பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஏப்ரல் 30

ஊடகங்களின் கேவலங்கள்.






இந்த கேவலத்தை எத்தனை பேர் புரிந்து வைத்துள்ளீர்கள்?

 ///The medias are also responsible for turning scoundrels into ”heroes”.Not only that they also ensure that such so-called heroes come to enjoy a huge fan following. ///





ஒரு சினிமா நடிகனுக்கு உடல் நலக்குறைவு என்றால், அவன் வாந்தி எடுத்தால் உங்களுக்கு ஏன் இத்தனை ஆர்பாட்டம்? ஒரு சினிமா நடிகன் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள ஒருவரை சந்திக்கிறான் என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இப்படி கூப்பாடு போடுகிறீர்கள்? இவர்களைத்தவிர நாட்டில் வெறும் ஒன்றுமே நிகழ்வுகள் இல்லையா? ஒரு நடிகன் தன் ரசிகர் மன்றத்தை கலைதுவிட்டதாக கூறினால் அது மகா பெரிய செய்தி.சினிமாகாரர்கள் என்ன விண்ணில் இருந்து இறங்கிவந்த தேவ தூதர்களா? அவர்கள் மனித பிறவிகள் இல்லையா?  ஆணும் பெண்ணும் கலவியில் இணைந்து இந்த சினிமா காரர்களை பிள்ளைகளாக பெற்றுஎடுக்க வில்லையா? இவர்கள் எல்லாம் என்ன சுயம்புவா? இவர்கள் சாகா வரம் பெற்றுவந்த சிரஞ்சீவிகளா? ஒரு குறிப்பிட்ட நடிகனின் திரைப்படம் வெளிவர போகிறது என்றால் அதற்கு முன்பாகவே திட்டமிட்டு வித விதமான பரபரப்பு செய்திகளை வெளியிட்டு அந்த நடிகனை உச்சந்தலையில் வைத்து ஆடுவது ஏன்? காசு வரும் என்றால் எதையும் செய்வீர்களா? வடக்கில் ஆங்கில தினசரிகளும்,தொலைக்காட்சிகளும் மக்களுக்கு செய்யும் அதே கேடு கெட்ட வியாபார யுக்திகளை அப்படியே இந்த தெற்கு பகுதி ஊடகங்களும் பத்திரிகையும், தொலைக்காட்சிகளும் கொஞ்சமாம் மாறாமல் காப்பி அடித்து காசாக்கி மக்களை சுரண்டி பிழைகின்றீகளே ! இதில் தாங்கவொணாத பெருமைவேறு உங்களுக்கு!  ஹைடெக் சாமியார்களையும், ஹைடெக் விபசாரிகளையும் கொண்டாடி அவர்களை வளர்த்துவிடும் அனைத்து பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடங்களே! நீங்கள் மக்களுக்கு என்ன தருகிறீர்கள் என்பதில் கவனம் வேண்டாமா? உங்கள் சரக்கை அவர்களிடம் காசுக்கு விற்கும் நீங்கள், அவர்கள் உங்கள் சரக்கை என்றுமே வாங்கி அவைகளுக்கு மட்டும் அடிமையாக வேண்டும் என்ற எண்ணம் இன்றி வேறு நல்ல நோக்கம் உண்டா உங்களுக்கு? ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றால் சில தினங்களுக்கு முன்பு அந்த படத்தின் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு விளம்பரங்களாக வருவது இயல்பு. ஆனால் இப்போது வரும் படங்களுக்கு விளம்பர போஸ்டர் வெளியிடுவதே ஏதோ ஒரு நாட்டின் தேசிய விழா போல அல்லவா நடத்துகிறீர்கள்? இது வியாபார யுக்தியாம். பிளாக் எழுபவர்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. பத்திரிக்கை,தொலைக்காட்சிகளின் அதே சின்னத்தனம்,கேவலம்  இவர்களிடமும் உண்டு. வரிந்து வரிந்து சினிமாகாரர்களை பற்றி போற்றி எழுதி எழுதி அவர்களுக்கு " கூஜா " தூக்கும் அல்பங்களும் இங்கு நிறைய இருக்கிறர்கள். சினிமாவை ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ள இந்த அறிவற்றவர்களுக்கு யார் கற்றுத்தருவது?


இன்று மதியம் செய்திகளுக்காக சேனல் மாற்றும் போது சன் டி,வி. யில் எதேச்சையாக ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்சய திருதியை என்ற ஒரு புது மாதிரி வியாபார தந்திரம் பற்றியது. உண்மையில் அது ஒரு சமையல் நிகழ்ச்சியாம். அந்த சமையல் காரர் தான் செய்துகாட்டும் செயல் முறைகளுக்கு இந்த முறை தேர்ந்தெடுத்தது  ஒரு புது கோவில். சாமி சன்னதிக்கு முன்னாள் அவர் செய்யும் பதார்த்தத்தின் பெயர் என்ன தெரியுமா? 

குபேர லட்டு 

அந்தந்த பகுதிகளில் அவரவர்களின் செயல் முறைகள் இருக்கும். தின்பண்டங்களின் வகையும், முறையும் சற்று மாறுபடும் என்பது அனைவருக்கும் தெரியும்தானே. ஆனால் ஒரு வியாபார தந்திரமாக இந்த தங்கம் விற்பவர்களும், டீ. வி . மீடியாக்களும் செய்யும் தகிடு தத்தங்களை தில்லு முல்லுகளை எப்படி மக்களை சென்று அடையும் வண்ணம் இந்த புது வகை உணவு முறைகளையும் கூட தங்களின் வியாபார யுக்தியாக யோசிக்கிறார்கள் பாருங்கள்!

குஞ்சா லாடு, கோதுமை மா லட்டு, ரவா லட்டு, பயந்தம் மா லட்டு என நமக்கு அநேக லட்டு வகைகள் தெரியும். உங்களில் எத்தனை பேர் இதுவரை இந்த குபேர லட்டுவை அறிந்திருப்பீர்கள்? புதிதாக உண்டாக்கப்பட்ட அந்தக்கோவிலின் உள்ளே ஒரு சந்நிதியில் அலங்கரிக்கப்பட்ட குபேரன், லட்சிமி சிலைகள். ஆண்களும் பெண்களும், சுடிதார் கண்மணிகளும், ஜீன்ஸ் டீ ஷர்ட் இளசுகளும் கிழவர்களும், கிழவிகளும் வந்து பய பக்தியுடன் வணங்கி செல்கின்றனர். அந்த சந்நிதிக்கு முன்னாள் இந்த குபேர லட்டு சமையல் காரர் தன் கடையை விரித்து ,குபேர லட்டு செய்முறையை மக்களுக்கு சொல்லித்தந்து அனைவரையும் குபேரர்களாக ஆக்கும் வழிமுறைகளை வீடியோ கேமிராவில் பதிவுசெய்கின்றனர். அங்கு வந்த அத்தனை பெண்மணிகளும் லட்டு உருட்டிதர அவருக்கு உதவுகின்றனர். ஒரு மேஜிக் நிபுணர்போல அந்த சமையல் காரர் அங்கு பெருங்கூட்டமாக அமர்ந்துள்ள பக்த கோடிகளை மயக்குகிறார். அத்தனை பேர்களின் கண்ணும் மனமும் இவரின் பக்கமே. கேஸ் ஸ்டவ் மற்றும் அணைத்து வித பொருட்களுடன் அங்கெ கடை விரித்து செய்முறை விளக்கம் தருகிறாராம். இதுவே நாம் நம் விருப்படி எதுவும் செய்தால் இழுக்காகிவிடும்.கோவில் தர்மத்துக்கு ஆகாதாம்.ஆகம விதிப்படி அப்படி நடக்க கூடாது என்றெல்லாம் பக்க பக்கமாக விலாசிதல்லுவார்கள் இந்த ஆஷாடபூதிகள் எல்லோரும்.


