பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜூன் 16

தமிழக பள்ளி கல்வி துறை மீது ஏன் வழக்கு பதிவு செய்ய கூடாது!

Maridhas M
தமிழக பள்ளி கல்வி துறை மீது ஏன் வழக்கு பதிவு செய்ய கூடாது!
நீங்கள் சட்டம் படித்தவரா?? ஒரு சரியான வழக்கிற்காக காத்திருக்கிறீரா? உங்களால் தீவிரமாக வழக்காட முடியும் என்றால் இதோ ஒரு நல்ல வாய்ப்பு. தமிழகத்தின் வரலாற்றில் நீங்கள் இடம்பெறும் அளவிற்கு முக்கியமான விவகாரம் இது. வழக்கிற்கான நியாயமான செலவினை நானே ஏற்கிறேன்.
அது என்னவென்றால்




தமிழ் நாடு State Board பாடத்திட்டத்தில் 9ஆம் வகுப்பு புத்தகத்தில் 213ஆம் பக்கத்தில் ஈவே ராமசாமி என்ற பெரியார் அவர்களைப் பற்றிய விருது விவரத்தில் அவருக்கு UNESCO (ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம்) சார்பாக 1970 ல் தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற விருதைக் கொடுத்துச் சிறப்பித்ததாகத் தகவலைத் தமிழக பள்ளிதுறை கொடுத்துள்ளது.
இது முழுக்க வடிகட்டிய பொய். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது கடந்த 50 வருடங்கள் மேலாகத் திராவிட ஆட்சியாளர்கள் மாணவர்கள் மத்தியில் ஈவே ராமசாமியின் பிம்பத்தை வலுக்கட்டாயமாக்க தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகத் திணிக்கிறார்கள். ஒரு உண்மை இடம் பெறுவதில் தவறில்லை. ஆனால் ஒரு அப்பட்டமான பொய்யைப் பள்ளியிலேயே சொல்லிக் கொடுப்போம் என்பது எந்தவிதத்தில் சரி???
எனவே வழக்கு உங்களால் நடத்த முடியும் என்றால் துணிந்து உள்ளே வாருங்கள். (இந்த வழக்கை நல்லவிதமாக முடித்தீர் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவு வழக்கு செலவிற்கான நியாயமான தொகையை நானே தருகிறேன்..)
கடந்த 40 வருடம் மேலாக TNPSC தேர்வு முதல் பள்ளி ஆண்டு தேர்வு வரை மக்களை முழு முட்டாளாக்கிய பொய் இது. இதை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை உங்களை சாரும்.
{நீங்களும் ஒரு முறை பாடபுத்தகத்தையும் வாங்கி சரி பார்த்துகொள்ளவும். மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் இந்த விதம் தகவலை தவறாக பள்ளி கல்விதுறை திணிக்கும் என்றால் அவர்கள் மீது தகுந்த வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள்.}
-மாரிதாஸ்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக