பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மார்ச் 27

கண் முன்னே சரியும் திராவிடம் :

Post by Gautham Sekaran
கண் முன்னே சரியும் திராவிடம் :
இது ஈ.வே.ரா மண் என்று மார் தட்டுவோரெல்லாம் முகத்தை மறைத்து வாழும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.
1. காலம் காலமாக ஜாதி பார்த்து தான் தி.மு.க வேட்பாளர்களை நிறுத்தினாலும், இப்போதோ ஒரு படி மேலே போய் கருணாநிதியின் மகளான கனிமொழியை, நாடார் என்கிற காரணத்திற்காகவே தூத்துக்குடியில் நிறுத்தி ஈ.வே.ரா வின் முகத்தில் தி.மு.க சாணி அடித்துள்ளது.
2. சமத்துவ சமதர்ம சகோதரத்துவ சன்மார்க்க, சிறுபான்மை காவலனான தி.மு.க ஒரு இஸ்லாமிய வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. இவர்களை மோடியும் பா.ஜ.க வும் என்ன பாடுபடுத்துகின்றனர் என்பது புரிகிறது.
3. புதிதாக ஒருவர் வந்தால் நம் சிற்றரச சாம்ராஜ்ஜியம் சுக்கு நூறாகி விடும் என்பதை கருணாநிதி மட்டுமா புரிந்து கொண்டார்? துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற எண்ணற்ற பெருந்தலைகள் நன்கு புரிந்து கொண்டு தங்கள் வாரிசுகளை களமிறக்கி, தங்கள் அரசியல் என்னும் தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர்.
4. அண்ணா போன்றோரின் பேச்சை நம்பி வளர்ந்த கூட்டம் இன்றோ, "உதயநிதி சொல்றதை நீங்க அப்படி புரிஞ்சுக்கக்கூடாது. சிலப்பதிகாரத்தில் இதே மாதிரி இளங்கோவடிகளும் ஒரு பாட்டுல..." என்று உதயநிதிக்கெல்லாம் பல்லக்கு தூக்கும் நிலைக்கு அடிபணிந்து போனது. அடுத்து இன்பநிதிக்கு இப்போதே ரசிகர் மன்றம் உருவாக்கி "4 ஆம் கலைஞர்" என்று பெயர் வைக்க எவ்வித கூச்சமுமே கிடையாது இவர்களுக்கு.
5. பெண் சுதந்திரம் என்று காது வரை வாய் கிழிய பேசும் தி.மு.க கொடுத்ததோ 20 இல் 2 மட்டுமே பெண்களுக்கு. அதிலும் ஒருவர் வாரிசு(கனிமொழி). நேற்று முளைத்த நாம் தமிழர் கூட நெஞ்சை நிமிர்த்தி 50% பெண்களுக்கு கொடுத்துள்ளது. இதற்கும் முட்டு கொடுக்க உ.பி க்கள் தயராகத்தான் உள்ளனர். "பெண்களுக்கு 50% இடம் கொடுத்து விட்டா மட்டும் போதுமா. இப்படித்தான் ஒரு முறை கருணாநிதி 1972 இலே" என்று தொடங்கி 3 பக்கங்களுக்கு முட்டு கொடுக்கின்றனர். படிக்கத்தான் சுவாரசியமாக இல்லை.
6. "ஆண்களின் இனிப்பான பேச்சுகளுக்கு பெண்கள் மயங்கி விடுகின்றனர்" என்று ராமசாமி பேத்தி மருத்துவர் ஷாலினி சொல்கிறார். நா.த.க 20 இடங்களில் பெண்களை நிறுத்தியதற்கு இந்த விமர்சனம். இதையே தி.மு.க செய்திருந்தால், "பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் தி.மு.க.இது தான்டா தி.மு.க" என்று வெட்கமே இல்லாமல் முட்டு கொடுப்பார்கள். எளிய பெண்கள் அரசியலில் பங்கெடுத்துவிட்டால் பின்னர் கனிமொழிகள் சோற்றுக்கு என்ன செய்வார்கள் என்கிற பதற்றம் திராவிட அடிமைகளிடம் தெரிகிறது.
6. ஒற்றைத் தேநீருடன் பிரச்சாரம் செய்து வளர்த்த வலுவான இயக்கமோ, இன்று தேர்தலில் போட்டியிட பண பலத்தையும், ஜாதி பலத்தையும் மட்டுமே 100% நம்பி உள்ளது. தொண்டர் பலத்தை 1% கூட நம்பத்தயாரில்லை. தயாநிதி மாறனும், ஜகத்ரட்சகனும் இரவு பகல் பாராமல் மக்களுக்காக பணி செய்ததினால் மட்டுமே வேட்பாளர்கள் ஆகி உள்ளனர் என்று யாரேனும் முட்டு கொடுக்க தயாராகியிருப்பர். சிரித்து விட்டு கடப்போம்.
7. கட்டப்பஞ்சாயத்து, வன்முறை வெறியாட்டங்கள், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், நிலம் கையகப்படுத்துதல், சிற்றரச சாம்ராஜ்யங்கள், கோடிகளை குவித்தல் போன்ற எண்ணற்ற பாம்புகள் திராவிடத்தை மெல்ல மெல்ல விழுங்குவது மனதிற்கு ஆறுதலைத் தருகிறது.