  • ஒரு மதத்தின் (வீணாய் போன) நம்பிக்கை 
  • வழிபாட்டு முறை
  • சாமியின் முன்னாள் நிகழ்வதை அப்படியே ஏற்று வாழ்வதற்கு பழக்கி விடப்பட்ட மக்கள் கூட்டம்
  • தங்க நகைகள் விற்கும் கேரளாக்காரர்களின் வியாபார தந்திரம் 
  • புது சமையல் முறைகள் என்ற லேபில்
  • டி.வி. போன்ற மீடியாகளின் மோகம், தாக்கம்
  • அனைத்திலும் எப்படி கல்லா கட்டுவது என்ற நோக்கம் கொண்ட ஆன்மீக வாதிகள்
  •  புது புது கோவில் உண்டாக்கிய பக்தி வியாபாரிகள் கூட்டம் .

அட்சய திருதியை என்பது குபேர சம்பத்து உடையதாம் அன்று தங்க நகைகள் வாங்கினாலோ, குபேர லட்டு பண்ணி தின்றாலோ நமக்கு வீட்டில் தங்கமும், பணமும், செல்வமும் குவிந்துவிடுமாம்.பொய்யும் புனைசுருட்டும், கட்டுக்கதையும் இவர்களின் வயிற்று பிழைப்பு  என்றாகிவிட்டது.குபேர லட்டு பண்ணி தின்னுங்கள், குபேரர்களாக ஆகுங்கள்!




26 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யப்பா உங்க கோபம், இந்த எழுத்தின் வேகத்தில் தெரியுது.....

பொன் மாலை பொழுது சொன்னது…

//வடை....
MANO நாஞ்சில் மனோ சொன்னது…//


இந்த மாதிரி வந்து "வடை" தின்பவர்களை எல்லாம் பிடித்து "மொட்டை"அடித்தால்தான் சரியா வரும்:))

Unknown சொன்னது…

தலைவரே பகிர்வுக்கு நன்றி!

என்னதான் சொல்லுங்க....தானா மாறுனாத்தான் உண்டு!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பிளாக் எழுபவர்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. பத்திரிக்கை,தொலைக்காட்சிகளின் அதே சின்னத்தனம்,கேவலம் இவர்களிடமும் உண்டு. வரிந்து வரிந்து சினிமாகாரர்களை பற்றி போற்றி எழுதி எழுதி அவர்களுக்கு " கூஜா " தூக்கும் அல்பங்களும் இங்கு நிறைய இருக்கிறர்கள். சினிமாவை ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ள இந்த அறிவற்றவர்களுக்கு யார் கற்றுத்தருவது?///

உங்கள் கோபம நியாயம் ஆனதுதான்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கக்கு - மாணிக்கம் சொன்னது…
//வடை....
MANO நாஞ்சில் மனோ சொன்னது…//


இந்த மாதிரி வந்து "வடை" தின்பவர்களை எல்லாம் பிடித்து "மொட்டை"அடித்தால்தான் சரியா வரும்:))//

அதுக்கும் ஒரு கவிதை எழுதி உங்ககிட்டே மெடல் வாங்கிருவேனே.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//
குபேர லட்டு ///


நாசமாப்போச்சு இப்பிடி வேற கிளம்பிட்டாயிங்களா....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தங்கள் கோவம் பதிவில் தெரிக்கிறது...
என்னச் செய்ய..
எல்லாவற்றிற்கும் ஒரு ஆதாயம்தான் பின்புலமான இருக்கிறது...

Mahan.Thamesh சொன்னது…

இப்படியான செய்திகள் மூலமாக
மக்களை முட்டாளாக்கும் முயற்சியை ஊடகங்கள் செய்கின்றன

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//பொய்யும் புனைசுருட்டுமே இவர்களின் வயிற்ருபிழைப்பு //
சரியா சொன்னீங்க

ராஜ நடராஜன் சொன்னது…

அல்வான்னாலே திருநெல்வேலிதான்...லட்டுன்னாலே குபேர லட்டுதான்!

திருப்பதி லட்டு சைஸ் பார்த்துருக்கீங்களா:)

ஆமா!குஞ்சாமணின்னு பதிவுலகுல பேசிக்கிறாங்க...அதென்ன குஞ்சா லட்டு?

கூடல் பாலா சொன்னது…

தங்கள் சேனல் பிரபலமாகவேண்டும் என்பதற்காக எப்படியெல்லாமோ செய்தி வெளியிடுகின்றன .இதற்கு எந்த ஒரு சேனலும் விதிவிலக்கல்ல ....

ப.கந்தசாமி சொன்னது…

//காசு வரும் என்றால் எதையும் செய்வீர்களா?//

ஆமா, இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?

பெயரில்லா சொன்னது…

தங்களை பிரபலப்படுத்துவதர்க்காக இப்படி பட்ட செய்திகள் போடுவதன் மூலம் மக்கள் எதோ ஒரு வகையில் முட்டாளாக்கப்படுகிரார்கள் என்பதை இந்த (சில )ஊடகங்கள் எப்ப தான் புரிந்துகொள்வார்கள்... உங்கள் ஆதங்கம் நியாயமானதே

பெயரில்லா சொன்னது…

Some People told proudly(Shameless), they are the Fans of MGR, Sivaji,Rajini,Kamal,Vijay...,

Ha Ha Ha.Great joke!

They didn't know their Father's/ Mother's Grand Father/ Mother Name- Whose suffered and restricted their life for these next generation's ( Grand children's) safety by Land,House, Jewels and Money.

These bloody fool fans enjoying that money and all and even they didn't think atleast a year. (Amavasyai-On Thithi day).

But..,
Unknown bloody Actor's film released day.,

they feel like a Family function and spend thousand's of Rupees to purchase the First day tickets( in Block) and go to cinema including all family and friends!!!

What a Shame!!!

Where is our Culture going???

What's the reason for these bullshit activities???

Only brainwash by MEDIA- TV, CINEMA, Newspaper& Magazines and Friends.

All bloody "Tamilians searching their RULER in CINEMA HALLS"- even he is Malayali, Kannadian or North Indian or soon Maybe from SriLanka.

Shame to be a Tamilian!!!

சென்னை பித்தன் சொன்னது…

எண்ணங்கள் இதயத்திலிருந்து வெடித்து வந்திருக்கின்றன!நன்று!

test சொன்னது…

nice post boss! :-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
குட்////


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், கொய்யால நீ பதிவை படிச்சியா படிக்கலையா சொல்லு முதல்ல....???
பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
குட்////


எவளவு அடிச்சாலும் தாங்குறியே மக்கா நீ ரொம்ப நல்லவன்டா ஹே ஹே ஹே ஹே ஹே....

சசிகுமார் சொன்னது…

அண்ணே செருப்புல எதையோ தொட்டு அடிச்ச மாதிரி இருக்கு தல உங்கள் பதிவு. பதிவர்களும் தங்கள் பாணியை மாற்றி கொள்ள வேண்டும்.

வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…

பிரபல பத்திரிக்கைகளில்.. வரவேண்டிய நெத்தியடி தலையங்கம் போன்ற பதிவு. சினிமாக்களை வாழ்வியலுடன் ஒப்பிடும் மூடர்களுக்கு விட்ட சவுக்கடி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சூப்பர் பதிவு தலைவரே, சரியான சாட்டையடி கொடுத்திருக்கீங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…
பிரபல பத்திரிக்கைகளில்.. வரவேண்டிய நெத்தியடி தலையங்கம் போன்ற பதிவு. சினிமாக்களை வாழ்வியலுடன் ஒப்பிடும் மூடர்களுக்கு விட்ட சவுக்கடி!/////

வழிமொழிகிறேன்!

பெயரில்லா சொன்னது…

நீர் நம்ம இனம் தான் ஐயா அதாவது தமிழ் பகுத்தறிவாளன் இனம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆஷாடபூதிகள் எல்லோரும்.

குடந்தை அன்புமணி சொன்னது…

சமீபத்தில் ஒரு சேனலில்... ஒரு சேனல் என்ன ஒரு சேனல் மெகா டீவியில் அதிரடி சமையல் என்று ஒருவர் காட்டுக் கத்தல் கத்தியவாறு செய்வதை சகிக்க முடியவில்லை. ஏதோ ஒருமுறை பார்த்த எனக்கே இப்படி... பாவம் பெண்கள்/ ஆண்கள்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக