ஜல்லிகட்டு போராட்டத்திலேயே தமிழகத்தில் ஒரு ஒத்திகை பார்க்கப்பட்டது.ஒரு கட்டத்தில் போராட்டம் முழுவதுமாக இந்திய விரோதம்-தனிநாடு-மோடி வெறுப்பு என்று உச்சகட்டமாக திருப்பப்பட்டது.
ஜனவரி 26 வரை அந்த போராட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம்.இந்தியக்கொடி குடியரசு தினத்திற்கு ஏற்றப்படும் போது இவர்கள் தனிக்கொடியை மெரினாவில் ஏற்றுவதற்கு திட்டம் வைத்திருந்தார்கள்.
திருமுருகன் காந்தி போன்றவர்கள் இனி ஏன் இந்தியா என்று பேச ஆரம்பித்தார்கள்.போலீஸ் கூட்டத்தை கலைப்பதை முள்ளிவாய்க்கால் முற்றம் போல சுற்றி வளைப்பதாக பேச ஆரம்பித்தார்கள்.உண்மையில் இவர்களுக்கு தேவை ஒரு கலவரம்,சில பிணங்கள்.அதை வைத்து தமிழகத்தில் மீண்டும் ஆயுத கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும்.அதற்கான தர்க்க நியாயத்தை பொது வெளியில் கொண்டு வர வேண்டும் என்றே திட்டம்.
அடுத்தது ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தை பயன்படுத்தினார்கள்.அதற்கு வேறு வேறு முகங்களை காட்டினாலும் மிக மூர்க்கமான ஒரு அணி திரட்டல் அதிலிருந்தது.எல்லா அரசியல் ரீதியான சுயநலமிகளும் அதில் கைக்கோர்ப்பார்கள் அவர்களே அறியாத ரத்த ருசி கொண்ட கோரப்பற்கள் அதில் ஒளிந்திருந்தன.
கடைசியாக அது ஸ்டெர்லைட் போராட்டத்தில் வந்து நின்றது.நடந்தது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்ற இன்று நேற்று திட்டமல்ல இது பல வருட நேர்த்தியான செயல்பாடு.
செல்வி.ஜெ போன்ற வலிமையான தலைமையின் மேல் அவர்களுக்கு பயம் இருந்தது.2011க்கு மேல் சில தளர்வுகள் இருந்தாலும் அவர் மீதான பயம் நிச்சயம் இருந்தது.எனவே அவரில்லாத குழப்பமான நேரத்தில் சூழ நினைத்தார்கள்.மத்திய அரசு சரியாக காய்களை நகர்த்தி வீழ்த்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று இலங்கையில் நடந்தது குறி வைக்கப்பட்டது என்னவோ இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு என்கிறார்கள்.நிச்சயம் ஆச்சர்யமாகவும் அச்சமாகவும்தான் உள்ளது.கடற்கரை ஓரங்களை மதரீதியாக கைப்பற்ற இங்கு முயற்சி செய்கிறார்கள்.அதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று புரிந்திருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு எந்த அளவிற்கு மிக சீரிய முயற்சிகளை எடுத்து வந்துள்ளது என்று.நான் கவனிக்கிறேன் பல நடுநிலை போலிகளை காணவே இல்லை இரண்டு நாளாக,பாதி பேர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எந்த மதத்திலும் தீவிரவாதம் கூடாது என்று மெல்ல துடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்.
நண்பர்களே! எல்லாவற்றையும் விட வாழ்வு புனிதமானது.உங்கள் மத ரீதியான கருத்தியல் போலி அரசியலை கைவிடுங்கள்.இங்கு உள்நாட்டின் பாதுகாப்பு,அமைதி,வளர்ச்சி என்றவற்றில் அக்கறை செலுத்தபவர்களின் பின்னால் நில்லுங்கள்.எல்லா மதத்திற்கும் இங்கே சுதந்திரம் உள்ளது ஆகவே மாயை விட்டொடழித்து மீளுங்கள்.
0 comments:
கருத்துரையிடுக