கொண்ட குழு இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் 6 பேரை தேடப்படும் நபராக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. ரெஹ்மான் சாதிக் (39), முகமது அலி ஜின்னா (34), அப்துல் மஜீத் (37), புர்ஹாதீன் (28), ஷாகுல் ஹமீது (27)ம் நபீல் ஹாசன் (28) ஆகிய 6 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ அறிவிப்பு:-
0 comments:
கருத்துரையிடுக