தேர்தல் முடித்து காரசாரமான மோதல்களும் முடிந்து,இனி முடிவுகள் வரும்வரை அவரவர்கள் தாங்கள் எதிர்க்கும் கட்சிகளை இன்னமும் போட்டு அடித்து துவைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். சற்றாவது உருப்படியாக ஏதாவது எழுதலாம் என்றால் இதுதான் கிடைத்தது இப்போது.
உப்பில்லா பண்டம் குப்பையிலே.
உப்பில்லா பண்டம் சப்பென்று இருக்கும்.
இதெல்லாம் அந்த நாள் பழமொழிகள். இந்த "நவீன நாகரிக" உலகில் எல்லாமேதான் மாறிபோய்விட்டதே!
உப்பில்லா பண்டமே உடம்புக்கு நல்லது.
உண்மையில் நாம் அனைவரும் நமக்கு தெரியாமலேயே நம் உடலுக்கு தேவையான அளவை விட மிக அதிக அளவிலேயே உப்பினை சேர்த்துக்கொள்கிறோம். காரணம் நாம் நாக்கின் சுவைக்கு அடிமை.பசிக்கும், உடல் சக்திக்கும் மட்டுமில்லாமல் சுவையாகவும் நம்ம சாப்பிட தூண்டுவது புறக்காரணிகளே.வித விதமான உணவு வகைகள், புதுவிதமான சமையல் முறைகள் எல்லாம் ஊடகங்களில் சக்கைபோடு போடுகின்றன. மேலும் FAST FOOD என்ற ஒரு உணவு முறையும் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது.அறிவியல் சோதனைகளின் படி நம் உடலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லி கிராம் உப்பே போதுமானதாம். ஆனால் நாம் எடுத்துக்கொள்வதோ இதை விட பத்து மடங்காம். 500 மில்லிகிராம் என்பது நம் அடுப்பங்கரையில் இருக்கும் ஒரு டீஷ்பூனில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் இருக்கும்.அதை விட பத்து மடங்கு என்பது சுமார் 5 கிராம் அளவாகும்.உண்மையில் இதை விட அதிகமாகவே நாம் உப்பினை தினந்தோறும் சேர்த்து கொள்கிறோம்.உப்பில்லாமல் நாம் எடுத்துக்கொள்வது
காப்பி, டீ , பால் போன்றவைகள்தான் அன்றி மற்ற அனைத்திலும் நமக்கு உப்பு அவசியமாகிறது. ஆனால் இந்த பழக்கம் நம் இதயத்தின் ஆயுளை குறைத்து நம்ம சீக்கிரம் கொண்டு சேர்த்துவிடும்.
சாதரணமாக நமது சிறுநீரகம் தேவைக்கு அதிகப்படியான உப்பை ரத்தத்திலிருந்து பிரித்து சிறுநீருடன் வெளியேற்றிவிடும்.இதுஒரு அளவுக்குத்தான் . மேலும் அதிகமான உப்பு ரத்தத்தில் இருப்பின் அது நமது இரத்த ஓட்டத்துடன் கலந்துவிடும்.இங்குதான் பாதிப்பே ஆரம்பம். ரத்தத்தில் உள்ள அதிகமான உப்பு தாகத்தை உண்டாக்கும்.தாகம் உணர்த்தால்
நீர் அருந்துகிறோம். அதிகமான் நீர் இத்துடன் சேரும்போது மொத்தமான ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகிறது.நமக்கு வாய்த்த இதயமும் ரத்த ஓட்டம் நடைபொரும் குழாய்களும் வழக்கமானதை விட அதிக அழுத்ததில் உள்ள நீர்மத்தை அதாவது ரத்தத்தை கையாலவேண்டுகிறது.இந்த உயர்ந்த அழுத்தம் சமாளிக்க நமது இதயம் மேலும் அழுத்தம் கொடுத்து இந்த ரத்தை அதனதன் குழாய்களில் செலுத்தி வெளித்தள்ளி உடல் செயல் பாட்டை சீராக்கவேண்டியுள்ளது.
ரத்தத்தில் அதிகப்படியான உப்பின் அளவு என்பது ரத்த ஓட்டத்தின் இயல்பான கொள்ளளவை ( circulatory volume ) விட அதிக கொள்ளளவை ஏற்படுத்தும்.இந்த அதைக் கொள்ளளவை சரி செய்ய ரத்தக்குழாய்களின் சுற்று சுவர்களின் மேல் அழுத்தம் செயல் பட்டு அதனை விரிவடயசெய்யும்.குழாய் சுவர்களில் செயல் படும் இந்த அதிகபடியான அழுத்தம் நாளடைவில் குழாய்களை தடிதுப்போக செய்து உட்புற பாதை சுருங்கும் நிலை உண்டாகிறது. ரத்த அழுத்தமும் அதாவது ரத்தத்தின் கண அளவும் அதிகமாகி , அது செல்லும் குழாய்களின் விட்டமும் இவ்வாறு சுருங்கிவிடுவதால் பாவம், நம் இதயம் மேலும் அதிகமாக வேலை செய்து மேலும் அதிக அழுத்தத்துடன் ரத்தத்தை பம்ப் செய்து உடலின் பல பாகங்களுக்கும் உறுப்புக்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்ல அல்லது அங்கிருந்து கொண்டுவர வேண்டியுள்ளது.
தொடர்ந்து நம்மை அறியாமல் நாம் உணவில் நாவின் சுவை வேண்டி சேர்த்துக்கொள்ளும் தேவையற்ற உப்பு தான் அதை உயர் ரத்த அழுத்தம் ( hypertension ) என்ற நிலைக்கு ஒரு காரணமாகிறது . பதப்படுத்தப்பட்ட அணைத்து உணவுகளிலும் நிச்சயம் அதிகம் உப்பு இருக்கும். அதிக உப்பு சேர்வது 80% இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மூலம்தான் என்பது முடிவுகள் சொல்லும் செய்தி.இயற்கையான , நமது வழக்கமான உணவு முறையுடன் உப்பையும் குறைத்து சாப்பிடும் பழக்கமே இந்த தொல்லைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். ஊறுகாய் என்றாலே நமக்கு நாவில் நீர் ஊரும் .ஆனால் அவைகளில் அடங்கியுள்ள உப்பின் அளவினை தெரிந்து கொண்டால் எவரும் ஊறுகாய் பக்கமே போக மாட்டார்கள். சோடியத்தின் அளவு தேவையை விட அதிகம் இருபது துன்பமே உப்பில்லாத அல்லது ஓரளவு உப்புடன் சேர்த்து சமைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக நல்லவை.பேக்கரி தாரிப்புகளை பெரிதும் தவிர்க்க வேண்டும். என்றாவது என்றால் பரவாயில்லை. வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் என முறை வைத்துக்கொண்டு நிறைய ஹோட்டல்களில் தின்னுவதும் (கேபிள் சங்கர் மாதிரி) :))நாக்கின் சுவைக்காக தின்னுவது பணத்துக்கும் கேடு நம் உடலுக்கும் கேடுதான்.
உப்பை ஒரே அடியாக வேண்டாம் என்று தள்ளுவதும் கூடாது. தேவையான அளவு என்பதே சிறப்பு. நமது தேவை என்ன என்பது தெரிந்துள்ளபோது ஏன் அளவுக்கு அதிகமாக அதனை தின்றுவிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.சாதாரணமாக காய்கறிகள், பழங்களில் வேண்டிய அளவு உப்புகள் இயற்கையாகவே உள்ளன. நெடுங்காலமாக எல்லாவற்றிலும் உப்பிட்டு சமைத்து உண்ணும் அந்த பரம்பரை பழக்கத்தால் நமக்கு உப்பு இன்னமும் வேண்டும் என்ற உணர்வு வருகிறது அன்றி அதிகமான உப்பு நமக்கு தேவை இல்லை.நான் உப்பை குறைத்து வெகு காலமாகிறது. சாப்பிடும் பொழுது உப்பு போதவில்லை என்ற எண்ணமே வருவதில்லை. எப்படி உள்ளதோ அப்படியே சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. சமயங்களில் உப்பு சற்று கூடிப்போனது போல உணர்ந்தால் அவைகளை அப்படியே விட்டுவிடுவேன் சாப்பிடமாட்டேன்.இன்றும் கூட மோர்,தயிர் சாததுக்கெல்லாம் உப்பே சேர்பதில்லை. அதிலும் ஒரு சுவை வந்துவிட்டது.ஊறுகாய்களை தொடவே மாட்டேன்.வாழைபழங்கள் மிகவும் ஏற்றது. அதில் உள்ள பொட்டாசியம் உப்பானது சோடியம் போன்று கேடுகளை செய்வதில்லை. உப்பும் குறைப்பவர்கள் அதிகமாக வாழைபழங்களை சேர்த்து கொள்வது நன்று.
எங்கள் வீட்டில் உப்பு, மிளகாய் மற்றும் எண்ணையின் அளவு சமையலில் அடக்கமாகவே இருக்கும். அப்படியே பழகி விட்டது.நான் சமைத்தாலும் இபடித்தான் இருக்கம்.துபாயில் தனி சமையல் தானே! நான் வைக்கும் சாம்பாருக்கு மோப்பம் பிடித்துவிட்டு நண்பர்கள் ஆளாய் பறப்பார்கள். ஆனால் மறக்காமல் தேவையான உப்பை அள்ளி போட்டுக்கொண்டுதான் எடுதுச்செல்வர்கள்.சென்னையில்,சில மாதங்களுக்கு முன்னாள் தன் தம்பியின் புதிதாய் பிறந்த குழைந்தையை காண என் Bitter Half [ (:)) ] மதுரையில்சென்றுவிட, வீட்டில் சில நாட்கள் நான்தான் சமையல். பிள்ளைகள் வழக்கம் போல சாப்பிடுவார்கள். அவர்கள் ஆசைப்பட்டு கேட்டது காலையில் இட்லிக்கு வடை கறி. அதனை நெட்டில் பார்த்து செய்தும் வைத்தேன்.என் பெரிய பிள்ளை " நீங்கள் செய்த வடைகறியை அருவாள் போட்டு வெட்டித்தான் எடுக்கணும் அப்பா "என்று காலையிலேயே என்னை வாரிவிட்டுதான் போனான்.ரொம்பவும் திக்காக போய்விட்டது.திருவாதிரை களி போல இருந்தால் அவன் தான் என்ன செய்வான்.எனக்கு என் நண்பரை சாப்பிட அழைக்க ஆசை. முதல் நாள் சொல்லிவைத்துவிட்டேன். சாபிட்டு முடித்தபின்னர் இருவரும் வெளியில் செல்ல திட்டம்.
குக்கரில் சூடாக சாதம்,முருகைக்காய், கத்தரிக்காய் போட்டு சாம்பார், உருளைக்கிழங்கு கறி, சிறுகீரை கூட்டு,தக்காளி ரசம், அப்பளம் பொரித்து தயிரும் ரெடி. வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்து சிலபழங்களியும் நறுக்கி ப்ரிஜில் வைத்துவிட்டு தயாராக இருந்தேன்.பிள்ளைகளும் சாபிட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டனர்.மதியம் நண்பர் வந்தார். எல்லாம் தயார். இருவரும் சாப்பிட அமர்ந்தோம்.சகலமும் கொண்டுவந்து வைத்துக்கொண்டு அவருக்கும் பரிமாறினேன்.அனால் அவர் சரியாகவே சாப்பிடவில்லை. கொஞ்சமாக சாம்பார், சாதம் கொஞ்சம் கீரை கூட்டு ,இவைகளை மட்டும் ஏதோ பேருக்கு தின்றார்.என்ன ஆயிற்று என்று கேட்டேன்.என்னை முறைத்து பார்த்துவிட்டு ரசம் மட்டும் தம்ளரில் வாங்கி இருமுறை குடித்தார். வேறு எதையும் தொடவே இல்லை. பேருக்கு சில பழத்துண்டுகளை எடுத்து வாயில் போட்டுகொண்டு என்னைப்பார்த்து கேட்டார்.
// உங்க பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்களோ இந்த வீட்டில் சோறு தின்ன //
என்ன ஆச்சு தங்கம் ? என்று நான் வினவ,
பொய் கோபத்துடன் ,எவண்டா தின்பான் உன் வீடு சாப்பாட்டை? உன் பிள்ளைகள் பாவமடா என்றார் நக்கலாக.
எனக்கு அவர் சரியாக சாப்பிடவே இல்லையே என்ற கவலையில் பழங்களையாவது சாப்பிடச்சொல்லி வற்புறுத்தினேன்.பின்னர் இருவரும் வெளியில் கிளம்பினோம்.
நண்பர் சரியான மாமிச பட்சினி. தினமும் இரண்டு வேலையாவது அவருக்கு சிக்கனும், மீனும், மட்டனும் வேண்டும்.என் வீட்டிலோ சுத்த சைவம். பிள்ளைகளாவது முட்டை சேர்த்துக்கொள்ளட்டும் என்று வாங்கி வந்தால் அப்பனும் பிள்ளையும் அப்படியே வெளியில் நில்லுங்கள்,வாசல் தாண்டி உள்ளே வராதீர்கள் என்னும் ரகம் பிள்ளைகளின் அம்மா.
என்னை வெறுப்பேற்றும் பொருட்டு தினமும் என்னை அவர் கேட்பார்.
///இன்னைக்கு என்ன சாப்பாடு?//
நானும் சலிக்காமல் சொல்லிவிடுவேன்.
சொன்னவுடன் நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம் போல நக்கல் அடிப்பார் .
அது இன்றும் கூட தொடர்கிறது.
53 comments:
vadai
ok vadai for me: i'll read and come
//உப்பை ஒரே அடியாக வேண்டாம் என்று தள்ளுவதும் கூடாது. தேவையான அளவு என்பதே சிறப்பு.//
ஆம், இதுதான் சரி.
நல்ல பதிவு.
//40 வயதுக்கு மேலே உள்ளவர்கள் மட்டும் உள்ளே வாருங்கள்.//
ஏன் நாப்பது வயசுக்கு கீழே உள்ளவங்க வந்தா கண்ணு தெரியாதோ.....
//நண்பர் சரியான மாமிச பட்சினி. தினமும் இரண்டு வேலையாவது அவருக்கு சிக்கனும், மீனும், மட்டனும் வேண்டும்.என் வீட்டிலோ சுத்த சைவம்.//
யோவ் அப்போ நான் உம்மா வீட்டிற்கு வந்தாலும், எனக்கு சைவ சாப்பாடா....ஹே ஹே ஹே ஹே உஷார் ஆகிட்டேன் உங்க வீட்டுக்கு வந்தா வெளியே சாப்புட்டுதான் வருவேன்....நமக்கும் நடப்பன பறப்பன ஊர்வன எல்லாம் வேணுமே....
//நானும் சலிக்காமல் சொல்லிவிடுவேன்.
சொன்னவுடன் நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம் போல நக்கல் அடிப்பார் //
உங்க நண்பர் நல்லாத்தான் சொல்லி இருக்கிறார் ஹே ஹே ஹே ஹே...
சாரி பாஸ்..தலைப்ப பார்க்காம வந்துட்டேன்...கும்மிக்கு நோ சான்ஸா??எஸ்கேப்...
உபயோகமான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .
உப்பு பத்தி சொன்ன எல்லாமே நல்லா இருக்கு. கேபிள் சங்கர்....ஷாரு.
நல்ல பதிவு.. பயனுள்ள பதிவு..
நான் கூட மோர், தயிர் சாதத்துக்கு உப்பு போட்டுக் கொள்ள மாட்டேன்.
காயோடோ, குழம்போடு சேர்த்து சாப்பிடுவேன்.
அதெல்லாம் சரி... இந்த பதிவிற்கும்... , ராஜாபக்ஷேவிற்கும் என்ன தொடர்பு..
அப்படியொரு பின்னூட்டம் இங்கு.. ?
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
vadai //
உப்பு இருந்ததா, இல்லை உப்பில்லா வடையா ?
நாங்கள்லாம் அரிசில மாடுமில்ல சோத்துலயும் உப்புப் போட்டுத் திங்கறவங்க..40க்கு மேலன்னாத் தான குறைக்கணும்..
>>ரைட்டு
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
vadai
இந்த ஓட்ட வட நாராயணனுக்கு எப்படியாவது எங்க போனாலும் வடை கெடைச்சிடுது. ஒருநாளைக்கு மிளகாய் நெறைய போட்டு மிளகாய் வடை பண்ணி வக்கோணம்.
//உப்பை ஒரே அடியாக வேண்டாம் என்று தள்ளுவதும் கூடாது. தேவையான அளவு என்பதே சிறப்பு.//
ஆம், இதுதான் சரி.
--------அமைதி அப்பா சொன்னது…
வருகைக்கு நன்றி அமைதி அப்பா.
///யோவ் அப்போ நான் உம்மா வீட்டிற்கு வந்தாலும், எனக்கு சைவ சாப்பாடா....ஹே ஹே ஹே ஹே உஷார் ஆகிட்டேன் உங்க வீட்டுக்கு வந்தா வெளியே சாப்புட்டுதான் வருவேன்....நமக்கும் நடப்பன பறப்பன ஊர்வன எல்லாம் வேணுமே....///
---------------குண்டு மனோ சொன்னது.
இதுக்கு போயி அலட்டிக்கலாமா ? நல்ல செட்டி நாட்டு உணவகம் எல்லாம் நெறைய இருக்கு. கவலைபடாதீங்க.அங்கெ போயி ஊர்வன, பறப்பன, நடப்பன எல்லாம் ஒரு கட்டு கட்டலாம்.
சாரி பாஸ்..தலைப்ப பார்க்காம வந்துட்டேன்...கும்மிக்கு நோ சான்ஸா??எஸ்கேப்...
மைந்தன் சிவா சொன்னது…
தப்பு சிவா.. கும்மி அடிக்கவேன்றேதான் இந்த தலைப்பே! தெரியுமா கும்மி அடிப்போர் சங்கம் ஒன்று கூட ஆரம்பித்தோம். அதன் கவுரவ தலைவர் நம்ம டாக்டர் கந்தசாமிஅய்யா அவர்கள் என்பது தெரியுமா? முத்து என்ற ஒன்று வந்து கை நோக நோக கும்மி அடிக்கும் .அது காணாபோயி ரொம்ப நாள் ஆச்சு. நம்ம பன்னியத்தான்
கேட்கணும்.
நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
உபயோகமான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .
வருகைக்கு நன்றி சேகர்.
//உப்பு பத்தி சொன்ன எல்லாமே நல்லா இருக்கு. கேபிள் சங்கர்....ஷாரு.//
! சிவகுமார் ! சொன்னது…
கேபிள் ஷங்கர் அவர்களை இங்கு இன்டெர் நெட் என்று ஒன்று வருவதற்கு முன்னமே தெரியும். அவரும் நானும் ஒரே பகுதியில்தான் வசிக்கிறோம். பல மாதங்களுக்கு முன்னர் கூட பார்த்து பேசினோம். அடிகடி சந்திப்பது இல்லை தவிர எங்கள் பகுதியில் டி. வி. கேபிள் இணைப்பும் கூட அவரின் நெட் ஒர்க் தானே!
அவரை இங்கு குறிப்பிட்டது சும்மா நக்கலடிக்க. ப்ளாகரில் தான் சென்று வந்த உணவகங்களை பற்றி சுவை பட எழுதுவாரே அதற்க்கு கிரெடிட்
அதெல்லாம் சரி... இந்த பதிவிற்கும்... , ராஜாபக்ஷேவிற்கும் என்ன தொடர்பு..
அப்படியொரு பின்னூட்டம் இங்கு.. ?
Madhavan Srinivasagopalan சொன்னது…
என்னத்தை சொல்ல? அருள் அவர்கள் பக்கம் எவரும் போவதில்லையாம். அதனால் அவரே எல்லாருடைய பக்கத்திலும் வந்து இணைப்பை கொடுத்துவிட்டு போவார்.
நாங்கள்லாம் அரிசில மாடுமில்ல சோத்துலயும் உப்புப் போட்டுத் திங்கறவங்க..40க்கு மேலன்னாத் தான குறைக்கணும்..
செங்கோவி சொன்னது…
சந்தோசம்.....ஆமாம் ....................கழனில கூட உப்பு போட்டுத்தா குடிபீங்களா?
>>ரைட்டு
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
<<<<<ரைட் ரைட்.....
உப்பு போட்டு தின்றத குறச்சிகிட்டா கோவம் வராதுங்கராங்களே அப்படியா தலைவரே!
ரொம்ப நாள் கழிச்சு வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
உப்புக் கருவாடு ஊற வெச்ச சோறுன்னு பாட்டு எழுதுறாங்களே?
எனக்கு 18 வயசு தான்...இருந்தாலும் படிச்சுட்டேன்...ஹி ஹி
//உப்பு போட்டு தின்றத குறச்சிகிட்டா கோவம் வராதுங்கராங்களே அப்படியா தலைவரே!//
---------------விக்கி
அது உண்மைதான் விக்கி. அதிக உப்பு பிரஷரை தூக்கிவிடும் அதனால் கோபம் அதிகம் வர வாய்புள்ளது.இதனை "ரோஷம்"/"சுரணை" என்றா தப்பாக புரிந்துகொண்ட நமக்கு சொல்லிவிட்டார்கள்.
///எனக்கு 18 வயசு தான்...இருந்தாலும் படிச்சுட்டேன்...ஹி ஹி//
-------டக்கால்டி
எங்கய்யா போனீரு? ஆளையே காணோம்.இந்த பன்னிகூட எங்கயோ ஓடிபோச்சு.
18 வயசுதான் ஆச்சா?? பிச்சிபுடுவேன் பிச்சு.
// உப்புக் கருவாடு ஊற வெச்ச சோறுன்னு பாட்டு எழுதுறாங்களே?//
------டக்கால்டி
உப்புகருவாடு ......அது சினிமா பாட்டுதானே......கேட்டு ,பிடித்தால் ரசிக்கலாம். அதற்கு மேல் ஒன்றுமில்லை.
தலைப்பை பாத்துட்டு நேற்று வரல்ல பாஸ்! 40 + ன்னதும் நான் என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன் பாஸ்! ஹி ஹி! :-)
||பிள்ளைகளாவது முட்டை சேர்த்துக்கொள்ளட்டும் என்று வாங்கி வந்தால் அப்பனும் பிள்ளையும் அப்படியே வெளியில் நில்லுங்கள்,வாசல் தாண்டி உள்ளே வராதீர்கள் என்னும் ரகம் பிள்ளைகளின் அம்மா.||
உங்கள் மனைவி உங்கள் தலைமுறைகளுக்கும் நன்மைகள் செய்கிறார் என்பது மட்டும் உண்மை..
தூய சைவ உணவாளியாக இருப்பதன் பலன்கள் மிக..சாதாரணமாக அதை அசைவா'ளிகள் அறிவது இல்லை.
வருகைக்கு நன்றி ஜீ.
வருகைக்கு நன்றி அறிவன்#11802717200764379909
நிஜம்தான் உப்பை குறைப்பது நல்லது.. எங்க வீட்டில் உப்பு சப்பில்லாமல் தான்..:)
நல்ல பதிவு
Thanks for awarness
எனக்கு இன்னும் நாற்பது ஆகவில்லை.;-) இருந்தாலும் படித்து தெரிந்துகொண்டேன் தல. நன்றி ;-)
ரொம்பச் சரியான பதிவு தலைவரே... உப்பு கிட்டத்தட்ட ஒரு விசம் மாதிரி ஆகிடுச்சு.... உப்பை குறைச்சா ஆயுளே கூடும்.......!
தங்களின் வருகைக்கு நன்றி எண்ணங்கள் 13189034291840215795
வருக்கைக்கு நன்றி இளங்கோ அவர்களே!
//எனக்கு இன்னும் நாற்பது ஆகவில்லை.;-) இருந்தாலும் படித்து தெரிந்துகொண்டேன் //
----------------------------------------------R.V.S.
அதான் எங்களுக்கு தெரியுமே. பாலும் மோரும் இன்னமும் வடியுதே!
உங்கள மைனரேன்னு அழைபதர்க்கு அதுவும் காரனம்தானைய்யா மைனரே !!
//ரொம்பச் சரியான பதிவு தலைவரே... உப்பு கிட்டத்தட்ட ஒரு விசம் மாதிரி ஆகிடுச்சு.... உப்பை குறைச்சா ஆயுளே கூடும்.......!//
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
பன்னிய நெனசுக்கிட்டுத்தான் இந்த இடுகைய போட்டேன். இன்னம் பன்னி வரலேன்னு கவலை.
நம்ம பன்னி வந்தாச்சு:)))
நாங்களும் வருவோமில்ல...
இதயத்தின் நலம் விரும்பும் பதிவுக்கு, இதயம் கனிந்த நன்றிகள்.
தயிர் சோறு உப்பு இல்லாமல் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.
//நாங்களும் வருவோமில்ல...///
பாரத்... பாரதி... சொன்னது…
அதான் எனக்கு தெரியுமே.................................நம்ம பன்னி தனியா வராது. கூட்டமாத்தான் வரும் :)))
வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்.
வருகைக்கு நன்றி FOOD.
தேவையான அளவு என்பதே சிறப்பு. நமது தேவை என்ன என்பது தெரிந்துள்ளபோது ஏன் அளவுக்கு அதிகமாக அதனை தின்றுவிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.//
அள்விற்கு மிஞ்சினால் அழுதமே விஷமாகும்போது உப்பும் விஷமாகி விடும்தானே.
உப்பைத்தின்னவன் தண்ணீருக்குத் தப்பமுடியுமா??
உபயோகமான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .
நல்ல பதிவு. நானும் உப்பை குறைத்து விட்டேன் ( 40 ஆச்சுங்கோ) . 32 வயசு வரைக்கும் ஊர்வன பறப்பன நிற்பன நடப்பன எல்லாம் தின்னேன் .அப்புறம் சுத்தமா நிறுத்தியாச்சு. பையனை முட்டை சாப்பிடச் சொன்னாக் கூட மாட்டேங்கிறான். உறவுக்காரவுக எல்லாம் திட்டுறாக.
உப்பு பெறாத மேட்டர்ன்னு உப்பை நினைச்சது தப்பா போச்சுதே! நான் கொஞ்சம் உப்பு கூட சேர்த்து பழகிவிட்டேன். என்னை உப்பு சரியா இருக்கா என்று கேட்டுவிட்டு வீட்டில் உப்பு சேர்க்க மாட்டார்கள்.
கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுக்கிறேன் கக்கு சார்.. உபயோகமான தகவலுக்கு நன்றி.. திருந்திடுவேன் தலைவரே!
40 வசயுக்கு மேல உள்ளவங்களுக்குன்னு போட்ருக்கீக, அப்ப 4 வருசம் கழிச்சி வந்து படிக்கிறேன்....:)
வருகை தந்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே!
நல்ல பதிவு.
கருத்துரையிடுக