பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, பிப்ரவரி 20

கம்பீரமான குரல் !





பிரபல பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன் மறைத்துவிட்டார். சிலகாலமாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்று பிற்பகலில் அவரின் மறைவுசெய்தி வெளியானது. 
அவரின் குரலில் வெளி வந்த பாடல்கள் மூலம் தமிழர்களின் நினைவில் என்றும் வாழ்வார். அவருக்கும் நம் அஞ்சலிகள். 














37 comments:

Jana சொன்னது…

உண்மையிலேயே துக்கமான ஒரு அடுத்த செய்தி... அந்த ஆயிரம் மலர்களே மலருங்கள்..நினைவுகளும் அந்தக்குரலும் எப்போதும் மனதில்..

எல் கே சொன்னது…

மிக அருமையான மனிதர். அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்

தமிழ் அமுதன் சொன்னது…

மிகுந்த வருத்தங்கள்..!

முதல் மரியாதையில் தன் குரலால் நம் அனைவரின் நெஞ்சிலும் நிறைந்து இருக்கும் அவருக்கு என் இறுதி மரியாதை..!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அவர் பாடல்கள் காலத்தால் என்றும் அழியாது...
எனது கண்ணீர் அஞ்சலி அவருக்கு......

Riyas சொன்னது…

ஒரு அருமையான பாடகர். அனுதாபங்கள்.

முல்லை அமுதன் சொன்னது…

cheythiyaith thanthamaikku nantry.
emathu anchalikal.
mullaiamuthan

Unknown சொன்னது…

பூங்காற்று திரும்புமா?

Unknown சொன்னது…

//முதல் மரியாதையில் தன் குரலால் நம் அனைவரின் நெஞ்சிலும் நிறைந்து இருக்கும் அவருக்கு என் இறுதி மரியாதை..!//

settaikkaran சொன்னது…

ம்..சிலநாட்களாகவே உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாய் வாசித்து மனம் சங்கடப்பட்டது. கம்பீரமான குரல்! அவரது ஆன்மா அமைதியடைவதாக!

Asiya Omar சொன்னது…

நல்ல பாடகரும் நல்ல மனிதரும் கூட,ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆனந்தி.. சொன்னது…

so shocking kakku sir...

GEETHA ACHAL சொன்னது…

அவருடைய ஆன்மா அமைதி அடையட்டும்...மிகவும் நல்ல குரல் கொண்டவர்...அவருடைய பாடல்கள் அருமையாக இருக்கும்...

சென்னை பித்தன் சொன்னது…

முதல் மரியாதைப் பாடல்களை மறக்க முடியுமா?
என் அஞ்சலி.

ஆயிஷா சொன்னது…

ஒரு அருமையான பாடகர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

கம்பீரமான குரல். எத்தனையோ பாடகர்களைத் தன் நிகழ்ச்சிகள் மூலம் வளர்த்திருக்கிறார். 70 வயது இப்போதெல்லாம் வயதாகக் கொள்ள முடியாது. உச்சிக்குச் சென்ற பிறகு அங்கே நிலைக்க முடியாமையே பலருக்கு மன வருத்தத்தைத் தந்து விடுகிறது. ''அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா,
பூங்காற்றுத் திரும்புமா.:(

Unknown சொன்னது…

மலேசியா வாசுதேவன்..
மரணம் மிகக் கவலையை உண்டாக்கியது...அவரின் ரசிகன் நான்..

எஸ்.கே சொன்னது…

அவருக்கும் நம் அஞ்சலிகள்.

பெயரில்லா சொன்னது…

கனத்த இதயத்துடன் அவருக்கு என்ன அஞ்சலிகள்

Unknown சொன்னது…

மறக்க முடியாத பாடகர்

வருந்துகிறேன்

என் அஞ்சலி

goma சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
goma சொன்னது…

அவர் ஆத்மா சாந்தி பெறட்டும்

உணவு உலகம் சொன்னது…

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நினைவில் நிற்கும் பாடல்கள், மறக்க முடியாத பாடகர்......!

எனது அஞ்சலிகளும்....!

மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....

அடி ஆடு பூங்கொடியே....

பொன்மானத்தேடி.....

வா வா வசந்தமே...

பூங்காத்து திரும்புமா....

வெட்டி வேரு வாசம்...

ஆகாய கங்கை....

ஆசை நூறு வகை...

சிவகுமாரன் சொன்னது…

அடடா. என்ன ஒரு அருமையான பாடகர்.
முதல் மரியாதையில் நடிகர் திலகத்துக்கு பாடியது அவரது கிரீடத்தில் பதித்த வைரங்கள்.

மலரின் நினைவுகள் சொன்னது…

இந்தக் கலைஞனுக்கு அஞ்சலி பகிரும் விதமாக கீழ்வரும் இந்தப் பாடல்களைப் கேட்கும் போது இன்னும் இன்னும் இவர் இழப்பின் சோகம் பற்றிக்கொள்கிறது..


அடி ஆடு பூங்கொடியே - காளி
ஆகாய கங்கை - தர்ம யுத்தம்
ஆகாயம் பூமி - சாமந்தி பூ
ஆனந்த தேன் சிந்தும் - மண்வாசனை
ஆயிரம் மலர்களே - நிறம் மாறாத பூக்கள்
என்றென்றும் ஆனந்தமே - கடல் மீன்கள்
எழுதுகிறாள் ஒரு - சரணாலயம்
ஹே மைனா - மாவீரன்
இந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்
கட்டி வெச்சுக்கோ எந்தன் - என் ஜீவன் பாடுது
கோடைகால காற்றே - பன்னீர் புஷ்பங்கள்
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு - நெற்றிகண்
நீலவேணி அம்மா நீலவேணி - சாமி போட்ட முடிச்சு
பாட்டு இங்கே - பூவிழி வாசலிலே
பனிவிழும் பூ நிலவில் -
பருவ காலங்களின் - மூடு பனி
பட்டுவண்ண ரோசாவாம் - கன்னி பருவத்திலே
பட்டுவண்ண சேலைக்காரி - எங்கேயோ கேட்ட குரல்
பேர் வெச்சாலும் - மைகேல் மதன காம ராஜன்
பூவே இளைய பூவே (எனக்குத்தானே) - கோழி கூவுது
பொத்துகிட்டு ஊத்துதடி - பாயும் புலி
சரியோ சரியோ நான் காதல் - என் கிட்ட மோதாதே
சிங்காரி ப்யாரி - அதிசய பிறவி
தண்ணி கருத்திருக்கு - இளமை ஊஞ்சலாடுகிறது
வா வா வசந்தமே - புது கவிதை
வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்
ஏ ராசாத்தி ரோசா பூ - என் உயிர் தோழன்
காதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள்
பூங்காத்து திரும்புமா - முதல் மரியாதை

மாணவன் சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்.

வேலன். சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்.

RVS சொன்னது…

உங்களோட நானும் அஞ்சலியில் கலத்துக்கறேன். ;-(
அற்புதமான குரல்வளம் மிக்க பாடகர்.

சசிகுமார் சொன்னது…

அவரை பிரிந்து தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

நல்லதொரு - குடும்ப தலைவர், பாடகர், மனிதாபிமானி, நடிகர் .....

ஸ்ரீராம். சொன்னது…

எங்கள் அஞ்சலிகளும். மலர்வண்ணன் அழகிய லிஸ்ட்டே தந்துள்ளார். சுகம் சுகமே நான் போட்ட சவால் பாடல் உட்பட இன்னும் பலப்பல இனிமையான பாடல்களை தந்தவர். மறைந்தும் மறையாப் புகழ் தருபவை அவர் பாடல்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் குடந்தை கல்லூரி நாட்களில் இளையராஜா, பாரதிராஜா, கவுண்டமணி என்று தமிழ் திரையில் ஒரு பெரிய திருப்பமே நிகழ்ந்தபோதுதான் மலேஷியா வாசுதேவனும் வந்தார். அவரின் முதல் பாடலிலேயே அனைவரையும் கவர்ந்தார். கல்லூரி ஆண்டுவிழாவில் "ஆட்டுக்குட்டி முட்டை இட்டு " பாடலை ஒருமாணவன் வாசுதேவனைபோலவும், ஜானகி போலவும் மாற்றி மாற்றி பாடி அரங்கத்தை அதிரவைத்தார். முன் வரிசையில் அமர்திருந்த அணைத்து துறை பேராசிரியர்களும் மீண்டும் மீண்டும் கேட்டு பாடச்சொல்லி ரசித்தனர். இன்று கூட இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் வாசுதேவன் பாடிய
பாடல்கள் வந்துவிடும். அண்ணாருக்கு என் நினைவுகள் மூலம் அஞ்சலி செய்கிறேன்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அவரது பாடல்கள் இன்னும் ஒலிக்கின்றன...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டைமிங்க் அஞ்சலி போஸ்ட்

பெயரில்லா சொன்னது…

மறக்க ,முடியாத குரலுக்கு சொந்தக்காரர்

பாலா சொன்னது…

கேட்டதும் அதிர்ந்து போய்விட்டேன். அவரது குரல் தனித்தன்மையானது. வருத்தங்கள்

ஸாதிகா சொன்னது…

சிகப்பு ரோஜாக்களில் அவர் பாடிய “இந்த மின்மினிக்கு” பாடலை மறக்கவே முடியாது.அன்னாரின் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை கொடுப்பானாக.அவர் ஆத்மா சாந்தி அடைய [பிரார்த்தனைகள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக