எனது அடுத்த புத்தகத்திற்கான முன்பதிவு இன்று ஆரம்பம்:
புத்தகத்தைப் பற்றி:
நான் அடிக்கடி கூறுவது போல் ஒரு நாட்டை சிதைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்க வேண்டும் - பொருளாதாரம் சிதைத்துவிட்டால் பின் உள் நாட்டுக் குழப்பம் ஏற்படுத்து தொட்டு எதுவும் எளிது. அந்த வகையில் தெற்காசியாவில் இந்தியப் பெருங்கடலை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்தியா உடைந்து சிதற வேண்டும் என்பது பல நாடுகளின் விருப்பம். இந்தியாவின் மீது போர் தொடுப்பதை விட இதுவே ஆக அவசியமான ஒன்று சில நாடுகளுக்கு. பாக்கிஸ்தான் , சீனா போன்ற நாடுகளுக்கு இதன் தேவை அதிகம்.
சுமார் 400கோடி செலவு செய்து CAIC Z-10 வகை ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்து அதைக் கொண்டு இந்தியாவைத் தாக்கினால் என்ன பலன் கிடைக்கும் சீனாவிற்கு! அதை விட அதிக பலன் அந்த 400 கோடியை எடுத்து இங்கே இருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கினால் இந்திய நாட்டை சிதைக்கும் வேலையை அவர்களே செய்வார்கள். இந்தியர்கள் கையை வைத்து அவர்கள் கண்ணையே குருடாக்கும் வேலையே சிறந்த தந்திரமாக இருக்கும்.
1000 கோடி எடுத்து இங்கே இருக்கும் 2000 இயற்கை ஆர்வலர்கள் இல்லை போராளிகள் என்று சரியாகப் பார்த்து ஆளுக்கு 50லட்சம் கொடுத்தால் இவர்களே அதைக் கச்சிதமாகச் செய்வர். இதில் முக்கியமான வரை இரண்டு ஒன்று இந்தியாவில் நடக்கும் வளர்ச்சி திட்டங்களை எதிர்த்து மக்களிடம் குழப்பம் தூண்டுவான் , இரண்டாவது மொழி இனம் என்று கூறி பிரிவினை தூண்டும் போராளிகள் இருக்கிறார்கள். இயற்கை ஆர்வலர் என்று திரிபவர் பலரும் சரி , போராளி என்று திரிபவன் பலரும் சரி இந்த ரகமே. சப்தமே இல்லாமல் அரசியல் எதுவும் பேசாது இயற்கையை நேசித்து வேலை செய்யும் பல ஆயிரம் பேர் வெளியில் தெரியவில்லை.
இந்த விதம் நாட்டின் உள்ளே உட்காந்து கொண்டு ஆயுதம் ஏந்தாது அதே நேரம் நாட்டிற்கு ஆயுதம் ஏந்தும் நக்சல் பயங்கரவாதிகளை விட அதிகம் பாதிப்பை உருவாக்குவதால் தான் இவர்களை அற்பன் நக்சல்கள் என்று அழைக்கிறோம். இவர்கள் நிச்சயம் நாட்டிற்கும், ஒவ்வொரு வீட்டின் கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கும் பெரும் ஆபத்தானவர்கள்.
இந்த விதம் வேசம் போட்டுக் கொண்டு மக்களிடம் போராளிகள் போல் தங்களை உருவகம் செய்து கொண்டு களத்தில் நிற்கும் பலருமே உண்மையில் நோக்கம் நாட்டின் பிரிவினை தான். அதற்காகவே இவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்குப் போராட்டம் தான் சோறு போடுகிறது. இவர்களுக்குக் காலை எழுந்ததுமே சாதாரண மக்களுக்கு வேலைக்குச் செல்வது போல் இந்த வேலை இவர்களுக்கு. இன்று எவனை எங்கே தூண்டிவிடலாம் , எந்த திட்டம் அரசு கொண்டு வர முயல்கிறது அதை எப்படிக் குழப்பலாம் அதை எப்படி மக்களுக்கு எதிரானது என்று தூண்டலாம் என்பது தான் இவர்கள் வேலை. இந்த உண்மையை மாணவர்களுக்கு உணர்த்துவதே இந்த புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.
நாட்டின் மொத்த வருவாயில் முக்கிய பங்களிக்கும் தனியார் பெரும் நிறுவனங்கள் ஆரம்பித்து அரசு பொதுத் துறை நிறுவனங்களான HAL , BSNL, HMT என்று இருக்கும் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வீழ்த்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய குறிக்கோள். ஒரு வீட்டின் வருவாய் மொத்தம் 50 ஆயிரம் என்றால் அதில் 25000 வரை வருமானம் தரும் முக்கிய நபரை வீழ்த்தும் திட்டம் இது. கார்ப்பரேட் எதிர்ப்பு என்று ஒரு முட்டாள்தனத்தை மக்கள் மாணவர்கள் மத்தியில் விதைப்பது மிக மிக எளிது.
இது தமிழகம் மட்டும் அல்ல நாடு முழுவதும் திரிகிறார்கள். அதைத் தமிழக மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும் - சரியான வயதில் உழைத்து நாட்டையும் வீட்டையும் முன்னேற்றிட வேண்டிய வயதில் இந்த விதம் போராளி பின்னால் போராட்டம் என்று திரிந்து 8 , 9 வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்த்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் எதுவுமே செய்யவில்லை அப்படியே அந்த இடத்திலேயே தான் நிற்கிறோம் என்று புரியும் போது ஏற்படும் வலி மிகக் கடினமானது. நான் கம்யூனிஸ்ட் பின்னால் 7 வருடம் திரிந்து திருந்தி அந்த வலியை உணர்ந்தவன் என்பதால் இதைக் கூறுகிறேன்.
மாணவர்களுடைய நல்ல மனதைப் பயன்படுத்து நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தத் துடிக்கும் இந்த கூட்டம் ஒடுக்கப்படவேண்டும். அரசு , நீதி மன்றம் , ஆட்சியர் எவரையும் நம்பவிடாது தாங்கள் சொல்வது மட்டுமே சரி என்று நம்ப வைப்பதில் தான் இந்த அர்பன் நக்சல் கூட்டம் வெற்றி அடைகிறது. அதை எதிர்த்துத் தொடர்ந்து நான் எழுதியும் பேசியும் வருகிறேன். அவற்றின் தொகுப்பு இந்த புத்தகம்.
புத்தகத்தின் பெயர் : நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?
பதிப்பகம்: கிழக்கு
விலை : 300 (முன்பதிவு 200ரூபாய்)
பதிப்பகம்: கிழக்கு
விலை : 300 (முன்பதிவு 200ரூபாய்)
முன்பதிவு செய்ய லிங்க் : https://www.nhm.in/shop/9788184939873.html
Tele : 044-49595818 (மிஸ்டு கால் கொடுக்க மீண்டும் உங்களை அழைப்பார்கள்)
Whatsapp : 95000 45609 (கால் செய்ய வேண்டாம். whatsapp மூலம் செய்தி அனுப்பவும்.)
Email ID : nhm-shop@nhm.in
Whatsapp : 95000 45609 (கால் செய்ய வேண்டாம். whatsapp மூலம் செய்தி அனுப்பவும்.)
Email ID : nhm-shop@nhm.in
அனைத்து மாணவர்களும் இந்த புத்தகத்தில் படித்து - அதில் நான் கூறியுள்ள விவரங்கள் சரியான என்று தேடிப் பார்த்து பின் உண்மையை உணரவேண்டும் என்பது தான் என் வேண்டுகோள்.
-மாரிதாஸ்
0 comments:
கருத்துரையிடுக