8. அ.தி.மு.க திராவிட கட்சி கிடையாது என்று அவ்வப்போது சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்க்கிறீர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவ்வப்போது நினைவுபடுத்துவதற்கு கோடி நன்றிகள்.
9. தலைவரின் குடும்பத்தினர் ஐயரை வைத்து ஹோமம் செய்வது, தொண்டர்கள் கோவிலில் 60ஆம் கல்யாணம் செய்து கொள்வது, சமாதிக்கு பூமாலை பழமாலைகள் போட்டு பஜனை செய்வது, நல்ல நேரம் பார்த்து பிரச்சாரம் தொடங்குவது, அமாவாசை அன்று வேட்பு மனு தாக்கல் செய்வது, போன்று மெல்ல மெல்ல திராவிடத்தின் சுவடை அவர்களே அழித்துக்கொள்ளும் போது நாம் ஏன் தடுக்க வேண்டும்?
10. இன்று தைரியமாக தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டு ஒரு முதல்வர் தன் பிரச்சாரத்தை துவங்குகிறார். "இந்த தேங்காய் இருந்திருந்தால் 2 பேரின் வீட்டில் சட்னி இருந்திருக்கும்" என்று சொல்ல முடியாத அளவுக்கு இன்றைய திராவிடத்தின் நிலை இருக்கிறது. எதை நீ மூடநம்பிக்கை என்று சொன்னாயோ அதை நீ எதிர்க்க முடியாத நிலை. எந்த கடவுள் சிலையை போட்டுடைத்தாயோ அந்த கடவுளை வழிபடுவதை விமர்சிக்க முடியாத நிலை உனக்கு.
11. முன்னெல்லாம் உ.பி க்கள் முட்டு கொடுப்பது கொஞ்சம் ரசிக்கத்தக்கதாகவும், மனதை மாற்றுவதாகவும் இருக்கும். இப்போதெல்லாம் ரொம்பவே சலித்துவிட்டது. "1964 இலே கலைஞர்" என்று பழைய பல்லவிகளையே பாடுகிறார்கள். நேர விரயம்.
13. சற்றும் இடைவெளி விடாது திராவிடத்திற்கு சொம்பு தூக்கும் வீரமணி, சுப.வீ, தோசை மதிமாறன், நக்கீரன் கோபால் போன்றோரின் பேச்சுக்களில் பதற்றமும் நிறைய தடுமாற்றமும் தெரிகிறது. காரணம், நாம் பதில் கேள்விகளை எழுப்பத் தொடங்கி விட்டோம். அவர்கள் கம்ப ராமாயணத்தில் கேள்வி எழுப்பினால், வால்மீகி ராமயணத்தையே தேடிப்பிடித்துப் படித்து பதிலடி தருகிற இடத்திற்கு வந்துவிட்டோம்.
-----------------------------------
ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. திராவிடம் என்னும் சீட்டுக்கட்டு சரியத் தொடங்கி உள்ளது.
மோடி + பழனிசாமி, திராவிடத்தை வேரோடு பிடுங்கி எறிய களமிறங்கி விட்டனர். தமிழகம், ஆன்மிக மண் என்பதை நிரூபிக்கத் தயாராகிவிட்டனர்.
2019 & 2021 இல் தி.மு.க தோற்றால், 8 ஆம் கலைஞர் வந்தாலும் தி.மு.க வை காப்பாற்ற முடியாது.
மோடியின் பொருளாதார நடவடிக்கைகளில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும், திராவிடத்தை தடம் தெரியாமல் அழிக்க மோடி தேவைப்படுகிறார்.
சபதமேற்போம். 2019 நம் வாக்குகள் பா.ஜ.க+ அ.தி.மு.க் கூட்டணிக்கே என்று. உங்கள் குடும்பத்தினரையும், 4 நண்பர்களையும் மோடிக்கு வாக்களிக்கச் செய்யுங்கள். அது போதும்.
தி.மு.க அழிக்கப்பட வேண்டும். அதற்கு மோடி வேண்டும்.
-- கவுதம் சேகரன், 27 mar 2019

2 comments:

NARAYANAN சொன்னது…

அருமை. இன்னும் நிறைய எழுதுங்கள்.

bandhu சொன்னது…

சில வருடங்களுக்கு பிறகு மறுபடியும் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். சரியாக தொகுத்து எழுதுகிறீர்கள். பற்பல நாட்களுக்குப் பிறகு வெளிச்சம் கண்ணுக்குத் தெரிகிறது. எப்போது வேடிக்கை பார்க்க தானாக கூடும் கூட்டம் குறைந்ததோ, அப்போதே அலங்கார ஆபாச பேச்சில் கூட்டம் கூட்டும் தி மு க போன்ற கட்சிகள் தானாக ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக