பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மார்ச் 1

எப்படியோ பாகிஸ்தான் விமான பைலட்டுகள் நிம்மதி பெருமூச்சுவிடும் நேரமிது

Stanley Rajan

அபிநந்தன் நாளை விடுதலை , இம்ரான்கான் அறிவிப்பு...
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை பாகிஸ்தான் மதிக்க வேண்டும் என அமெரிக்கா அறிவித்த சிலமணிதுளிகளில் பாகிஸ்தான் இறங்கிவருகின்றது என்றால் அமெரிக்க எச்சரிக்கை எத்தகையது என்பதை புரிந்துகொள்ளலாம்
இந்தியதரப்புக்கு இது மிகபெரும் வெற்றி, ராஜதந்திரத்திற்கும் உலக அரங்கில் இந்தியாவின் அங்கீகாரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
இதில் ஒருவிஷயம் ஆழமாக நோக்க கூடியது
எப்பொழுதும் ஒருவித பந்தா காட்டி இந்தியா என்றால் ஒதுங்கும் அமெரிக்கா இப்பொழுதுமட்டும் ஏன் காட்டமாக இறங்கியது?
விஷயம் இல்லாமலில்லை
பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்த அமெரிக்க ஆசீர்வாதமும் இருந்தது, தாங்கள் அடிக்க வேண்டிய இலக்கை இந்தியாவினை வைத்து சாத்த திட்டம் தீட்டியது அது என்கின்றார்கள்
ஆம் மொத்தம் 6 இடங்களை இந்தியா நொறுக்கியது, அதில் ஒன்றுதான் இந்தியாவின் தேவையான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முகாம்
மீதி அமெரிக்க எதிரிகளின் முகாம்
தன் இலக்கினையும் அமெரிக்க இலக்கினையும் ஒரே நேரத்தில் அடித்து சாகசம் செய்தது இந்தியா
இதனால் தொடர்ந்து எழுந்த பதற்றம் காரணமாக இந்தியா சவால் எடுத்தது அதில்தான் அபிநந்தன் சிக்கிகொண்டார்
இப்பொழுதும் எப்படி அமைதிகாப்பது என எண்ணிய அமெரிக்கா சரியான ராஜதந்திர நடவடிக்கையில் இறங்கி உதவிவிட்டது
பாகிஸ்தான் என்னதான் மறுத்தாலும் "உங்கள் நாட்டில் கொல்லபட்ட தீவிரவாதிகளின் பட்டியலை நாங்கள் வெளியிடட்டுமா? " என கேட்டால் பாகிஸ்தான் கதறுவதை தவிர வேறு வழியில்லை
அபிநந்தன் விடுதலை தவிர பாகிஸ்தானுக்கும் வேறு தெரிவு இல்லை
நிச்சயம் மனமகிழ்ச்சியோடு விடுவிக்கமாட்டார்கள் தங்கள் நாட்டில் தங்கள் விமானத்தை வீழ்த்தியவனை விடுவிக்கின்றோமே எனும் வயிற்றேரிச்சல் நிச்சயம் இருக்கும்
விடுதலையாகின்றார் அபிநந்தன்
இந்தியா மிக கவனமாக இருக்க வேண்டிய நேரமிது, இந்த மாபெரும் அவமானத்தை பொறுக்கா பாகிஸ்தான் தன் சிலீப்பர் செல்களுக்கு கட்டளையிடலாம், விரும்பதகா சம்பவங்களை அரங்கேற்ற அவர்கள் துடிக்கலாம்
இது மகிழ்ச்சியான தருணம்,, ஆனால் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணமும் இதுவே
ஒவ்வொரு இந்தியனும் சீருடை அணியா ராணுவத்தினர் என்பதால் மிகுந்த விழிப்போடு தேச பாதுகாப்பை பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு
எப்படியோ பாகிஸ்தான் விமான பைலட்டுகள் நிம்மதி பெருமூச்சுவிடும் நேரமிது
அப்பாடா பிடிபட்ட இந்திய விமானியினை அனுப்பிவிட்டார்கள், இனி நாம் பிடிபட்டாலும் இந்தியா நிச்சயம் அனுப்பும் அதனால் யுத்தம் வந்தால் இந்திய எல்லை கடந்தவுடன் ஹாய் சொல்லி குதித்துவிடலாம் என அவர்களுக்கும் நிம்மதி
பாகிஸ்தான் பிரதமருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றொம், அபிநந்தனை வெளியேற்றுவது போல உங்கள் நாட்டின் தீவிரவாத இம்சைகளையும் எங்காவது அடித்து விரட்டுங்கள்
இந்திய சரித்திரத்தில் நின்றுவிட்ட அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் வரவேற்புக்கள்
அந்த மிக் 21 விமானத்தை மட்டும் தொடவே வேண்டாம் என அன்போடு கேட்டுகொள்கின்றோம்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக