எல்லோரும் சேர்ந்து " ஒ "......போடுங்க!
"தொடர்ந்து ஊழல் செய்திகளால் விரக்தியானேன், அதனால் கோபம் கொண்டேன்"
இப்படி கூறுபவர் முன்னாள் ஒலிம்பிக் கமிட்டி சேர்மேன் சுரேஷ் கல்மாடியை டெல்லி பாட்டியாலா இல்லத்தில் இருக்கும் C.B.I. கோர்டுக்கு போலீசார் புடை சூழ விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டபோது செருப்பால் அடித்த மனோஜ் ஷர்மா. தன் பெயரை முதலில் கபில் தாகூர் என்று கூறி இப்போது போலீஸ் விசாரணைக்கு பிறகு தன்னைப்பற்றிய விபரங்களை சொல்கிறார் திருவாளர், மேதகு, மனோஜ் ஷர்மா எனும் நம் சக இந்தியர்.மத்திய பிரதேஷ் குவாலியரை சொந்த ஊராக கொண்ட இவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானவராம். 43 வயதுக்காரர். (இதனை வாசிக்கும் இவரைவிட சின்ன வயது காரர்கள் எல்லாம் கவனிக்கவும்)
உண்மையில் இவர் சென்ற வாரம் டெல்லி வந்துள்ளார்.கிழக்கு டெல்லி பகுதியில் வசிக்கும் தன் தம்பி மற்றும் அம்மாவை இவர்களை பார்த்துவிட்டுப்போக.அப்போதுதான் கல் மாடியை விசாரணைக்கு கொண்டு செல்லும் செய்தியை பார்த்து இவர் சம்பவம் நடந்த C.B.I கோர்ட்டு அமைந்துள்ள பாட்டியாலா ஹவுஸ் பகுதிக்கு விரைந்தார் நம்ம கல்லு மாடியை தாக்க வேண்டும் என்ற ஆத்திரத்துடன். உண்மையில் இவர் கல்லு மாடியை நேரடியாக தாக்கும் எண்ணத்துடன் தான் அங்கு சென்றாலும் சுற்றியுள்ள போலீஸ் பாதுகாப்பு அவரை தடுத்ததால் ஆத்திரம் தாங்காமல் காலில் இருந்த செருப்பை கழட்டி கல்லு மாடியின் மீது வீச மட்டுமே முடிந்தது என்று கவலை படுகிறார்!
நம்ம புது ஹீரோ மனோஜ் ஷர்மா மீது எவ்வித வழக்கும் போடப்படவில்லை, விசாரனைக்குப்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார் என்று மத்திய டெல்லி திலக் மார்க் போலிஸ் நிலையத்திலிருந்து ஒரு போலிஸ் அதிகாரியின் அறிக்கை. நம்ம ஹீரோ மனோஜ் ஷர்மா குவாலியர் கோர்டில் ஒரு வக்கீலாம். ஆனால் அங்கும் இவர் தன் கை வரிசையை காட்டியுள்ளார்.அங்கு டிவிஷனல் magistrate ஒருவரை லஞ்ச ஊழல் புகாரில் தாக்கியதால் அங்குள்ள பார் கவுன்சில் இவரது வக்கீல் உரிமத்தை ரத்து செய்துவிட்டதாம்.
ஆனாலும் இவர் சளைக்கவில்லை அங்கு குவாலியரில் வெளியாகும் "சன்சாத் கர்ஜனை " என்ற பத்திரிக்கையில் பணியாற்றுகிறார்.எனக்கும் கூட நம்ம ஹீரோ மனோஜ் ஷர்மா மாதிரி ஏதாவது பண்ண வேடும் போலத்தான் உள்ளது. ஆனாலும் இந்த வயசில் என் உடம்பு தாங்காது சாமிகளா!
ஆவேசத்துடன் ஓடோடி வந்து , போலீஸ் காரர்களின் உயரத்தை தாண்டி, எம்பி குதித்து கைய உயர்த்தி வீசும் அந்த மனிதரின் கோபம் என்னை அந்த வீடியோவை பலமுறை பார்க்கவைத்தது.
ஆவேசத்துடன் ஓடோடி வந்து , போலீஸ் காரர்களின் உயரத்தை தாண்டி, எம்பி குதித்து கைய உயர்த்தி வீசும் அந்த மனிதரின் கோபம் என்னை அந்த வீடியோவை பலமுறை பார்க்கவைத்தது.
கண்ட கண்ட ஊழல் நாறும், கழிசடைகளின்,பாடாவதிகளின் படங்கள் நெட்டில் கொட்டிகிடக்க நம்ம புது ஹீரோ மனோஜ் ஷர்மாவின் படம் கிடைக்கவில்ல! இனிமேல் தான் வரும் போலும்!
