பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, பிப்ரவரி 2

மீண்டும் தமிழ் பிளாக்கர்..!

வணக்கம், இந்தப்பக்கம் வந்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. #மூஞ்சி புத்தகம் வந்தாலும் வந்தது பிளாக்கர்களை தன்பக்கம் இழுத்துக்கொண்டு போய்விட்டது. இந்த G+ காரனும் கடைய மூடுவதால் மறுபடியும் பிளாக்கில் தான் வந்தாகவேண்டும். எனவே இணைப்பில் உள்ள அனைவரும் மீண்டும் அவரவர்கள் தங்கள் பிளாக் கடைகளை திறக்க வாருங்கள். முன்பே அங்கு இருப்பவர்கள் மற்றும் இப்போது என்னைப்போல மீண்டும் திறப்பவர்கள் எல்லோரும் ஒன்றாய் சந்திக்க எத்தனிக்க வேண்டும் என்று இதன் மூலம் வேண்டுகிறேன்.

அலைபேசி உரையாடலின் போது  திருவாளர்  கிருஷ்ணமூர்த்தி  அவர்களின் வினவளாக வந்த ஒன்றைப்பற்றி குறிப்பிட்டாகவேண்டும். மூஞ்சி புத்தகத்தில், முகநூல் என்று குறிப்பிடாமல் இப்படிச் சொல்வதே சற்று வசதியாக உள்ளது.  மூஞ்சி புத்தகத்தில் நாம் காணும் வீடியோக்களை டவுன் லோட் செய்துவது பற்றி  சிறிது உரையாடினோம். இது  எளிதான ஒன்றுதான். வழக்கமாக காப்பி -பேஸ்ட் போலவே இதுவும்  ஒன்றே. இதற்கு பல வழிகள் கிடைக்கின்றன. நான் பின்பற்றும் முறை ஒன்றை இங்கே சொல்லிவிடுகிறேன்.

https://www.fbdown.net/how-to-download-facebook-videos.php 

இந்த லிங்க் செல்லுங்கள் . அங்கே மூன்று வழிகளில் இந்த டவுன் லோட் செய்யும் முறைகள் சொல்லப்பட்டுள்ளன. 

மேற்கண்ட லிங்க் சென்றால் கேழே உள்ள பக்கம் கிடைக்கும்.

Step 1, Step2, Step3 என வரிசையாக  கூறியுள்ளபடி செய்துவிட்டால் வீடியோ எளிதில் டவுன் லோட் ஆகிவிட  தேவையான இடத்தில் அவைகளை சேமித்து வைத்துக்கொண்டு ,தேவையானபோது அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் . மிக எளிதான வழிமுறைதான்.
டவுன் லோட் ஆகும் முன்பு வீடியோ ஒரு புதிய விண்டோவில் திறந்து தானாகவே ஓடிக்கொண்டிருந்தால் அதன்மீது சுட்டியை வைத்து Right Clik செய்ய,  " Save as "...,,,to  down load video என்று கேட்கும். பெயர் மாற்றம் செய்தோ அல்லது தேவையான இடத்தையோ குறிப்பு சேமித்துக்கொள்ளாம்.

பிளாக்கரில் நாம் அனைவரும் ஒன்று கூடவோம் வாருங்கள். 0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக