பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜனவரி 3


JALLIKATTU-Veeravilaiyattu
முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தங்களது செல்வமான ஆடுமாடுகளைப் பாதுகாத்துவந்தனர். காடுகளில் மாடுகள் மேயும் போது அவற்றைக் காவல் காக்கும் இளைஞர்கள் காலப்போக்கில் மாடுகளைத் தம் கைவலியால் அடக்குவதை விளையாட்டாகச் செய்து வந்தனர். இவ்விளையாட்டில் வெல்லும் இளைஞர்களுக்கு மக்களிடையே பாராட்டும் புகழும் குவியத் தொடங்கியது. இதன்விளைவாக, இவ்விளையாட்டு காலப்போக்கில் மரபாக மாறியது. இதுவே, மஞ்சுவிரட்டு என்ற பெயரில் கொண்டாடப் பெறுகிறது.
இவ்விழாவினில், இளைஞர் காயம் அடைகிறார்கள் என்று கூறித் தடை செய்வது வேறு. இவ்விழாவினை இழித்துரைக்க முன்வருவது வேறு. இவ்விழா தமிழர்களுடைய திறத்தையும் மறத்தையும் காட்டும் விழாவாகவே இருந்தது என்பது வரலாறு கூறும் உண்மை. கலித்தொகை முல்லைக்கலி முழுவதும் இம்மஞ்சுவிரட்டு பற்றியும் இவ்விழாவில் மக்கள் கூட்டம் கூட்டமாகப் பங்குகொள்வது பற்றியும் பெண்களை மணந்து கொள்ள ஆடவர் இவ்விழாவில் காளைகளை அடக்கிக் காட்டுவதும் தமிழ் மரபாக இருந்திருக்கிறது

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக