பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், பிப்ரவரி 28

பதில் சொல்லலாமே மிஸ்டர் ஸ்டாலின் ...

பன்முகத்தன்மை கொண்ட பாஜக ஆட்சி தொடரக்கூடாது .
இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் .
திமுகத் தலைவர் ஸ்டாலின் .
பன்முகத்தன்மை கொண்ட கட்சி திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் தான் என்பதை மறந்து போய் அறிக்கை விடுகிறீர்கள் ஸ்டாலின் அவர்களே .
மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழர்களை அறுபது ஆண்டுகளாக காவிரி விஷயத்தில் வஞ்சித்து கர்நாடகத்தில் ஆட்சியிலிருந்த
போதும் கள்ளநாடகம் ஆடியது பன்முகத்தன்மை இல்லையா ???
அதனோடு நான் அடிப்பது மாதரி அடிப்பேன் .
நீ அழுவது மாதரி அழு
என்று கூட்டுக் கள்ளாட்டம் போட்டு காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்க அழுத்தம் தராமல் தமிழகத்தை வஞ்சித்த உங்க கட்சி பன்முக வேடங்கள் கொண்டது இல்லையா ???
பொதுவாழ்வில் இருந்த பிரதமரின் மனைவி தான் என்பதை மறந்து
பழி தீர்க்கும் வஞ்சத்தோடு
விதிகளை மீறி பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்திய
இலங்கை அரசாங்கத்திற்கு ராணுவ உதவிகள் செய்து ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்களின் கதையை முடித்த
காங்கிரசை போலி உண்ணாவிரதம் இருந்து மிரட்டி
தமிழர்களின் முதுகில் குத்திய
காங்கிரசும் உங்கள் கட்சியும் தமிழகத்தை வஞ்சித்தது
பன்முகத்தன்மை இல்லையா ???
இந்திய சீன எல்லை
டோக்லான் பதற்றத்தின் போது
இந்தியா சீனாவிற்கு
போர் மூளும் அபாயம்
நேர்ந்த போது
இந்திய அரசிற்கு ஆதரவளிக்காமல்
திருட்டுத்தனமாக சீனத்தலைவர்களை சந்தித்த
காங்கிரஸ் இளவல் ராகுலை
பாஜக அரசு கேள்வி
கேட்ட பிறகு முதலில்
இல்லை என்று மறுத்து
பிறகு ஆமாம் என்று
ஒத்துக் கொண்டதும் ,
பாக்கிஸ்தானிற்கு மணிசங்கரை அனுப்பி மோடியை தோற்கடிக்க எதிரிநாட்டிடம் உதவி கேட்டதும்
எந்தவிதமான பன்முகத்தன்மை என்று ராகுலை கேட்டுச் சொல்லுங்கள் .
வரலாறு காணாத ஊழல்களை செய்த கூட்டணி கட்சிகள் நீங்களிருவரும்
மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சி எனக்கூறி
ராகுல் தேர்தல் நேரத்தில் மட்டுமே கோயில் கோயிலாக ஏறி இந்துமத வேடம் போடுவதும்
கிறுத்துவ இஸ்லாமியராக
மாறி நாடகமாடுவதும் பன்முகத்தன்மை கொண்ட
ஏமாற்றுத்தனமில்லையா ???
இந்துக்களை மட்டுமே ஏசித்திரிந்து
இஸ்லாமிய கிறுத்துவரோடு
ஓட்டுகளுக்காக
கைகுலுக்கி மதவெறியை
தூண்டும் உங்கள் திருவிளையாடல்கள்
எந்த முகத்தை கொண்ட பன்முகத்தன்மை என்பதை
விளக்குவீர்களா
ஸ்டாலின் அவர்களே ????
பொறுங்கள் பொறுங்கள்
நாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை .
இந்துத்துவா வை மட்டுமே எதிர்க்கிறோம் என்று
குள்ள நரிவேஷமிட்ட
பன்முகத்தன்மை கொண்ட பதில் வேண்டாம் .
நாங்கள் இஸ்லாமியர்களை எதிர்க்கவில்லை .
இஸ்லாத்தின் மதத் தீவிரவாதத்தை தான் எதிர்க்கிறோம் என்றும்
கிறுத்துவர்களை எதிர்க்கவில்லை .
அவர்களின் மூட நம்பிக்கைகளையும்
மதமாற்றத்தையும் தான் எதிர்க்கிறோம் என்றும்
பன்முகத்தன்மையோடு அறிக்கை விட்டு அதை உங்கள் அறிக்கையாக காங்கிரசோடு இணைந்து முரசொலியில்
கட்டுரையாக போட முடியுமா உங்களால் ???
இந்திய தமிழக மக்களுக்கு தெரியும் .
யார் பன்முகத்தன்மை வேடத்தில் மதசார்பு பேசி
மதக்கலவரங்களை தூண்டி ஊழலாட்சியை தந்தார்கள் என்று.

விஜயலஷ்மி காளிதாஸ்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக