பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மே 20

காங்கிரஸ் ஜனநாயகம்

Written by: Lakshmana Perumal
காங்கிரஸ் ஜனநாயகம் பற்றி பேசுவதைக் காட்டிலும் கேவலமானது ஏதுமில்லை.
ஆனால் தங்களை மதச்சார்பற்றவர்கள் போலக் காட்டிக் கொள்ளும் புத்திசாலிகள் இதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு மோடிக்கு எதிராக கதறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ராகுல்காந்தி ஜனநாயகம் பற்றியெல்லாம் பேசுவதற்கு முன் தன்னோட ஆச்சி, தாத்தா, அப்பா எவ்வளவு யோக்கியமாக ஜன நாயகத்தைக் காப்பாற்றினார்கள் என்று படித்தால் பேச மாட்டார்.
காங்கிரசின் ஆட்சிக் காலத்தில் 88 முறை அரசியல் சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களின் ஆட்சியைக் கலைத்துள்ளது.
நேரு - 8
இந்திரா காந்தி - 50
ராஜீவ் காந்தி - 6
லால் பகதூர் சாஸ்திரி - 1
நரசிம்ம ராவ் - 11
மன்மோகன் சிங் - 12
இதில் அரிதினும் அரிதாக நியாயமான காரணங்களால் கலைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் 90% அடித்துச் சொல்லலாம். அதிகாரத் திமிரில் பல்வேறு மாநில ஆட்சிகளைக் கலைத்து ஜன நாயகத்தைக் கொலை செய்த கட்சி காங்கிரஸ்.
மற்ற கட்சிகள் எப்போதேனும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்திருக்கலாம். ஆனால் இதையே தொழிலாக செய்த கட்சி காங்கிரஸ் என்பதை மறந்துவிட்டு இன்னைக்கு பாஜக ஜன நாயகத்தைக் கொலை செய்வது போல கதறுவது முற்றிலும் போலித் தனமானது.
பி.கு : இதுவரை இந்தியாவில் 115 முறை 356 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. 77 ல் மட்டும் 12 முறை 356 ஐ ஜனதா ஆட்சியிலும் பயன்படுத்தி உள்ளனர்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக