பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜனவரி 26

ஊது குழல்


ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை பற்றி யார் பேசுகிறார் பாருங்கள்.



2007  ஆம் வருடம் ஜூன் மாதம் 22 ஆம் தேதி :
ரஜ்னி பாடீல் ஜல்கானில் உள்ள ஒரு கலூரியில் மராட்டிய மொழி பேராசிரியர்.இவரின் கணவர் விஷ்ரம் பாட்டில் ஒரு காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குள்ளவர்.இவர் G.N. பாட்டில் என்பரால் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலையாளியை சட்டத்தின் பிடியிலிருந்து காத்து வருபவர் அவரின் சகோதரி .பிரதிபா பாட்டில்.இந்திய நாட்டின் முதல் பிரஜை எனப்படும் ஜனாதிபதி.


1991-1996 இந்த கால கட்டங்களில் பிரதிபா பாட்டில் அமராவதி யின் எம் பி. ஆக இருந்தார். அப்போது 36 லட்சம் ரூபாய்கள் இவரின் MPLADS திட்டத்திலிருந்து  தன் கணவர் தேவிசிங் ஷெகாவத் தலைவராக இருக்கும் ஒரு தர்ம ஸ்தாபனத்திற்கு மாற்றப்பட்டது. அரசின் சட்ட திட்டங்களுக்கு எதிரான செயல் எந்த ஒரு இந்திய எம். பி. யும் தங்கள் தொகுதி வளர்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து தங்களின் உறவு முறையில் எவரின் தலைமையிலும் உள்ள தர்ம ஸ்தாபனத்திற்கும் பணம் தருவது தடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரம்பு மீறிய துஷ்பிரயோகமான செயலாகும்.


கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று இவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில வருடங்களில் அந்த நிறுவனம் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி ,வங்கியில் இருந்து கடனாக பெற்ற 17.5 கோடி ரூபாய் யை திரும்ப செலுத்த தவறியது. ராஜஸ்தான் மாநில கவர்னராக இவர் பதவி பெரும் முன்னாள் வரை இவர் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையின் டைரக்டராக இருந்தார்.


பெண்களின் முன்னேற்றத்துக்கென 1973 இல் இவர் பெயரிலேயே பிரதிபா மகிலா சகாகரி பேங்க் என்று தொடங்கப்பட்டு. 2003 ஆம் ஆண்டில் நிர்வாக குளறுபடிகள், பண மோடிகள் போன்றவற்றால் இந்த வங்கியின் உரிமம் இந்திய ரிசர்வ் வங்கியினால் தள்ளுபடி செய்யப்பட்டது.பிரதிபா பாட்டில், இவர் மற்றொரு ஊழல் திலகம் சரத் பாவரின் NCP தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்காக,அவர்களின் பிரதி நிதியாக ஜனாதிபதியாக அமர்த்தபட்டார்.காங்கிரஸ் தலைமைக்கு இது போன்ற நபர்களே தேவைபடுவதால் முன்னால் கிரிமினல்கள் அனைவரும் நாட்டின் "உயர்ந்த " பதவிகளில் மிக எளிதில் அமர்தபடுகின்றனர். அவர்களும் காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நன்றியுடன் நடந்து கொள்கிறார்கள். ஊழலும் முறைகேடுகளும் தேச துரோகமும் வாழ்கை முறையாக கொண்டவர்களுக்கு இது போன்ற நபர்களே தேவைபடுவார்கள். அதனால்தான் டாக்டர் அப்துல் கலாமை இவர்கள் மறுமுறை கொண்டுவர விரும்பவில்லை.

இனம் இனத்தையே சேரும் என்பது போல U P A என்ற பெயரில் கூட்டுக்கொள்ளை நடத்தும் நம்ம ஊர் ஊழல் மோசடி போர்வழிகளும் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஊழல் திலகமாக இருந்த இந்த அம்மணியைதான் குடியரசு தலைவராக வரவேண்டுமென தேர்ந்தெடுத்ததில் வியப்பு ஒன்றுமில்லை. இவர்கள் தான் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிராக கத்தி கத்தி கதறி அவர்களுக்கு தொண்டையில் ரணமாகியுள்ளது. இந்த மொம்மை பிரதமரும், பொம்மை ஜனாதிபதியும் காங்கிரஸ் தலைமையின் முன்னாள் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் அவலம் உலக பிரசித்தம். 


 பிரதிபா பாட்டில் ஒரு பெண்மணி என்பதில் மகிழ்ச்சிதான். பெண்களின் தலைமை இந்தியாவில் புதிது அல்ல. நல்ல விஷயமே. ஆனால் இந்த அம்மாவிற்கு என்ன என்ன தகுதிகள் இருந்தன இந்த நாட்டின் குடியரசு தலைவராக வருவதற்கு? கலாம் போல படித்தவரா? அல்லது ஊழல் முறைகேடுகள் குற்றம் இல்லாதவரா? 


வெறும் அரசுகளின் சடங்கிற்கும், வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவும், இந்திய சிறப்பு விமானபடை விமானத்தில் குடும்பங்களுடன் நாட்டு மக்களின் வரிபணத்தில் உலகம் சுற்றவும், கோவா போன்ற கடற்கரைகளிலும் உலகின் பிற இடங்களிலும் குடும்ப பட்டாளத்துடன் விடுமுறையை அனுபவிக்கவும் ,தேசிய விருதுகளை தருவதற்கும் எல்லாவற்றுக்கும் மேலாக தன் கணவர், பிள்ளைகள், சகோதரர் களின் தொழில் வியாபார முன்னேற்றத்துக்கும் பெரிது பயன்படுகிறது. 


சோனியாவின் ஊது குழலாக மாறி,இவர் ரேடியோவிலும் டி. வி யிலும் பேசும் வெறும் சடங்குத்தனமான பேச்சை கேட்டால் மேல்படி எண்ணங்கள்தான் வருகிறது.மும்பையில்,புனேயில் யாரும் நண்பர்கள், உறவினர்கள். அவர்களிடம் கேளுங்கள் சரத் பாவர். மற்றும் பிரதீபா பாட்டில் போன்றவர்களை பற்றி . 

Please, visit the followings too.








23 comments:

சக்தி கல்வி மையம் சொன்னது…

Nice,
குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்பவர்கள் இதையும் கொஞ்சம் படிங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஒன்றும் சொல்வதற்கில்லை அண்ணே...எப்படி இருந்தாலும் இது நமது நாடு, நம் தேசம், நான் சாகப்போகிற பூமி.
இன்றைய சில அரசியல்வாதிகளால் நம் நாடு அசிங்கப்பட்டாலும் ஓரு பொது ஜனங்களின் ஒருவனாக( Common man)அனைத்தையும் சகித்துகொண்டு,
குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம்.

எல் கே சொன்னது…

நாடு நல்ல நாடுதான். நடுவில் மக்கள் சிந்திக்கும் திறனை இழந்ததால் வந்த அனர்த்தங்கள் இவை

சென்னை பித்தன் சொன்னது…

//இந்த அம்மாவிற்கு என்ன என்ன தகுதிகள் இருந்தன இந்த நாட்டின் குடியரசு தலைவராக வருவதற்கு? //
ஆளும் கட்சிக்கு வேண்டியவர் என்ற ஒரு தகுதி போதாதா?அதுதானே இங்கு வழக்கமாக நடை பெறுகிறது!
மேரா பாரத் மஹான்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் அம்மம்மா ஊழல்.........போங்கடா கொன்னியா......

மைதீன் சொன்னது…

ஊழல் செய்வதில் சாதனைகள் புரிந்து கொண்டிருகிறது காங்கிரஸ் அரசு. நேர்மையானவர்களை கொண்டுவந்தால் அதெல்லாம் நடக்குமா?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

present sir

Madhavan Srinivasagopalan சொன்னது…

இதத்தான் நா அப்பவே சொன்னேன்.. (வி.கே.ராமசாமி அருணாசலம் படத்துல சொல்லிட்டாரே !)
நா சொல்லுறதுக்கு வேறென்ன இருக்கு.. அதாம் நம்மெல்லாருக்கும் தெரியுமே..

Jana சொன்னது…

உண்மைதான். குடியரசு என்றால் என்ன என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து, தாங்கள் ராணிகளோ, பரம்பரை மன்னர்களோ அல்ல மக்களின் சேவகர்கள் என்பதை திரும்ப உணர்ந்து, ஊழல்கள் அற்ற புதிய தேசம் உருவாகட்டும்.
ஜெய் ஹிந்த்

RVS சொன்னது…

நாட்டு நலனில் அக்கறை உள்ள பதிவு.. நன்றாக இருக்கிறது மாணிக்கம். ;-)

ப.கந்தசாமி சொன்னது…

அக்கிரமம்

test சொன்னது…

//ஆனால் இந்த அம்மாவிற்கு என்ன என்ன தகுதிகள் இருந்தன இந்த நாட்டின் குடியரசு தலைவராக வருவதற்கு? கலாம் போல படித்தவரா? அல்லது ஊழல் முறைகேடுகள் குற்றம் இல்லாதவரா?//

நம்ம ஐயா, பெரியம்மாவிற்கு பிடிச்சிருந்ததே...அது போதாதா?

Unknown சொன்னது…

//இந்த அம்மாவிற்கு என்ன என்ன தகுதிகள் இருந்தன இந்த நாட்டின் குடியரசு தலைவராக வருவதற்கு? கலாம் போல படித்தவரா? அல்லது ஊழல் முறைகேடுகள் குற்றம் இல்லாதவரா? //


திட்டுவதற்கு வாய் துடிக்கிறது.. ஜனநாயகம் தடுக்கிறது..

bandhu சொன்னது…

மிக தரமான பதிவு. கலக்குகிறீர்கள்.

இது போன்ற அரசியல் வியாதிகள் நம் நாட்டின் தலைவர்கள் என்று சொல்பதற்கே வெட்கமாக உள்ளது!

Philosophy Prabhakaran சொன்னது…

உங்களுடைய கோபத்தை அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்... நீங்கள் இணைப்பு கொடுத்திருக்கும் கே.ஆர்.பி பதிவு ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவு... அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன... அந்த இணைப்பை கொடுத்ததற்கு நன்றிகள்...

சுந்தரா சொன்னது…

அவங்கவங்க பங்குக்கு சுருட்டிக்கிறதுதான் அரசியல்ன்னு ஆகிப்போச்சு. நாம என்னத்த சொல்ல?

ஸ்ரீராம். சொன்னது…

இவர்களுக்கு கிடைக்கும் ஆட்கள் எல்லோரும் இப்படிதான் இருப்பார்கள் போல...தாமஸ் போல..கூட்டணி சாகசங்களிலும், வோட்டுப் போட வராத படித்த ஜனங்களின் புண்ணியத்திலும் இவர்கள் மறுபடி மறுபடி ஆட்சிக்கு வருவது ஜனநாயக கேலிக் கூத்து.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அருமையான பதிவு.......

Unknown சொன்னது…

கலாம வரவெச்சது பி ஜே பி யோட அறிவாளித்தனம், அவர தொடர்ந்து வர விடாம பண்ணது காங்கிரசின் கொள்ளைத்தனம்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

அரசியலுக்கு வருவதே காசு பாக்கத்தான்னு ஆகிப்போச்சு. நல்லாவே வழி காட்டுராங்க.

Asiya Omar சொன்னது…

சிந்த்திக்க தூண்டிய பகிர்வு.

சிவகுமாரன் சொன்னது…

அப்துல்கலாமின் கால் தூசிக்கு ஆவார்களா இவர்களெல்லாம் ?.
இந்த தேசத்துக்குப் பிடித்த கேடு இவரெல்லாம் தேசத்தின் முதல் குடிமகளானது

சிவகுமாரன் சொன்னது…

அப்துல்கலாமின் கால் தூசிக்கு ஆவார்களா இவர்களெல்லாம் ?.
இந்த தேசத்துக்குப் பிடித்த கேடு இவரெல்லாம் தேசத்தின் முதல் குடிமகளானது

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக