பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஆகஸ்ட் 25

விஷ வலைகள் ..!



ப.சிதம்பரம் அறிவாளி அல்ல., இந்த தேசத்தை மறைமுகமாக அதிகாரம் செய்யும் கிழக்கிந்திய கம்பெனி மிஷினரி மற்றும் சீனா நக்சல் ஐந்தாம் படைகளால் அறிவாளியாக முன்னிறுத்தப்பட்டவர்..
சிதம்பரத்தை பொருளாதாரமேதையாகவும் புள்ளி விவரப்புலியாக காட்டியதெல்லாம் ஜிகினா வேலை... இந்திய பொருளாதரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஐந்தாம் படைகள் விரித்த விஷவலை.,

இந்திய பொருளாதாரம் மன்மோகன்சிங்கையும்.. சிதம்பரத்தையும், ரகுராம்ராஜனையும் நம்பியிருப்பதாக சித்திகரிக்க முயன்றதெல்லாம் உச்சக்கட்ட பித்தலாட்டம்..இந்திய மக்களை கலாச்சார பண்பாட்டு உணர்வு பெருக்கிலிருந்து அறுத்தெடுத்து பொருள் சகதியில் புதைக்கும் முயற்ச்சி.,
இந்திய பொருளாதாரம் டில்லி பட்ஜெட்டை நம்பி இல்லை.. புகைபடிந்த அடுக்களை கடுகு டப்பாவில் எங்கள் அம்மாக்கள் சுருட்டி வைத்திருக்கும் சில நூறு ருபாய் தாள்களை நம்பியே உள்ளது.. காதுகுத்து நூல்கட்டு பூப்புனித நீராட்டு என உறவுகளுக்குள் கொடுத்து வாங்கப்படும் கிராம் தங்கங்களில் உள்ளது...
எங்கள் இந்திய பொருளாதாரத்தை எந்த கொம்பனாலும் இன்ச் அசைத்து பார்க்க முடியாது., ஐந்தாம் படைகளுக்கு அடிமை சேவகம் செய்து அறிவாளி பட்டம் வாங்கியவருக்கெல்லாம் ரெண்டு பசுமாடு வைத்து பால் கணக்கு எழுதும் முனியம்மாவின் அறிவு கூட இல்லை.,

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக