பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூலை 31

திராவிடம் புகுந்து நாசமாய் போன கல்விச்சாலைகள்




பச்சையப்பர் கல்லூரியை பிடித்த சனியன் தான் என்ன?

வள்ளல் பச்சையப்ப முதலியார் (1754-1794) தான் வாழ்ந்த குறுகிய காலத்தில் கோவில் திருப்பணி, அன்னதான சத்திரங்கள், வேத பாடசாலைகள் ‌என்று செய்யாத தர்ம காரியங்களே கிடையாது!

தனது முடிவு நெருங்கி விட்டதை அறிந்த வாரிசு இல்லாத வள்ளல் பச்சையப்பர் தனது உயிலில் தனது சொத்தை இவ்வாறு பயன்பட வேண்டும் என்று எழுதி வைத்தார்

"சிவனிற்கும் விஷ்ணுவிற்கும் புனித சேவை செய்வதற்கு, கோவில் மற்றும் புனித தளங்களில் ( காசி முதல் கன்னியாகுமரி வரை) உள்ள அறகட்டளைகளுக்கும், கோவில்களில் கட்டுவதற்கும், ஏழைகளுக்கு உதவி புரிவதக்கும், 3/ சமஸ்கிருதம் கற்று தரும் பாடசாலைகளுக்கும், பொதுவான தர்ம காரியங்களுக்கும்".

1841 ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை பற்றி பல குற்றச்சாட்டுகள் எழவே, வெள்ளைகார நீதிமன்றம் தலையிட்டு ரூபாய் 8 லட்சத்தை அறக்கட்டளை சார்பாக மீட்டது. இதில் 4.5 லட்சம் இந்து  மத சம்பந்தமான நல்ல காரியங்களுக்கு  ஒதுக்கப்பட்டது. மீதி இருந்த தொகை கொண்டு கல்வி சாலைகள் தொடங்கப்பட்டன.

இங்கு தான் முதல் தவறு நடந்தது. வேத பாடசாலை மூடப்பட்டு பச்சையப்பர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
இந்து சமயம், கலை மற்றும் ‌கலாசாரப்படிப்புடன் நவீன கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் அமைந்திருந்தால் அது பச்சையப்ப முதலியாரின் விருப்பத்தை பூர்த்தி செய்திருக்கும். மாறாக நவீன கல்வியும் மதமும் பிரிக்கபட்டது.

1880 ஆம் ஆண்டு பச்சையப்பர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்துக்களினால் இந்துக்களுக்காக அரசாங்க உதவி இல்லாமல் நடத்தப்படும் இந்து கல்விச்சாலை என்று வெள்ளைக்கார அரசாங்கத்தால் வர்ணிக்கபட்டது.

சுதந்திர இந்தியாவின் மதசார்பற்ற கொள்கைகள் மூலம் இந்து கல்வி நிலையங்களில் மட்டும் தலையிடும் போக்கு பச்சையப்பர் கல்லூரியை வளர்ச்சி பாதையில் இருந்து திருப்பியது.

1960 யில் பச்சையப்பர் கல்லூரியின் தரத்திற்கு மரண அடி விழுந்தது திராவிட அரசியலால்.

அமேரிக்காவில் 7/ வியட்நாம் போரை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை முன் மாதிரியாக கொண்டு திமுக மாணவர்களை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இழுத்தது. இதில் ground zero பச்சையப்பர் கல்லூரி!

கருணாநிதி தனக்கு தேவைப்படும் போது எல்லாம் இந்த கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு போராட வைப்பான்  . இது  1990கள் வரை நடந்த கதை.

இந்த கல்லூரியின் மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அரசியல் கட்சிகள் நுழைவதால் 1996யில் கல்லூரி முதல்வர் டாக்டர் ராகவன் இந்த தேர்தலை தடை செய்தார். பதிலுக்கு அவர் மேல் ஆசிட் வீசப்பட்டது!

நிற்க‌. பச்சையப்பர் அறக்கட்டளையின் பெரும்பான்மையான சொத்துக்கள் இந்து  சமய சேவைக்காக ஒதுக்கப்பட்டது. அவற்றின் நிலை என்ன?

பண வருவாய் உள்ள ஒரு சிறிய பிள்ளையார் கோவிலை விட்டு வைக்காத இந்து அறநிலையத்துறை ஏன் பச்சையப்பர் அறக்கட்டளையை நெருங்கவில்லை?

பச்சையப்பர் அறக்கட்டளையின் தலைவர்களாக இருந்த  - முரசொலி மாறன், ஐசரி வேலன் - போன்ற சில பெயர்களை   தெரிந்து கொண்டால் நமக்கு உண்மை விளங்கும்!

பச்சையப்பர் அறக்கட்டளையை இந்து அறக்கட்டளையாக அறிவித்தால் திராவிட தலைவர்கள் நேரடியாக அறக்கட்டளை தலைமையை ஏற்க முடியாது!

இந்து அறக்கட்டளை சட்டம் சரியாக -கவனிக்க சரியாக- அமல் படுத்தப்பட்டால் அறக்கட்டளை சொத்துக்களை அபகரிப்பது அவ்வளவு  சுலபமாக இருக்காது.

பச்சையப்பர் அறக்கட்டளை ஒரு இந்து அறக்கட்டளை என்பது தெரிந்தால் அதன் கல்வி நிறுவனங்களிலும் இந்து மதம், கலை மற்றும் கலாச்சார வகுப்புகள் நடத்த கோரிக்கை எழலாம்!

ஒரு இந்து அறக்கட்டளை மதசார்பற்ற அறக்கட்டளையாக மாறி பிறகு திராவிட அறக்கட்டளையாக மாற்றப்பட்டு அதன் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன.  இது தான் பச்சையப்பர் அறக்கட்டளையின் வரலாறு!

முரசொலி மாறன், ஐசரி வேலன், துரைமுருகன் என்று இந்த அறக்கட்டளை சம்பந்தப்பட்ட கழக கண்மணிகளின் வாரிசுகள் எல்லாம் செல்ல செழிப்போடு விளங்குகிறார்கள்! இது பச்சையப்பர் முதலியாரின் அருளால் வந்ததா  அல்லது பச்சையப்பர் அறக்கட்டளையின் சொத்தை அபகரித்ததால் வந்த செழுமையா? கடவுளுக்கு தான் வெளிச்சம்!

திராவிட இயக்கங்களே பச்சையப்பர் கல்லூரியை பிடித்த சனியன்!

பச்சையப்பர் அறக்கட்டளை பற்றி  இந்த உண்மை பல பெரியவர்கள் & கல்விமான்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

அங்கு 1965  படித்த என் கல்லூரி முன்னாள் பேராசிரியர் விளக்கி சொன்னார்.

ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு கருணாநிதி  அந்த கல்லூரியை அழித்த கதை தெரியாது.

ப்ரெசிடெண்சி கல்லூரியையும்  கருணாநிதிதான் இப்படி சீரழித்தான் என்று சென்னை வாசிகளுக்கு நன்றாகவே  தெரியும்.

இந்துத்துவ இயக்கங்களும் போராளிகளும்  பச்சையப்பர் அறக்கட்டளை   குறித்தும் பொதுவில் குரல் எழுப்ப வேண்டும்.
          
                                                                                                                               --Vimal kumar









0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக