சின்ன வயதிலிருந்து இந்த ஆங்கில திரைப்படம் பற்றி அவ்வப்போது படித்ததுண்டு. படம் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இரண்டு நாட்கள் விடுமுறையில் ஞாபகம் வர, ஒரே மூச்சில் உட்கார்ந்து பார்த்து ரசித்தேன். இன்றய காலத்தில் இந்தப்படத்தை பார்த்து மகிழ்வதே ஒரு இனிய அனுபவம்.
என்ன படம் என்றுதானே கேள்வி ?
The Sound of Music (1965)
மேல்நாட்டு இசையில் மனம் லயிப்போருக்கு மிகவும் பிடித்துப்போகும்தான். அந்த நாளைய சென்னையில் இந்தியாவின் முதன் முதல் Multiplex சினிமா வாக இருந்து புகழ் பெற்ற Safire திரையரங்கில் இந்த படம் ஓடிகொண்டிருந்த நிகழ்வுகளை பிற்காலங்களில் படித்ததுண்டு.
The Sound of Music was filmed on location in Salzburg, Austria; the state of Bavaria in Germany; and at the 20th Century Fox studios in California, United States. It was photographed in the 70mm Todd-AO format by Ted D. McCord. The film won five Academy Awards including Best Picture and displaced Gone with the Wind as the highest-grossing film of all-time. The cast album was also nominated for a Grammy Award for Album of the Year.
In 2001, the United States Library of Congress selected the film for preservation in the National Film Registry as it was deemed "culturally, historically, or aesthetically significant".
தமிழில் வந்த சாந்தி நிலையம் படத்தினை நிச்சயம் நினைவூட்டும். மின்சார கனவு படத்திலும் இந்த படத்தின் காட்சிகளின் தாக்கம் இருப்பதை அறியலாம். உண்மையில் இதனை 70 mm திரையில் பார்க்க நிச்சயம் பிரமிப்பாய் தான் இருந்திருக்கும். அந்த சந்தர்ப்பம் இனி நமக்கு கிடைக்குமா தெரியவில்லை. ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி நாடுகளின் இயற்கை அழகில் மனம் கொள்ளை போகும். மிகவும் வித்யாசமான ஒரு ஹாலி வுட் திரைப்படம் பாருங்களேன்.
6 comments:
தமிழ் படமே பார்க்க நேரமில்லை ஆங்கிலப் படம் பார்க்க எங்க மாமு டைம் இருக்கு ? அவ்வ்வ்வ்....
நேரமிருப்பின் பார்கிறேன், மின்சார கனவு படத்தில் இதன் தாக்கம் இருந்துச்சுன்னா கதை புரிஞ்சிருச்சு.
வருகைக்கு நன்றி @ நண்டு @நொரண்டு
" ம் " கொட்டுறத விட்டுட்டு நல்லா வாய தொறந்து பேசுங்க வக்கீல் சார் !
நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே !
மின்சார கனவு படத்தில் இதன் தாக்கம் இருந்துச்சுன்னா கதை புரிஞ்சிருச்சு @ MANO நாஞ்சில் மனோ
மின்சார கனவு சில காட்சிகள் (சர்ச் - கன்னிகாஸ்திரி ) இதில் வருவது போலவே இருக்கும் மனோ.
இதனின் தமிழாக்கமே, ஜெமினி கணேசன், காஞ்சனா நடித்த சாந்தி நிலையம் திரைப்படம். ஆங்க்கிலப்படத்தில் வரும் Do, Re, Ma பாட்டு இன்று கேட்டாலும் இனிக்கும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி BABA
கருத்துரையிடுக