20 comments:
கக்கு அண்ணா ...! எனக்கும் மனோஜ் ஷர்மாவுக்கும் ஒரே வயதுதான்! 56 வயதில், பதிவுலகில் இந்தப்போடுப் போடுறீங்களே...அதுவேப்போதும். யாரையும் , எதுவாலையும் அடிக்க வேண்டாம்!
தலைவரே..... செருப்பு சரியா படலயாமே.....சாணிய சேர்த்து அடிசிருக்கனுமில்லையா!
ஹ்ம்ம் சென்னையில் நீங்க பண்ணி பாருங்க மாணிக்கம். எனக்கு ஆசையா இருக்கு
நம்ம புது ஹீரோ மனோஜ் ஷர்மா மீது எவ்வித கேசும் போடப்படவில்லை, //
ஆச்சர்யமால்லா இருக்கு.. எதுக்கும் கிள்ளி பார்த்துக்கிறேன்..:)
தலைவரே..... செருப்பு சரியா படலயாமே.....சாணிய சேர்த்து அடிசிருக்கனுமில்லையா!//
மாட்டு சாணியா இல்லை மனுஷ சாணியா தல?
எனக்கும் அப்படியெல்லாம் ஒன்றும் எண்ணமில்லை. ஆனால் தேர்தல் சமயங்களில் மட்டுமே நம் அரசியல் வாதிகள் மக்களைக்கண்டு நடுங்குவதாக இந்த ஊடகங்கள் சொல்லும். உண்மையில் எப்போதும் நம்மிடம் இவர்களுக்கு பயமும் அச்சமும் கொஞ்சமாவது இருக்கவேண்டும். அவ்வப்போது இதுபோன்ற மனோஜ் ஷர்மாக்கள் உருவாவது சகஜமே. வருகைக்கு நன்றி M.S.E.R.K.
வருகைக்கு நன்றி விக்கி
// ஹ்ம்ம் சென்னையில் நீங்க பண்ணி பாருங்க மாணிக்கம். எனக்கு ஆசையா இருக்கு//
எல் கே சொன்னது…
உங்களுக்கு என்ன ஆசையா இருக்கு? நான் போலீஸ் காரர்களிடம் வாங்குவதை வாங்குவதை பார்க்கவா? நீங்களும் சென்னையில்தானே இருக்கீங்க?
ஒன்று பாருங்கள். இது நடந்தது தலை நகர் டெல்லியில்.
வருகைக்கு நன்றி
எண்ணங்கள் 13189034291840215795
வருகைக்கு நன்றி டக்கால்டி
செருப்பு வுட்ட மனோஜ் வாழ்க! ;-))
இதே நம்ம ஊருல நடந்திருந்தா போலீஸ் வேணாம் அனைத்து அரசியல் வாதிகளும் ரவுடி தானே இவனுங்களே மிதித்து கொன்னுருப்பானுங்க...
இந்த நாட்ட வல்லரசு ஆக்க நாலு பேரு கிளம்புனா, கக்கு மாதிரி ஆளுங்களுக்கு பொறுக்காதே. என்னடா இது சமூக நீதி காவலர்களுக்கு வந்த சோதனை....
////செருப்பு வுட்ட மனோஜ் வாழ்க! ;-))///
RVS சொன்னது…
மைனரும் நம்ம கூட்டம் தானா!
நன்றி மைனரே!
/// இதே நம்ம ஊருல நடந்திருந்தா போலீஸ் வேணாம் அனைத்து அரசியல் வாதிகளும் ரவுடி தானே இவனுங்களே மிதித்து கொன்னுருப்பானுங்க...///
சசிகுமார் சொன்னது…
உண்மைதான் சசி, நம்ம ஊரில் மட்டும் இதுபோல நடந்தால் சம்பந்தப்பட்ட ஊழல் நபர்களின் "கையாட்கள்" மிதித்தே கொன்றுவிட்டு வழக்கே இல்லாமல் செய்துவிடுவார்கள் . மகா மகா பாவிகள்.
///என்னடா இது சமூக நீதி காவலர்களுக்கு வந்த சோதனை....//
நல்ல கிண்டதான்
வருகைக்கு நன்றி சிவகுமார்
கோர்ட்டு, விசாரணை, தீர்ப்பு என்று காத்திருந்தால் மனோஜுக்கு எண்பது வயதாகி விடும்..! ஏதோ தன்னால் முடிந்த தீர்ப்பை உடனடியாக நிறைவேற்றி விட்டு போய் விட்டார்.... !!
செருப்பு எரிதல் ஒரு பேஷன்.
உடனடி கதாநாயக பிம்பம். ஆனாலும், பொது மக்களின் முழுக் கோபத்தைக் காட்டவேறு வழி?
கடைசி நான்கு படங்களில் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. தனிமரம் தோப்பாகாது. சரிதானே?
இனிமேல் செருப்புக்கு மதிப்பு கூடும்.
கருத்துரையிடுக