பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஏப்ரல் 13

மன நிறைவான தேர்தல்.




என் வயதில் நிறைய பாராளுமன்ற மற்றும் மாநில சட்டசபை தேர்களை பார்த்துவிட்டேன். இந்த முறை மட்டும் மனதில் ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிலவியது மறுக்க முடியாது. நல்ல வேலையாக என் பெயரும் அட்டவணையில் இருந்தது ஆனால் வாக்காளர் அட்டை மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை. சென்றமாதமே இணையத்தில் பார்த்து எங்கள் வீட்டில் உள்ள தகுதியான மூன்று பேரின் பெயர்களையும் அட்டவணையில் இருப்பதை உறுதி செய்துகொண்டேன். வாக்காளர் அட்டைக்கும் விண்ணப்பித்து, அவர்களும் "அது உங்களின் வீடு தேடி வரும் " என்று சொல்லிவிட்டனர். அக்கம் பக்கத்தில் பல பேருக்கு வினியேகம் நடந்தும் எனக்கு வரவில்லை.சென்றவாரமே தேர்தல் ஆணையத்திலிருந்து வந்து அவர்கள் தயாரித்த பூத் ஸ்லிப் தந்துவிட்டு இவைகள் போதும் ஒட்டு போட என்று சொல்லிவிட்டனர். காலையில் குளித்து முடிந்து எட்டு மணிக்கு அருகில் உள்ள பள்ளிக்கு சென்றால் முன்னரே நிறைய பேர்கள் வந்து காத்துக்கொண்டிருந்தனர். துப்பாக்கி ஏந்திய வெளுத்த வட இந்திய போலிஸ் கார்கள்,நம்ம ஊர் போலிஸ்காரர்கள் என்று சற்று வித்தியாசமான சூழல். எவ்வித குழப்பமும் இன்றி வாக்களித்துவிட்டு நிறைவுடன் திரும்பினேன். நிறைய வயது முதிர்ந்தவர்கள், மற்றும் பெண்மணிகள் நிறைய அவரவர்களின் பூத் வரிசைகளில் காத்திருந்தனர்.எல்லோரின் முகத்திலும் ஒரு பெருமிதம் காணப்பட்டது.


சரி இதற்கெல்லாம் காரணம்? நமது இந்திய தேர்தல் ஆணையம்தானே. பல வருடங்களுக்கு முன்பு திரு T.N. சேஷன் அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராய் இருந்தபோது அதுவரை வெளியில் தெரியாமல் அல்லது தெரிந்தும் நடைமுறை படுத்தப்படாமல் ஆணையத்தின் சட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வந்து அவைகளை அமல் படும்போதுதான் அணைத்து இந்திய அளவிலும் அரசியல் பிழைதுகொண்டிருந்தவர்களின் வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்து. நாம் ஊர் மம்மி யும் கூட சேஷன் தங்களுக்கு ஆதரவாக இல்லை என்பதால் இந்தியாவின் ஒரு முக்கிய தன்னாட்சி அமைப்பின் தலைவர் என்ற எண்ணம் கூட இல்லாமல் தம் கட்சி ரௌடிகலான ஆண் பெண்களை கொண்டு அவரை அடித்து விரட்டினார். சென்னையில் அவர் வந்தபோது தங்கியிருந்த ஹோட்டலிலும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சேஷனின் காலத்தில் அணைத்து அரசியல் வாதிகளின் கண்களிலும் விரலைவிட்டு ஆட்டும் தேர்தல் முறை சட்டதிட்டங்களை அமல் படுத்த அனைவரும் இவர் எப்போது போவார் என்று நினைக்க ஆரம்பித்தனர்.பிறகு M.S. கில் , J.M. லிங்டோ , T.S.  கிருஷ்ணமூர்த்தி ,B.B . டண்டன்,N.கோபாலசுவாமி என பலர் பதவியில் இருந்தனர். ஆனால் ஷேன் அளவிற்கு இவர்களிடம் அந்த மனோ வலிமை இல்லாமல் மறுபடியும் அரசியல் பிழைபவர்களின் ஆசைகளுக்கு ஏற்ப எல்லாம் மாறின. தேர்தல்களும் கேளிகூத்துக்களாய் நடந்தன. வந்தாரைய்யா நவீன் சாவ்லா என்று ஒருவர். இவர் நேரிடையாக சோனியாவின்  காங்கிரசின் ஆசிபெற்றவர் என்பதால் இவரின் செயல் பாடுகள் எல்லாம் ஒருதலை பட்சமாக சோனியா காங்கிரசின் பக்கம் ஆதரவாக இருக்குமாறே நடந்துகொண்டு நாடு முழுக்க கேட்ட பெயர் வாங்கிகொண்டு விடை பெற்றார்.

இவருக்கு பிறகு வந்தாரே ஒருவர். ஷஹாபுதீன் யாகூப் குரோஷி!



உண்மையில் இவருக்கு நாம் அனைவரும் நம் வணக்கங்களையும் நன்றியையும் சொல்லியே ஆக வேண்டும்.
இவர் பதவி எற்கும்போதே சொல்லிவிட்டார் தான் எப்படி இந்திய நாட்டின் தேர்கல்களை நடத்த உள்ளதை. சேஷன் காட்டிய வழியில் மீண்டும் இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து நெஞ்சு நிமிர்த்தி செல்ல இவரின் திட்டமிடுதலும், வழிகாட்டுதலும், எவருக்கும் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்ட நடைமுறைகளை வளைக்கவும் தளர்த்தவும் இடம்தராமல் இடம் அளிக்காமல் நேர்மையுடன் செயல் பட வைத்துள்ளார். 

வழக்கமாக தேர்தல் தேதி அறிவித்தவுடன் மக்களுக்கும் தினமும் இரவு பகல் முழுக்க தலைவலி ஆரம்பமாகிவிடும்.வீட்டை விட்டு வெளியில் வந்தால் கண்ணில் படும் இடமெல்லாம் கண்ட கண்ட உருவங்கள் வேட்பாளர் என்ற பெயரில் போஸ்டர்களாகவும் அவர்களின் பெயர்கள் வீதிகளின் இரு புறமும் சுவர்களில் பல வண்ணத்தில் எழுதப்பட்டு , பார்க்கும்போதெல்லாம் வயிற்ரை கலக்கும். பல வண்ண பிளாஸ்டிக் கொடிகளும், உயரமான பிளாக்ஸ் பேனர்களும் கண்ட இடங்களில் வைக்கப்பட்டு பயமுறுத்தும்.போதாது என்று அந்தந்த கட்சிகளின் "கொள்கை" பாடல்கள் நாராசமாய் அங்கங்கே அலறவிட்டு மக்களின் காதுகளை தினமும் கிழிப்பார்கள். தினமும் ஆங்காங்கே போக்குவரத்தை தடுத்து தெருமுனை கூட்டங்கள் என்ற பெயரில் எல்லா கட்சிகளும் அடித்த கொட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துள்ளது.

///எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டசபை தேர்தலை யொட்டி தேர்தல் கமிஷன் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஓட்டுப்பதிவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே வாகன சோதனையை தொடங்கியது. இதனால் பண நடமாட்டம் முடங்கியது. அடுத்த கட்டமாக சமூக விரோதிகளின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சுவர் விளம்பரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் தேர்தல் மோதல்கள் தவிர்க்கப்பட்டன. ஒரு சில சம்பவம் தவிர பெரிய அளவில் வன்முறை இல்லை. தேர்தல் கமிஷன் உள்ளூர் போலீஸ் அதிகாரிகளை நம்பாமல் வெளி மாநில போலீஸ் அதிகாரிகளையும், பார்வையாளர்களையும் நியமித்தது. பாதுகாப்புக்காக வெளி மாநில போலீசாரையும், துணை ராணுவ படையினரையும் கொண்டு வந்து இறக்கியது. இதனால் கட்சிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தேர்தல் கமிஷன் பாரபட்சமின்றி செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வந்ததால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றவர்களை அதிகாரிகள் உடனுக்குடன் சென்று பிடித்தனர். இதனால் மற்ற தேர்தல்களைப் போல் வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட்டது. இதேபோல் இன்று ஓட்டுப்பதிவின் போதும் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். மக்களிடையே ஓட்டுப்போட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இதுவரை ஓட்டுப் போடாதவர்கள் கூட இன்று ஆர்வத்துடன் ஓட்டுப் போடவந்து இருப்பதாக தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் இதுபோல் வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டது.வாக்குச் சாவடிகளில் அலைஅலையாக வந்து மக்கள் ஓட்டுப் போட்டார்கள். பெசன்ட்நகர் தியாஸ் தீபக் பள்ளியில் 6.30 மணிக்கே வாக்காளர்கள் வந்து காத்திருந்தனர். இங்கு தேர்தல் அதிகாரிகள் 7 மணிக்குத்தான் வந்தார்கள். அதற்கு முன்பே கூட்டம் நிற்பதைப் பார்த்து தேர்தல் அதிகாரிகளே பிரமித்துப் போனார்கள். ஓட்டுப்பதிவை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு காமிரா மூலம் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே கண்காணித்தனர். அசம்பாவிதத்தை கண்காணிக்க ஆண் வாக்காளர்கள் ஓட்டுப்போட வருவது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெண் வாக்காளர்கள் ஓட்டுப் போடுவது நேரடியாக ஒளிபரப்பு செய்யாமல் பதிவு செய்யப்பட்டு வந்தது. முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டோ ஒட்டிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருந்தது. அதே போல் போட்டாவுடன் கூடிய பூத்சிலிப்பும் வழங்கப்பட்டது. இதனால் இந்த தேர்தலில் எங்கும் கள்ள ஓட்டுப் புகார் எழவில்லை. ஆண், பெண் வாக்காளர்களிடையே ஏற்பட்ட எழுச்சி காரணமாக ஓட்டுப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 சதவீதம் ஓட்டு பதிவானது. இதே அளவில் ஓட்டுப்பதிவானால் இந்த தேர்தலில் 80 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப்பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரம் செல்லச் செல்ல சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்காளர்கள் கூட்டம் அதிகரித்தது. ஓட்டுச் சாவடிகளில் சாமியானா பந்தல் போடப்பட்டு, குடிநீர் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களிடம் இது போன்ற எழுச்சியை காணமுடிந்தது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கையே இதற்கு காரணம் என்று வாக்காளர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஒட்டுப்போடும்போது வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் நமக்கு ஏன் வம்பு என்று ஓட்டுப்போடாமல் ஒதுங்கி இருந்தவர்கள் எல்லாம் இந்த தேர்தலில் வாக்களிக்க வந்திருப்பதாக கூறினார்கள். ///

யார் வென்றாலும் தோற்றாலும் இந்த தேர்தலில் வென்றுள்ளது 
  ஜனநாயகம் (நம்ம ஊர் டைப்)!!
இவைகளை வழி நடத்தி இந்த தேர்தலை பொதுமக்கள் பாராட்டும் வண்ணம் மேலும் கொண்டு சென்றவர் தமிழக தேர்தல் ஆணைய தலைவர் திரு.பிரவீன் குமார் அவர்களின் பங்கும் மகத்தானது இவர்கள் அனைவரையும் பாராட்டுவதும் நமது கடமை. இனி குரோஷிக்கு பிறகு யார் இந்த பதவிக்கு வந்தாலும் இந்த முறைகளை கைவிடாமல் காத்து கொண்டு செல்லவேண்டும். எந்த அரசியல் அமைப்புக்களின் ஆதிக்கமும் இனி இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் செல்லாது என்ற நிலையே இந்திய ஜன நாயகத்தை ஓரளவாவது காப்பாற்றும்.


24 comments:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முத வெட்டா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

70% வாக்குப்பதிவு

அமைதி அப்பா சொன்னது…

//தமிழக தேர்தல் ஆணைய தலைவர் திரு.பிரவீன் குமார் அவர்களின் பங்கும் மகத்தானது இவர்கள் அனைவரையும் பாராட்டுவதும் நமது கடமை.//

நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

அருள் சொன்னது…

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஓட்டு போட்ட சந்தோஷத்துல சும்மா அட்டகாசமா எழுதி தள்ளியாச்சு.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை மக்கா....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அருள் சொன்னது…

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html

//

அண்ணன்..பல பதிவுகளில்.. இடுக்கையை இட்டிருக்கிறார்..
என்னானு போய் பார்த்தா.. பதில் வரமாட்டிங்குது..

சரி விடுங்க.. தேர்தல்ல ஓட்டுப்போட்டீங்களே...
மை வெச்சாங்களா பாஸ்..ஹி..ஹி

Chitra சொன்னது…

இந்த முறை மட்டும் மனதில் ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிலவியது மறுக்க முடியாது.


.........வந்தே மாதரம்!

சென்னை பித்தன் சொன்னது…

//யார் வென்றாலும் தோற்றாலும் இந்த தேர்தலில் வென்றுள்ளது
(நம்ம ஊர் டைப்) ஜனநாயகம்!//
ஆகா!நல்லாவே சொன்னீங்க!
சென்னையிலா ஓட்டுப் போட்டீங்க?
சொல்லவேயில்லை!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்ல மாற்றம், தொடரவேண்டும்!

raja சொன்னது…

நான் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் ஊழியர்களை பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்

சாமக்கோடங்கி சொன்னது…

யார் வருகிறார்களோ இல்லையோ, மக்கள் மாறுகிறார்கள் என்பதற்கான சாட்சிகள் தான் இவை.. பாராட்டப் பட வேண்டிய விஷயம். இன்னும் பல மாற்றங்கள் வரும் என நம்புவோம்..

வேலன். சொன்னது…

நல்ல மாற்றம்...இன்னும் சில மாற்றங்கள் செய்துவிட்டால் ஆஹா...சூப்பர்தான் போங்கள்.(ஆமாம் உங்களுக்கு தனிவரிசை இருந்ததா...இல்லையா..ஏன் என்றால் சீனியர் சிட்டிசன்களுக்கு தனிவரிசை உண்டு என்று சொன்னார்கள்)
வாழ்கவளமுடன்.
வேலன்.

டக்கால்டி சொன்னது…

நான் அங்க இருந்தப்ப லிஸ்ட்ல என் பேரு இல்ல...இப்ப இருக்காம்...எவன் கள்ள ஓட்டு போட்டானோ? அட போங்க ஜி...

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

குரோஷிஅவர்களின் வளைந்து கொடுக்காத தன்மைதான் இந்த அளவு தேர்தல் நடத்த சாத்தியமானது

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அடுத்து தேர்தல் முடிவு ஆட்சி அமைப்பும் சரியாக இருந்தால் நல்லாயிருக்கும்...

தேர்தல் ஆணையம் மக்கள் மனதில் நிற்கும்..

suvanappiriyan சொன்னது…

அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் தலைவர்களை தொடர்ந்து வருவதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.

மற்றபடி தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்கள்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

//வந்தாரைய்யா நவீன் சாவ்லா என்று ஒருவர். இவர் நேரிடையாக சோனியாவின் காங்கிரசின் ஆசிபெற்றவர் என்பதால் இவரின் செயல் பாடுகள் எல்லாம் ஒருதலை பட்சமாக சோனியா காங்கிரசின் பக்கம் ஆதரவாக இருக்குமாறே நடந்துகொண்டு நாடு முழுக்க கேட்ட பெயர் வாங்கிகொண்டு விடை பெற்றார்.//

இவரு மட்டு இல்லேன்னா. 'பசி' இன்னிக்கு கேபினெட்டு மந்திரி ஆகியிருப்பாரா? ம்ம்.. ஆகி இருப்பாரு.. 'ராஜ்ய சபா'னு ஒண்ணு இருக்குதே..

பெயரில்லா சொன்னது…

நிச்சயமாக பாராட்ட வேண்டும்

Unknown சொன்னது…

இது தொடரவேண்டும் என்பதே அனைவரது ஆசை

Unknown சொன்னது…

நம்பிக்கை பிறக்கிறது சார் வருங்கால இந்தியா நன்றாக இருக்கும் என்று.
நல்லமுறையில் இந்த தேர்தல் நடக்க பாடுபட்ட அனைவரையும் இப்படி ஊடகங்கள் வழியாக அனைவரும் கண்டிப்பாக பாராட்டி உற்சாக படுத்தவேண்டும்.

அருள் சொன்னது…

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

உணவு உலகம் சொன்னது…

நாளைய உலகின் நம்பிக்கைகள்.

மனம் திறந்து... (மதி) சொன்னது…

//சமூக விரோதிகளின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்//

அப்படீன்னா, இனிமேல் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம், அதுவும் ஒரு மாசம் தான், நாம இந்த சமூக விரோதிகள், ரவுடிகள் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியுமா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக