பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், பிப்ரவரி 20

இது போல நடக்குமா நம் நாட்டில்?




நண்பர்கள் அணைவருக்கும் வணக்கம். பதிவு எழுதி பலமாதங்கள் ஆகிவிட்டது. இன்று மீண்டும் கொஞ்சம் அரிக்க ஆரம்பித்தது. எழுதிவிட்டேன். 

விஷயம் இதுதான் பல மாதங்களாகவே  இங்கு அமீரகத்தில் [United Arab Emirates] அணைத்து பொருட்களும் சிறிது சிறிதாக விலை ஏற்றம் அடைந்து கொண்டிருப்பதை இந் நாட்டு அரசும் அதன் துறை சார்ந்த அமைச்சகங்களும் கவனித்துக்கொண்டிருந்ததை இன்று பத்திரிக்கைகளில் வந்த ஒரு செய்தி நிரூபணமாகிவிட்டது. 

இந் நாட்டு அரசின் பொருளாதார துறையும் அதனுடன் சார்ந்த பிற துறைகளும் ஒரு [வியப்பான ] நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். பெப்சி மற்றும் கொக்க கோலா பானங்கள் நிறப்பி வரும் அலுமினிய கேன் தயாரிப்புகளை உடனடியாக விற்பனை கடைகளின் ஷெல்பில் இருந்து அகற்றும் நடவடிக்கைதான் அது. இந்த குளிர்பானங்கள் இங்கு மிக அதிகமாக அனைவராலும் நுகரப்படுவது மிக சாதாரணம்.

காரணம் இதுதான். இந்த இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் அரசிடம் உத்தரவு பெறாமல். துறை சார்ந்த உத்தரவு பெறாமல் தங்களின் தயாரிப்புக்களின் விலைகளை உயர்த்திவிட்டன. மேலும் கேனின் கொள்ளளவுகளையும் முன்பை விட குறைத்துவிட்டன.

பெப்சியும், கொக்க கோலாவும் ஒரேநேரத்தில் தாங்கள் இது வரை வினியோகித்த கேனின் அளவான 355 ml அளவிலிருந்து 330 ml அளவிற்கு குறைத்தன. அதோடு இல்லாமல் கேன் ஒன்று 1 Dh. [1 Dirham ] என்ற விலையில் இருந்து 1.50 Dh [1.50 Dirham ] ஆக உயர்த்திவிட்டன. ஆனால் கேனின் மீது தங்களின் விலைகளை குறிப்பிடும் சட்ட விதிமுறைகளையும் அலட்சியப்படுத்தி விலைகள் குறிப்பிடாமல் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன. 

இது போன்ற நடைமுறைகள் இங்கு சட்ட மீறல்களாகும். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளில் இருந்தும், பொது மக்களிடமிருந்தும்  சென்ற கண்டனங்களை கருத்தில் கொண்டு இந் நாட்டு அரசு எடுத்த முடிவாக வரும் நாட்களில் சிறிய கேனில் விற்கப்படும் பெப்சி மற்றும் கொக்க கோலா பானங்கள் அணைத்து விற்பனையிலிருந்து அகற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 இந்த இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் நடந்து கொண்ட முறை வியப்பாக உள்ளதாக அரசு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெரும் தொகை லஞ்சமாக கொடுத்து நிறுவனங்கள் தங்களின் சுய நலத்துக்காக காரியங்கள் செய்வது இங்கு நடக்க இயலாது. இது அணைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

ஆனால் நம் நாட்டில் இது போல நடக்குமா என்று யோசித்தேன். நமது அரசாங்கமும், நம் அரசுக்கும், அதன் துறைகளுக்கும் அமைச்சகத்துக்கும் இப்படி ஒரு துணிவு வருமா? அப்படி வந்தாலும் பண மூட்டையால் இவர்களை மிக எளிதாக செயல் இழக்க வைக்க இந்தியாவில் இருக்கும் அணைத்து பன்னாட்டு, உள் நாட்டு நிறுவனங்களுக்கும் அது ஒன்றும் மிகப்பெரிய வேலையே அல்ல. 

 மக்களை பற்றி சிறிதும் எண்ணமே இல்லாமல் தங்களின் சுவிஸ் வங்கி கணக்கை போட்டி போட்டுக்கொண்டு உயர்திகொண்டு,. நாமும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் உளறி ஒப்பாரி வைத்துவிட்டு பின்னர் "ஜனநாயக " கடமையினை செய்துவிட்டதாக உதார்விட்டுகொண்டுதான் இருக்கிறோம். நடைமுறையில் இந்தியா ஒரு ஜன நாயக நாடு இல்லைதான்.








14 comments:

பெயரில்லா சொன்னது…

நடைமுறையில் இந்தியா ஒரு ஜன நாயக நாடு இல்லை தான்...

உண்மை தான்..

ப.கந்தசாமி சொன்னது…

இந்தியாவில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. எப்படி? அரசு தலையிடுதல்.

கோவி.கண்ணன் சொன்னது…

சிங்கப்பூரில் பொருள்களின் விற்பனை விலையை அரசு முடிவு செய்வதில்லை. விற்பனையாளர்கள் தான் முடிவு செய்கிறார்கள், இதன் படி 330மிலி பானம் 70 காசு முதல் 2 வெள்ளிகள் வரை விற்கப்படுகிறது. சுற்றுலா சார்ந்த இடங்களில் 2 வெள்ளி, பேரங்காடிகளில் குளிரூட்டப்பட்ட பானம் 1 வெள்ளி. மொத்தமாக 24 கேன் வாங்கினால் 80 - 90 காசுக்கு கிடைக்கும். விலைக்குறைவான இடங்களில் மக்கள் வாங்க விரும்புகிறார்கள், மக்களை ஈர்க்க நினைக்கும் நிறுவனங்கள் குறைவாக விற்கின்றன.

ஜெய்லானி சொன்னது…

ஒரு வருஷம் முடியப்போகுது ..கவர்மெண்ட் இப்போதான் முழிக்குதோ....!!

வெளங்காதவன்™ சொன்னது…

:-)

பெயரில்லா சொன்னது…

இந்தியாவுல தான் இப்படின்னா அமீரகத்திலும் அதே போல் தான் நடக்குதாண்ணே.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இங்கே ஜனதாக் கட்சி என்ற ஒரு பரிசோதனை முயற்சி எமெர்ஜென்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்ததில் விலைவாசி மிகத் தீவீரமாகக் கண்காணிக்கப் பட்டது. கோக் இங்கே நாட்டாமை செய்ய ஆரம்பித்த தருணங்களில் மொரார்ஜி தேசாய் எடுத்த முடிவுகள், அந்த கம்பனி வாலைச் சுருட்டிக் கொண்டு போக வைத்தன என்பது வரலாறு.

ஆளும் கட்சிக்கு முதுகெலும்பு இருந்தால் இதை ஈசியாகச் சமாளிக்கலாம் என்பது அந்த மிகக் குறுகிய காலமே நீடித்த ஜனதாக் ஆட்சி பரிசோதனையில் இந்தியாவிலும் நிரூபிக்கப்பட்டது.இப்போதும் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம், மறுபடி வர விடமாட்டோம் என்ற ஒரு முடிவை இந்திய அரசியல் கட்சிகள் எடுப்பார்களேயானால், மறுபடி அதே விதத்தில் விலைவாசி உயர்வை மட்டுமல்ல, சீனப் பூச்சாண்டி, அமெரிக்காவுக்கு சலாம்,தீவீரவாதிகள் இஷ்டம் போல இந்தியாவுக்குள் புகுந்து நாசம் செய்வது இப்படி எல்லாவற்றையும் சமாளிக்க முடியும்! தலை நிமிர்ந்து நிற்க முடியும்!

சென்னை பித்தன் சொன்னது…

மேரா பாரத் மகான்!
உங்களிக்கு அடிக்கடி அரிக்க வாழ்த்துகள்!

Madhavan Srinivasagopalan சொன்னது…

What should we do ?

We want a solution.. (not coke/pepsi)..

baleno சொன்னது…

கொக்க கோலா ஒரு கடையில் விற்க்கும் விலையை விட பக்கத்தில் 200 மீற்றர் தள்ளி உள்ள கடையில் குறைந்தது இரண்டு மடங்கான விலையில் விற்பது வெளிநாடுகளில் ஒரு சாதாரண விடயம். மேலதிகமாக பணத்தை கொடுக்க அநியாய கட்டணம் செலுத்த விரும்பாதோர் தங்களுக்கு ஏற்ற விலையில் கொக்க கோலாவை தாரளமாக வேறு கடையில் வாங்க முடியும்.
அமீரகம் அதன் அரசு அப்படி என்ன தான் நல்ல விடயம் இங்கே செய்துள்ளது? அமீரகத்தில் ஆசிய தொலிளாளர்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக கட்யாய வேலை செய்கிறார்கள். மோசமான ஒரு வாழ்க்கை நிலையில் வாழ்கிறார்கள். இப்படியான துன்புறுத்தல்களை அமீரகத்தின் அரசும் அதன் துறை சார்ந்த அமைச்சகங்களும் ஒருபோதும் கவனிப்பதில்லை.கொக்க கோலாவை வைத்து படம் காட்டுகிறார்கள்.

Gemini சொன்னது…

இன்னைக்கு 'கல்ப் ந்யூஸ்' ல வந்த ரெண்டு வரிசெய்தியை வச்சு ஒரு பிளாக் எழுதிட்டீங்களே , பாராட்டுகள்.

Unknown சொன்னது…

அண்ணே ”இந்தியா நடைமுறையில் ஜனநாயக நாடு இல்லை தான்!” - என்னாது போஸ் இறந்துட்டாரா!

ஸ்ரீராம். சொன்னது…

நம் நாட்டில் இதெல்லாம் நடக்க சாத்தியமில்லைதான். உலக நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கும் சில மருந்துகளையே நாம் விற்பனை செய்து உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். இதையெல்லாம் என்ன செய்வார்கள்?

தறுதலை சொன்னது…

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக