ஒத்திசைவு…
…நரேந்த்ர மோதி போன்ற செயலூக்கமும், ஆன்மபலமும், குவியமும் உள்ள ஊழலற்ற ஒரு மக்கள் தலைவரைப் பெறுவதற்கு, அவரைப் போன்ற பாரதத்தத்துவத்தில் நம்பிக்கையுள்ள மானுடர்கள் நிரம்பியுள்ள கட்சியைத் தெரிவு செய்து தேர்ந்தெடுப்பதற்கு, நமக்கெல்லாம் இந்த 2019ல் மறுபடியும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பை, ஒரு புண்ணியமாகவே கருதுகிறேன். மேலும் – ஏகோபித்த இடைஞ்சல்களுக்கிடையே, கடுமையான நெருக்கடிகளுக்கிடையே, மோதி அவர்கள் நம் தேசத்துக்குச் செய்துள்ள விஷயங்கள் அசாத்தியமானவை என்பதையும் நேரடியாக உணர்ந்துள்ளேன்… ஆகவே!
[15 காரணங்கள்] நான் ஏன் ராஹுல்காந்தியை ஆதரிக்கிறேன்?
06/04/2019
ஏனெனில்…
#2. ராஹுல் – ஒரு உண்மையான இண்டர்நேஷனலிஸ்ட். அவர் தம்மை, வெறும் இந்தியாவின் குடிமகனாகக் குறுக்கிக் கொள்வதில்லை. மோதியைப் போல அல்லாமல், ராஹுலுக்குத் தாய்நாடு என்பது பாரதமல்ல; அது தாய்லாந்து. ஆனந்தமாக அங்கு கூத்தடித்துக் கும்மாளமடித்து, பாரதத்தை முன்னேற்றிக் கொண்டிருப்பார். ஏனெனில் – அவருடைய கொள்ளுத்தாத்தா நேருவைப் போலவே அவரும் ஒரு அகிலவுலக மேதை, உலகமக்களின் ஒன்றிணைப்புக்கும் பரஸ்பர நல்லெண்ணங்களுக்கும் குழந்தைப் பருவத்திலிருந்தே போராடுபவர்.
#3. அவருடைய படுபீதியளிக்கும் மனோதைரியம் நமக்குக் கொடுக்கும் பிரமிப்பு. படிப்பென்று ஒரு சுக்குமில்லை. வெளியுலகத்திற்குத் தெரியும்படிக்கும் ஒரு வேலையும் ஒரு கடுகுக்கும் செய்யவில்லை; ஸாம் பிட்ரோடா தயவில், அமெரிக்க பாஸ்டனில் பலகாலம் ஏதோவொரு (வசதியாக இப்போது, திவாலாகிவிட்ட) நிறுவனத்தில் ‘அறிவுரையாளராக’ வேலை பண்ணியதாகக் கற்பனை நாவல்கள் கட்டுக்கதைகள் எல்லாம் எழுதினார். இப்படியெல்லாம் இருந்தாலும், தகுதியோ அனுபவமோ ஏன் நல்லெண்ணமோகூட துளிக்கூட இல்லாவிட்டாலும் – பாரதத்தையே முன்னேற்றிக் காட்டுவேன், நான் பிரதமமந்தியானால்தான் ஆயிற்று என ஒற்றைக்காலில் நிற்கிறார், படுகோரத் தவத்தில் இருக்கிறார். அவரையும் நம்புபவர்கள் இருக்கிறார்கள். ஆகவே நானும் நம்புகிறேன். ஏனெனில் எனக்கு அதிசய நிகழ்வுகளில் நம்பிக்கை இருக்கிறது. ராஹுல், நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது.
#4. ராஹுலின் குடும்பம், பாரம்பரியப் பெருமை மிக்கது. தாயார் ஸோனியா அம்மையார், தன் படிப்பு குறித்த விஷயங்களைப் பற்றிக் கூசாமல் புளுகியவர். பிரதமர் பதவிக்கு ஏங்கி, அது கிடைக்காது என்றவுடன் அதனை உடனடியாகத் தியாகம் செய்த திருவுள்ளம். ராஹுலின் தாய்வழிப் பாட்டனார் இத்தாலியில் ஃபாஸ்ஷிஸ்ட் கும்பல்களுடன் புழங்கிய பெருமை பெற்றவர்.
தந்தை வழியில் – எள்ளுத்தாத்தா மோதிலால், கொள்ளுத்தாத்தா ஜவஹர்லால் நேருவுக்குப் பதவி கிடைப்பதற்காகப் போராடினார். கொள்ளுத்தாத்தா நேரு, பாட்டி இந்திராகாந்திக்குப் பதவி கிடைக்கவைத்தார். பாட்டியானவர் அப்பன் ராஜீவ் காந்தியைப் பதவிக்காக வளர்த்தெடுத்தார். அம்மா ஸோனியா மெய்னோ அம்மையார், ராஹுலுக்குக் கட்டியம் கூறிக்கொண்டே இருக்கிறார் – எனக்கு மசுர்க்கூச்செறிகிறது. எப்படியாப்பட்ட பாரம்பரியப் பெருமை மிக்க குடும்பம்! குடும்பம் எனும் முக்கியமான சமூக அமைப்பில் எவ்வளவு பிடிப்பு! இதுதான் இளையபாரதம். (அதே சமயம் இந்த நரேந்த்ரமோதியைப் பாருங்கள்! ஒரு பின்புலமுமில்லாமல் ஏழையாக வளர்ந்து பின் திடுதிப்பென்று பிரதமராகவே ஆகிவிட்டாரே! இதைக் கேட்பாரே இல்லையா! ஐயகோ!!)
#5. ராஹுல் ஒரு திராவிடர். ஏனெனில், அவருக்குத் தெரியாமலேயே அவர் பல நிறுவனங்களை நடத்தியிருக்கிறார். அவருடைய அறிவியல்பூர்வமான கீர்த்தி அப்படி! நேஷனல் ஹெரால்ட், யங் இந்தியன், 000 போலப் பலப்பல பினாமி+நேரடி நிறுவனங்கள். வளம் கொழிக்கும் தொழில்கள். நிலமோசடிகள். நிதிமோசடிகள். சிறுபெரும் கொள்ளைகள். இதன் காரணமாகவே அவர் ஒரு பக்காத் திராவிடராகிவிட்டார்.
#6. ராஹுல்காந்தியின் நீதி+நிதி பரிபாலனத்தில் அவருக்கு இணை அவர்தாம் – அவற்றில் அவருக்கு அவ்ளோ அனுபவம் இருக்கிறது! பாடியாலா கோர்ட், அமலாக்கக் கோர்ட், வருமான வரி வழக்கு வியாஜ்யம் என அவருக்கு – கோர்ட், முன் ஜாமீன், நிபந்தனை ஜாமீன் என நிறைய, நிறைந்த அனுபவங்கள். மேலும் நீதிமன்றங்களில் அவருக்கு இருக்கும் பாபுலாரிட்டி வேறு எவருக்கும் இல்லை. அவர் குடும்பத்தினருக்கும் இந்த விஷயத்தின் திறமை தாஸ்தீ.
வாஜ்பேயி அரசு சமயத்தில் – போதைமருந்து, கணக்கில்லாத பணம் அது இதுவென அமெரிக்க பாஸ்டன் விமான நிலையத்தில் வசமாக மாட்டிக்கொண்டு வெளிவந்த, உலகளாவிய நீதிபரிபாலன அனுபவம்வேறு!
#7. கற்பனை வளமும் மிக்கவர், நம் ராஹுல்; அதாவது, திருந்தவே திருந்தாத, அழிச்சாட்டிய புளுகுணிமாங்கொட்டையார் அவர். காகித விமானத்துக்கும் நிஜ விமானத்துக்கும் ஆறு வித்யாசங்களையே விடுங்கள், ஒரு வித்தியாசத்தைக் கூட அறியா, அரியதோர் அறிவிலி. இருந்தாலும் தமக்குக் கிடைக்கவேண்டிய ‘வடெ போச்சே’ எனவொரு நியாயமான லிபரல் ஆதங்கத்துடன், ஆனால் ஆதாரங்களேயில்லாமல் கூசாமல் ‘ரஃபால் ஊழல்’ எனத் தொடர்ந்து பேத்துபவர். இவர் ஆட்சிக்கு வந்தால் ஜெயமோகனுக்கு இணையாக வெண்முரசென்ன – வெண்ரஃபால் எனக்கூட ஒரு புளுகுவரிசையை அவிழ்த்துவிடுவார்.
#8. அதிகார போதை என்கிற விஷயம் கிட்டவே அவர் போகமாட்டார்; ஏனெனில், சாதா கஞ்சா மரீஹ்வானா ஹெராயின் வகை போதையிலிருந்தே அவர் மீண்டு வருவது என்பதே கேள்விக்குறி. ஆகவே அவர் நல்ல தலைவராகப் பரிணமிப்பார் என்பதில் நமக்கெல்லாம் ஐயம் வருமா என்ன?
#9. ராஹுல் வருடத்தில் பலவாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறார் – அப்போது என்ன செய்கிறாரென்றே ஒருவருக்கும் தெரியாது. அவர் ஊடகங்களையே விரும்பாதவர். ராஹுல் தோலின் நிறம் வெள்ளை. கன்னம் குழிகிறது. ஜீன்ஸ் டீஷர்ட் போடுகிறார். ஆங்கிலம் ஓரளவுக்குச் சரியாகவே வருகிறது. என்னை ‘ராஹுல்’ என்றே அழையுங்கள், ‘ஸார்’ போடாதீர்கள் என்கிறார். என்னே பெருந்தன்மை! இவையெல்லாம் தகுதிகள் இல்லையென்றால், பின் என்ன, நாளுக்கு பதினெட்டு மணி நேரம் முட்டாக்கூத்தனமாக முட்டிமோதி பணி செய்வதெல்லாம் பெரிய்யதகுதியா என்ன?
#10. ராஹுல் ஒரு நல்ல நடிகர். இந்தத் தகுதி ஒன்றே போதுமல்லவா, பாரதத்தை வழி நடத்திச் செல்வதற்கு.

சமயத்திற்கேற்றவாறு நான் பிராமணன், நான் கஷ்மீரி பண்டிட், நான் மதச்சார்பின்மை வாதி, நான் இளைஞன், நான் காங்கிரஸ் பரம்பரை, நானே குல்லாபோட்ட முஸ்லீம்தான், நானே கத்தோலிக்கன்தான் – எனப் பெருச்சாளிகளுக்குத் தெற்றுப்பல்லும் சுண்டெலிகளுக்கு வாலும் கோமாளிகளுக்குக் குல்லாவும் காண்பித்துக்கொண்டு சமயோசிதமாக அலைபவர்.
#11. ராஹுல் பதவிக்கு வந்தால் – எல்லாவிதமான உதவித் தொகைகளும் அனைவருக்கும் கிடைக்கும். யாரும் ஒரு வேலையும் செய்யவேண்டாம்!ஹைய்யா!! பணம் வேண்டுமானால், அவருடைய நேஷனல்ஹெரால்ட் அச்சகத்திலேயே வேண்டுமளவு அச்சிட்டுக்கொள்ளலாம். இண்டர்னெட் மூலமாக ப்ரிண்ட்-ஆன்-டிமாண்ட் பணமும் கிடைக்கும். இந்த ஜொலிக்கும் திட்டத்துக்கு அமர்த்யாஷென், ரகுராம்ராஜன், பசிதம்பரம், மன்மோகன்ஸிங், ‘பங்க்’ குமார், கதிர்ஆனந்த் ( s/o துரைமுருகன்) போன்ற பொருளாதார நிபுணர்களிடமிருந்து ஏகப்பட்ட ஆமோதிப்பும் கிடைக்கும்.
#12. ராஹுல்காந்திக்கு விதம்விதமாக அறிவுரை தர என ஒரு பெரிய சான்றோர் கூட்டம் உள்ளது. அவர் விஷயங்களை ஊதிப்பெருக்கி உலாவ விட ஒரு பெரும் கும்பலே இருக்கிறது – பணமும் பதவியும் இலவசங்களும் வாங்கிக்கொண்டு ‘உழைக்கிறது.’ ஸாம் பிட்ரோடா போன்ற ‘ஒருகாலத்தில் தேசத்தின்மீது கரிசனம் இருந்த’ ஆசாமிகளும் இதில் விசித்திரமாக இருக்கிறார்கள். ராஹுலுக்கு – உடைகள், செருப்பு, ஹேர்ஸ்டைல், லிப்ஸ்டிக், தாடி சிரைப்பு, பேச்சு, எப்போது என்ன பொய் சொல்லவேண்டும், நடத்தல், சாப்பிடுதல், ஏப்பம் விடுதல், சாப்பிட்டது செரித்தபின் செய்யவேண்டிய காங்கிரஸ் செயல்திட்டம் என அனைத்துக்கும் குழுகுழுவாக அப்படித் தாங்குகிறார்கள். இருந்தாலும் அவ்ளோ சொதப்பல், போங்க. ராஹுலுக்கு இது வாய்வந்த கலை.
#13. நம் ஊடகப்பேடிகளின், அயோக்கிய அறிவுஜீவிகளின் ஆதர்ச டார்லிங்அவர். எப்படியும், மேற்படி நாய்களின் திசையில் எலும்புகள் ஏற்கனவே விட்டெறியப்பட்டுவிட்டதால் – அவைகள், ராஹுல் என்ன ஊழல் செய்தாலும் பதிலுக்குச் சம்பந்தமேயில்லாமலும் பொய்பொய்யாகவும் ‘மோதி, 2002, குஜராத் கலவரங்கள்’ என்றே பரப்புரை செய்யும்.
இம்மாதிரி கொடுக்கும் பில்ட்-அப்களுக்கு, பணம்வாங்காத ஆனால் பாரதத்தைக் குறித்த வெள்ளைக்கார/இளக்கார அல்லது தாழ்வுமனப்பான்மை கொண்ட அறிவார்ந்த அறிவிலிகளின் பக்கத்திலிருந்தும், ஏகத்துக்கும் ஆமோதிப்பு. புளகாங்கிதம். இவர்கள் பின்னாலும் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் திரண்டு ஒரே ஆரவாரம். பேடிக்கும்பல்கள்.
#14. ராஹுலின், விஷயங்களை ஃப்ரெஷ்ஷாக அணுகமுடியும் தன்மை. இதாகப்பட்டது எப்படியென்றால் – இந்த ஆசாமிக்கு, எந்த எழவைக் குறித்தும் ஒரு எழவும் தெரியாத, தெரிந்துகொள்ளவும் வக்கில்லாத ஒருவிதமான உயர் ஆன்மிக மனநிலை இருக்கிறபடியால் – எந்த ஒரு விஷயத்தையும் இவரால் ஃப்ரெஷ்ஷாக மட்டுமே அணுகமுடியும். புதியபுதிய பார்வைகளைத் தரமுடியும்.

#15. இவை அனைத்துக்கும் மேலாக, மிக முக்கியமாக – ராஹுலின் நகைச்சுவை உணர்ச்சி ஒன்றே போதும். எங்கு சென்றாலும் அமோகமாகவும் அபத்தமாகவும் உளறிக்கொட்டி – தன்னுடைய, ஸ்டாலின் சினேகிதத்தைப் பறைசாற்றுகிறார்.
தப்பித் தவறி, நம் கெட்டகாலத்தினால் – அவர் ஆட்சிக்கு வந்தால் – நமக்கெல்லாம் சுபிட்சம் கிடைக்கிறதோ இல்லையோ – காமெடிக்குத்துளிக்கூடப் பஞ்சமே இருக்காது என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
ஆகவே பாஜக-மோதி!
ஜெய்ஹிந்த்
-0-0-0-0-
0 comments:
கருத்துரையிடுக