பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜூன் 17

இந்த திராவிடம், தலித்தியம், சமூக நீதி இவை எல்லாம்
நிச்சயம் இது மாபெரும் சாதனை, எங்கெல்லாமோ நூல்பிடித்து மிக சரியாக இலங்கையினை எச்சரித்து அங்கும் வெடித்தபின் இங்கிருக்கும் மிச்ச மீதிகளை பிடித்திருப்பது வாழ்த்துகுரிய விஷயம்
ஆனால் தமிழக பத்திரிகைகள் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போலவும், ஏதோ கோழிதிருடன் 3பேரை பிடித்தது போலவும் முடித்துகொண்டன‌
டிவிக்கள் அதுபோக்கில் விவாதம், சமையல்குறிப்பு என தன் ஜனநாயக கடமையினை செவ்வனே செய்கின்றன‌
தமிழகம் பொதுவாக அமைதி பூங்கா, இதற்கு முதல் சவால் தமிழ்தேசிய இயக்கங்கள் எனப்படும் புலிகளின் ஒட்டுகுழுக்களால் இங்கு வந்தது
நக்சலைட்டுகளை இங்கு ஒடுக்கிய காவல்துறை அவர்களையும் ஒடுக்கியது
ஆனால் 1987க்கு பின் புலிபயங்கரவாதம் வந்தது, திமுக அதனை ஆதரித்தது, அது ராஜிவ் கொலையில் முடிந்தது அதன் பின் புலிபக்கம் திமுக செல்லவில்லை
ஆனால் இஸ்லாமிய தீவிரவாதபக்கம் கலைஞர் தலைகாட்டவே இல்லை, விளைவு 1998ல் கோவையில் வெடித்தது
அதன் பின்பும் தீவிர நடவடிக்கை என இல்லை. மாநில அரசின் சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலால் எந்த நடவடிக்கையும் இல்லை. அச்சமயத்தில்
அத்வாணி மயிரிழையிலே இங்கு உயிர் தப்பினார்.
இங்குள்ள வாக்கு வங்கி அரசியல் அப்படி, அவமானமான அரசியல்
ஜெயா காலத்தில் சில விஷயங்கள் கடுமையாயின அதில் முக்கியமானது இமாம் அலி போன்றவர்கள் சுடபட்டது
ஜெயா ஒருநாளும் பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்ததில்லை, திமுக அதனை செய்ய வில்லை.
மத்தியில் காங்கிரஸ் அதைவிட மோசம்
2001ல் உலகநிலை மாறும்பொழுதே இந்தியாவும் அதற்கேற்ப மாறியிருந்தால் 2008 மும்பைதாக்குதல் நடந்திருக்காது
ஆனால் மோடி அரசு உலக அளவில் கடும் வலைப்பின்னல் நாடுகளுக்கிடையான தகவல் பகிர்வு என பல நடவடிக்கைகளை எடுத்து செய்யவேண்டியதை செய்கின்றது
அப்படித்தான் இந்த சதி முறியடிக்கபட்டிருக்கின்றது
இல்லையேல் ஓர்நாளில் இங்கு ஆலயங்களில் வெடித்திருக்கும் பலநூறு பேர் செத்திருப்பார்கள்
அத்தோடு விஷயம் முடியுமா?
பெரும் கலவரம் வரும், ரத்த ஆறு ஓடும். இறுதியில் இந்துத்வா வெறி என முடித்திருப்பார்கள்....
பெரும் ஆபத்தை முளையிலே கிள்ளிவிடுவதுதான் நல்ல ஆட்சி, அவ்வகையில் இந்த ஆட்சி சாதித்திருக்கின்றது
அன்றே காங்கிரஸும் திமுகவும் விழிப்பாக இருந்திருந்தால் பல தாக்குதல்களை தடுத்திருக்கலாம், அவர்களும் தயாராக இருந்தார்களா என்றால் இல்லை... வாக்கு வங்கிங்கிக்கு அஞ்சினார்கள்.
இந்த அரசு அஞ்சவில்லை, ஏனெனில் அது அவர்களிடம் நிரம்ப இருக்கின்றது
நாம் முன்பே சொன்னோம் ராகுல் தோற்க முதல் காரணம் பாதுகாப்பு நிரம்ப வேண்டிய நாட்டில் பாதுகாப்பு சட்டங்களை தளர்த்துவோம் என்பது, மக்கள் அதற்கு ராகுலின் மண்டையிலே தேர்தலில் அடித்தார்கள், வாழ்க பாரத பெருமக்கள்.
இதோ மதுரையிலும் கோவையிலும் அள்ளியிருக்கின்றார்கள். இதை மணிரத்னமும் கமலஹாசனும் திரையில் சொன்னபொழுது பொங்கிய அந்த கோஷ்டியினை இப்பொழுது காணவே இல்லை...
வரமாட்டார்கள், வரவே மாட்டார்கள். வந்தால் அவர்களும் உள்ளே செல்வார்கள்
நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை இது
ஒருவேளை தமிழகத்தில் சதிகாரர்கள் திட்டம் வென்றிருந்தால் யாரெல்லாம் பலியாகியிருப்போமோ தெரியாது, ஆனால் இப்பொழுது காப்பாற்றபட்டிருக்கின்றோம்
அவ்வகையில் பிழைத்தோர் சார்பாக அரசுக்கும், பாதுகாப்பு அமைப்புகளுக்கும், கண்ணுக்கு தெரியாத தெய்வங்களாகிய உளவாளிகளுக்கும் கண்ணீர் நன்றிகள்.... பெருமை மிகு ராயல் சல்யூட்...!
இந்த திராவிடம், தலித்தியம், சமூக நீதி இவை எல்லாம் ஒரு நாட்டையும் நாட்டுமக்களையும் காக்க முடியாது
அந்த தத்துவத்தால் குழப்பம் விளைவிக்க முடியுமே அன்றி தீர்வு சொல்லமுடியாது.
ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க, மக்கள் நிம்மதியாக வாழ இரும்பு கோட்டை மாதிரியான ஆட்சியும் காவலும் வேண்டும்
அதுதான் இப்பொழுது நடக்கின்றது, இம்மாதிரி சதிகார கும்பல் சிக்குகின்றது, இனி தேசம் செழிக்கும்.
வந்தே மாதரம்..ஜெய்ஹிந்த்...
🇮🇳தேசமே உயிர்மூச்சு🇮🇳

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக