பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மார்ச் 26

டீம்க - வெறும் காகிதப்புலி ..!




தமிழச்சி தங்கபாண்டியனின் முகநூலில் தூத்துக்குடி பற்றிய வாக்குபதிவில் ந முத்துராமலிங்கம் எழுதிய பின்னூட்டத்திலிருந்து..
*********************
2014-ல் நடந்த RK நகர் இடைத்தேர்தலில் -
ஜெயலலிதா நின்றார் - அவரை
எதிர்த்து தி.மு.க வேட்பாளரை இறக்கவில்லை -
கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரன் நின்றார் -
அந்தத் தேர்தலில் -
ஜெயலலிதா பெற்ற வாக்குகள் -
1,60,432 - அதாவது 88.43 சதவீதம் -
இப்பொழுது எனது சந்தேகம் எல்லாம் -
அ.தி.மு.க-வின் நேர் எதிரியான தி.மு.க தொண்டர்கள்,
தி.மு.க களம் காணாத நிலையில் -
ஒன்று - வாக்களிக்காமல் இருந்திருக்க வேண்டும் -
அல்லது எதிர்த்து கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்களித்திருக்க வேண்டும் -
ஆனால், ஏன் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தனர்?-
அடுத்து அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் -
ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க வின் சார்பில் சிம்லா முத்துச்சோழன் நின்றார் -
இதில் அவர் பெற்ற வாக்குகள் 57673 -
இதிலும் ஜெயலலிதா 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் -
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடந்த இடைத் தேர்தலில் -
TTV தினகரன் சுயேச்சையாக நின்று நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் -
இந்தத் தேர்தலில் தி.மு.க வின் மருதுகணேஷ் வெறும் 24,000 வாக்குகள் மட்டுமே பெற்று டிபாஸிட்டைப் பரிகொடுத்தார் -
அதாவது, ஜெயலலிதா இருக்கும் பொழுது சிம்லாமுத்துச் சோழன் பெற்ற வாக்குகள் கூட -
தி.மு.கவினால் பெற முடியவில்லை -
இது தான், தமிழகம் முழுவதும் தி.மு.க வின் உண்மையான பலம் -
பணம் கிடைத்தால் தனது சொந்தக் கட்சிக்குக் கூட வாக்களிக்காமல் ஏமாற்றும் கயவர்களைக் கொண்ட கட்சி தி.மு.க-
இந்த லட்சணத்தில் இவர் தமிழக முதல்வராக ஆசைப்படுகிறார் -
அது மட்டுமல்லாமல்-
ஏழு வருடங்களுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் -
நாள்தோறும் தி.மு.க நிர்வாகிகள் தொண்டர்களின் அத்துமீறல்கள், அராஜகங்கள் வேறு வைரலாகி வருகின்றன-
சொந்தக் கட்சி நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டை அடக்கி ஆள வேண்டும் என்று வேறு பேராசை -
கருணாநிதி இருக்கும் பொழுதே மெஜாரிட்டியாக ஆட்சி அமைக்க முடியாத தி.மு.க-
இன்று அழிவின் விளிம்பில் தான் இருக்கிறது -
சாதாரண தெருமுனைக் கூட்டங்களுக்குக் கூட பணம் கொடுத்துக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை ஒரு பக்கம் என்றால் -
ஸ்டாலின் அவர்களின் கோமாளித்தனமான பேச்சுக்களும், நாடகங்களும் வேறு மக்களிடம் கேலிக்கூத்தாகத் தோன்றுகிறது -
போதாக்குறைக்கு ராகுல் ஸ்டாலின் கூட்டணி என்பதை _
மக்கள், மிகப் பெரிய நகைச்சுவையாகத்தான் பார்த்து வருகிறார்கள் -
கடந்த கால நிகழ்வுகளிலிருந்தும் -
நிகழ்கால நடப்பிலிருந்தும் -
நாம் தெரிந்து கொள்ள வேண்டியது -
தி.மு.க ஒன்றும் மிகப் பெரிய வாக்கு வங்கி கொண்ட கட்சி அல்ல -
அதன் தொண்டர்களே கூட சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வாக்களிக்கக் கூடியவர்கள் என்பதே -
ஆனால், இவர்கள் இங்கே -
நாளொரு மேனியும், பொழுதொறு வண்ணமும் தாமரை மலராது, தாமரை மலராது என்று கூறுவது -
அவர்களது பயத்தைக் காட்டுகிறது -
இன்றைய தேதியில் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் கட்சியாக பா.ஜ.க மட்டுமே உள்ளது -
கடந்த வருடம் தந்தி TV எட்டாயிரம் பேரிடம் எடுத்த ஒரு கருத்துக் கணிப்பில் கூட 25% மக்கள் மோடியை விரும்புவதாக வாக்களித்திருந்தனர் -
அதே சதவீதத்தை மொத்த வாக்காளர்களுக்கும் பொருத்திப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் மோடி ஆதரவு மனநிலையில் இருப்பது தெளிவு -
போதுமான வலுவான கூட்டணி அமைந்து விட்ட நிலையில் - -
ஊழல், தி.மு.க. தமிழர் விரோத காங்கிரஸ் நக்சல் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க கூட்டணியை எளிதாகத் தோற்கடிக்கலாம் -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
🕉🕉🕉🕉🕉🕉

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக