பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜூலை 6

கவர்ச்சி பித்தலாட்டம்

இடிந்து விழுந்த மௌலி வாக்கம் கட்டிட ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர படம் இது. மனதைக்கவரும் பின்னை இசையும், ஆடம்பரமான அனிமேஷன் படங்களும் பார்ப்பவர்களை பொய்யான ஒரு மாய உலகிற்கே கொண்டு செல்கிறது. நடப்புக்கும் இந்த விளம்பரங்களுக்கும் துளியும் தொடர்பில்லாத நிலையும், அப்படி இருப்பதை இன்னமும் உணர்ந்து கொள்ளாத நாமும் இருக்கும் வரை இது போன்ற கொடுமைகள் நிகழும்தான். தயவு செய்து இதனை மேலும் பகிருங்கள்.

Rajan Nellai fb

சென்னையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் கவர்ச்சி பித்தலாட்டம்..சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளை தோண்டத் தோண்ட அழுகிய நிலையில் பிணங்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக மாங்காடு போலீசார், இந்தக் கட்டடத்தின் (பிரைம் சிருஷ்டி) உரிமையாளர் மதுரையைச் சேர்ந்த மனோகரன் (வயது 60), அவரது மகன் முத்து மற்றும் கட்டிட வடிவமைப்பாளர், என்ஜினீயர் உள்பட 6 பேரை ஜாமீனில் வெளிவர முடியாத படி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில் சிலரைப் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த கட்டிடம் கட்டும் முன்னரே, இதற்கான கவர்ச்சி விளம்பரத்தை அனிமேஷன் மூலம் தயாரித்துவிட்டனர். இந்த கவர்ச்சி விளம்பரத்தை பார்க்கும் போது நமக்கே ஒரு வீடு வாங்க வேண்டும், ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தோன்றுகின்றது. சாதாரண மிட்டாயில் இருந்து மினுமினுக்கும் நகைகள் வரை அனைத்தும் விளம்பர மயமாக மாறிவிட்டது இந்த உலகில். இந்த விளம்பரகளில் பெரும்பாலும் உண்மைகள் கூறப்படுவதில்லை. மாறாக, மக்களை என்ன சொல்லி கவரலாம் என்ற குறிக்கோளுடனே விளம்பரங்களை தயாரிக்கின்றனர். இதற்கு நடிகர், நடிகைகளும் பணத்திற்கு ஆசைப்பட்டு உடந்தையாக உள்ளனர். விளம்பர கட்டுபாட்டு ஆணையமும் இதை கண்டு கொள்வதில்லை.

அது போன்று தான் தற்பொழுது இந்த அடிக்கு மாடி கட்டிட விளம்பரமும் தயாரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் நடுவில் ஒரு அடிக்கு மாடி கட்டிடம். சொகுசு பங்களா., பஞ்சு மெத்தைகள்., பளபளக்கும் சமையல் அறை., குதித்து விளையாட நீச்சல் குளம் என ஏகபோக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடியோவாக காட்டியுள்ளனர். ஆடம்பர வாழ்க்கை வாழ நினைக்கு மனிதர்கள் அனைவரையும் கட்டாயம் வாங்க தூண்டும் ஒரு விளம்பரம் இது.

இந்த வீடியோவை பார்த்தவுடன் மக்களும், கையில் காசு இருந்தால் போதும், வீடு எப்போ ரெடி ஆகும் என்ற ஒரே ஒரு கேள்வியை கேட்டுவிட்டு முன்பதிவு செய்துவிடுகின்றனர். ஆனால், பிளாட்பாரத்தில் 10 ரூபாய்க்கு கைக்குட்டை வாங்கினால் கூட, ஏதே கயிறு இழுக்கும் போட்டிக்கு செல்வது போல், அதை இழு இழு என இழுத்துப்பார்த்து வாங்கும் மக்கள்., ஏன்? கோடி கோடியாய் செலவு செய்யும் போது மட்டும் அவர்கள் மூளை மழுங்கி விடும் காரணம் தான் புரியவில்லை. இந்த கட்டிடம் கட்டிமுடிப்பதற்கு முன்பே இடிந்து விட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், கட்டிடத்தில் வேலை செய்த ஊழியார்கள், முதலாளி வர்க்கத்தின் சுயநலத்தினால் இன்று உயிரை விட்டுள்ளனர்.

இந்த கட்டிட விபத்தை பார்க்கும் போது முருகதாஸ் படமான ரமணா தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இந்த கட்டிடத்தை கட்ட நினைத்த முதலாளி, லட்சம் வாங்கி கொண்டு அனுமதித்த அரசு அதிகாரிகள், தரமற்ற முறையில் பிளான் தயாரித்த இஞ்சினியர் என அந்நியன் படம் போல் ஒரு பெரிய பட்டியலே போடலாம். ஆனால் என்ன சொன்னாலும் எத்தனை விழிப்புணர்வுகள் நடத்தினாலும், மக்கள் மனதில் வெற்றி பெறப்போவது கவர்ச்சி விளம்பரங்கள் மட்டுமே.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக