பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, அக்டோபர் 7

காங்கிரசும் பாகிஸ்தானும்


இதுவரை இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுடன் நடந்த பயங்கர வாத தாக்குதல்களுக்கு ஆதாரமாக நூற்று கணக்கான சான்றுகள் இந்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகள் எல்லாம் போதாது மேலும் ஆதாரங்கள் வேண்டும் என்றுதான் மதவாத பாகிஸ்தான் அரசும் இன்றுவரை சொல்லிக்கொண்டுள்ளது. 

இந்தியாவை ஆளும் மதவாத காங்கிரஸ் அரசும் ஒன்றும் சளைத்தது அல்ல. இதுவரை வெளிவந்த அணைத்து ஊழல், முறைகேடுகள், சுரண்டல்கள் மற்றும் கொள்ளைகளுக்கு ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் இவைகள் போதாது மேலும் ஆதாரங்கள் வேண்டும் என்று நாடகம் பண்ணுவதே காங்கிரசின் வழக்கமாகிறது.


தான் சொல்வது மட்டுமே உண்மை, அதனை மட்டுமே பிறர் நம்ப வேண்டும் என்று நடக்கும் அடாவடி பாகிஸ்தான் நாடும், காங்கிரசும் ஒன்றுதான். ஒரே மனப்பாங்கு உடையவைதான் போலும். சோனியாவின் வெளிநாட்டு பயண செலவுகள் பற்றி இதுவரை சரியான விளக்கம் இல்லை. கூடவே மருமகன் ராபர்ட்  வதேரா பற்றிய முறைகேடுகளுக்கு பதில் அளிக்கும் ஆர்வத்தில் காங்கிரசில் உள்ள பெரிய கைத்தடிகள் எல்லாம் வெளியில் வந்து கதற ஆரம்பித்துவிட்டனர்.ஒரு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் சொல்கிறார் " நாங்கள் சோனியா காந்திக்காக அணைத்து தியாகங்களும் செய்ய தயார் " 


ராபர்ட் வதேராவுக்கு நம் நாட்டின் அணைத்து விமான நிலையங்களிலும் அவர் போகும் போதும் வரும் போதும் எவ்வித வழக்கமான சோதனைகளும் நடத்த படுவதில்லை என்பது நாடறிந்த ஒன்று. வேறு எந்த ஒரு இந்திய சிவிலியனுக்கும் இது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் தரப்படுமா? அவர் ஒரு தொழில் அதிபர், சோனியாவின் மருமகன். இவைகள் அன்றி வேறு என்ன ?
ஆனால் உண்மையில் நிறைய இருக்கிறது.சோனியாவின் பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டு அவர் சேர்த்த செல்வங்கள், வளங்கள் அனைத்திலும் சோனியாவின் பெண்ணுக்கு 99% பங்கு இருக்கிறதாம்.

அறுபது வருடங்களுக்கு மேல் ஆகியும் நமக்கு  தெளிவான அரசியல் அறிவு என்பது ஏற்படவில்லை. இன்னமும் தனி குடும்ப ஆட்சி, காங்கிரஸ் போன்ற மதவாத,தேச விரோத, மக்கள் விரோத " மத சார்பற்ற " பம்மாத்துக்களையும்  நம்பிக்கொண்டு தூக்கி பிடிக்க நினைப்பது அறிவீனம் அன்றி வேறு என்ன? 2 comments:

வெளங்காதவன்™ சொன்னது…

நீ என்னா வேணா சொல்லு...

குவாட்டரும் கோழி பிரியாணியும்தான் ஜனநாயகம்னு எங்க தாத்தா சொல்லிக் கொடுத்திருக்காரு....

#ஓட்டு ஒண்ணு, ஆயிரம் ரூவா...
...
...
..

...
..

மறந்துடாத...


மறந்தும்....

இருந்துடாத.....

Manickam sattanathan சொன்னது…

அன்புள்ள வெளங்காதவன்™........இது என்னா பேரு..... நம்ம நாட்ட நினைவூட்டும் பேரு!

'' குவாட்டரும் கோழி பிரியாணியும்தான் ஜனநாயகம்னு எங்க தாத்தா சொல்லிக் கொடுத்திருக்காரு....'' இதுக்காவே இன் னுமொரு பதிவு போடுறேன். நம்ம இந்தியகாரங்க ஜீனிலேயே இதற்க்கு ஆன்சர் இருக்கறதா மெத்த படித்தவர்கள் சொல்றாங்க.


வருகைக்கு நன்றி அன்பரே.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக