பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜனவரி 21

அப்பாவுக்கு!


மீள் பதிவு. 
மீண்டும் துபாய் நண்பர் முகமத் காலித் இடமிருந்து


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...



முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...





அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது






உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...






கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
---------
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?



லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்..


.

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?



எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?



சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு






நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..





அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...


வெறும் காமமும்,கோபமும், வெறுப்பும், சண்டையும்,பகையும்,  ஆட்டமும், பாட்டமும், திமிறும், அகந்தையுமா வாழ்கை? 

அன்பை தருவதும் பெறுவதும்தான்  அது



.

47 comments:

R. Gopi சொன்னது…

நல்ல இடுகை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

திருப்பித் திருப்பி படித்தேன் அண்ணே, நன்றி!

பொன் மாலை பொழுது சொன்னது…

நல்ல இடுகை
Gopi Ramamoorthy சொன்னது…

வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

திருப்பித் திருப்பி படித்தேன் அண்ணே,

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வருகைக்கு நன்றி ப நா .கு நா.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையா இருக்கு அண்ணே...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kalakkkalஜ் கலக்கல் அண்ணே.. பொதுவா அம்மா பற்றித்தான் எல்லாரும் எழுதுவாங்க.. அப்பா பற்றி எழுதி அசத்தீட்டீங்க

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...///

அடடடா அருமை அருமை......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//திருப்பித் திருப்பி படித்தேன் அண்ணே, நன்றி//

அப்பாடா இதுக்காவது எடக்கரடக்கலா பதில் சொல்லாம விட்டீரே அதுவே பெரிய விஷயம்...

ஸ்ரீராம். சொன்னது…

அப்பா...அப்பப்பா...அருமை.

புகழேந்தி சொன்னது…

தெளிந்த நீர்த் தேக்கம் போல உங்கள் வலைப்பூ. வாழ்த்துக்கள்.

Jana சொன்னது…

அருமை ஐயா.. கண்களின் ஓரத்தில் கண்ணீருடன்.

RVS சொன்னது…

மாணிக்கம் மாலிக்கிடம் இருந்து என்று போட்டுருக்கிறீர்களே.. யார் எழுதியது இது.

நன்றாக உள்ளது.. நன்றி ;-)

சென்னை பித்தன் சொன்னது…

அப்பா!என்னைப் பொறுத்தவரை ஒரு நிழலான ஞாபகம்;என் ஐந்து வயதில் இழந்தேன் தந்தையை,பதிவைப் படிக்கையில் கண்ணீர் வருவதைக் கட்டுப் படுத்த முடியவில்லை--எனக்கு இத்தனை வயதாகியும்.
நன்றி,

பொன் மாலை பொழுது சொன்னது…

// அருமையா இருக்கு அண்ணே...//

வெறும்பய சொன்னது…

வருகைக்கு நன்றி. ஐயோ....... நீங்க இந்த பேர மாத்தா மாட்டீங்களா?

பொன் மாலை பொழுது சொன்னது…

//kalakkkal கலக்கல் அண்ணே.. பொதுவா அம்மா பற்றித்தான் எல்லாரும் எழுதுவாங்க.. அப்பா பற்றி எழுதி அசத்தீட்டீங்க //

சி.பி.செந்தில்குமார் கூறியது..

மிக்க நன்றி. செந்தில். .

பொன் மாலை பொழுது சொன்னது…

//திருப்பித் திருப்பி படித்தேன் அண்ணே, நன்றி//

//அப்பாடா இதுக்காவது எடக்கரடக்கலா பதில் சொல்லாம விட்டீரே அதுவே பெரிய விஷயம்...//

MANO நாஞ்சில் மனோ

நன்றி மனோ. ஒன்று தெரியுமா நேரில் முகம் பார்க்காவிட்டாலும் நம்மிடம் இழையும் அந்த பாசம்......
அதில் பன்னி குட்டியும் அவசியம் இருக்கும். :)))

பொன் மாலை பொழுது சொன்னது…

// அப்பா...அப்பப்பா...அருமை.//

ஸ்ரீராம். கூறியது...


வருகைக்கு நன்றி ஸ்ரீ ராம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//தெளிந்த நீர்த் தேக்கம் போல உங்கள் வலைப்பூ. வாழ்த்துக்கள்.//

புகழேந்தி கூறியது..

வாருங்கள் புகழேந்தி. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// அருமை ஐயா.. கண்களின் ஓரத்தில் கண்ணீருடன்.//

Jana கூறியது...

நன்றி jana ,

பொன் மாலை பொழுது சொன்னது…

// அப்பா!என்னைப் பொறுத்தவரை ஒரு நிழலான ஞாபகம்;என் ஐந்து வயதில் இழந்தேன் தந்தையை,பதிவைப் படிக்கையில் கண்ணீர் வருவதைக் கட்டுப் படுத்த முடியவில்லை--எனக்கு இத்தனை வயதாகியும்.
நன்றி,//

சென்னை பித்தன் கூறியது...


எத்தனை வயதானால் என்ன? இப்போதும் கூட எனக்கு பயணங்களின் போது முதியர்களை பார்த்தால் அம்மா, அப்பா இவர்களின் நினைவே வந்துவிடும். மனதில் ஒரு சோகம் வந்து போகும். சில அமைதியான தனிமையான சிந்தனைகளில் கண்கள் கசிவதை உணருவேன். வருகைக்கு நன்றி.சென்னை காதலரே !

பொன் மாலை பொழுது சொன்னது…

//மாணிக்கம் மாலிக்கிடம் இருந்து என்று போட்டுருக்கிறீர்களே.. யார் எழுதியது இது.
நன்றாக உள்ளது.. நன்றி ;-) //

RVS சொன்னது…

அது நண்பர் முகமது காலித். சுவாமி மலை / சுந்தர பெருமாள் கோவில் என்று நினைவு. இங்கு துபாயில் ஒரு பட்டாளமே உள்ளது. எல்லோரும் நக்கலும் நையாண்டியும் நிறைத்த அன்பு நண்பர்கள், நம் ஊர் காரர்கள் நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு.குடந்தை ,மன்னார்குடி, நாச்சியார்கோயில், நெல்லை,கோவை, சென்னை ,திருச்சி என்று ஒரு மினி தமிழ் நாடே இங்கு உண்டு.
வருகைக்கு நன்றி R V S.

மைதீன் சொன்னது…

அம்மாவின் பாசம் தெரிந்திருக்கும், அப்பாவின் பாசம் மறைந்திருக்கும்.

NADESAN சொன்னது…

அருமையான வரிகள்
அப்பா அப்பா அப்பா
அருமை

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய்

தறுதலை சொன்னது…

அருமையான தொகுப்பு.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

பொன் மாலை பொழுது சொன்னது…

// அம்மாவின் பாசம் தெரிந்திருக்கும், அப்பாவின் பாசம் மறைந்திருக்கும்.//

மைதீன் சொன்னது…

வாருங்கள் மைதீன். உங்களின் வரிகள் உண்மை. வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//அருமையான வரிகள்
அப்பா அப்பா அப்பா
அருமை //

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய்


வாருங்கள் நடேசன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

// அருமையான தொகுப்பு.//

தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011 )

வாருங்கள், வருகைக்கு நன்றி. ஏன் இப்படி பெயர்வைத்துக்கொண்டு சங்கடபடவேண்டும்?
ஏற்கனவே இங்கே
வெறும்பயல்
பிச்சைகாரன்
பன்னிகுட்டி
எல்லாம் உள்ளன.
இதில் உங்க பெயர் வேறா? தறுதலை என்பதை மாற்றி " தலையாரி " என்று வைதுக்கொளுங்க .கொஞ்சம் நல்லாவே இருக்கு... இல்ல??

Thirumalai Kandasami சொன்னது…

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.

http://enathupayanangal.blogspot.com

Unknown சொன்னது…

மிக அருமையான கவிதை.. மிக சாதாரணமாக வார்த்தைகளை வைத்து மிக அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளீர்கள்..

Unknown சொன்னது…

ஆனால் எல்லோர்க்கும் நெகிழ்வுடம் நினைவு கூறப்படும் தந்தை அமைவதில்லை..

ஆயிஷா சொன்னது…

//அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...//

மிக அருமையான கவிதை சகோ,

பொன் மாலை பொழுது சொன்னது…

//மிக அருமையான கவிதை.. மிக சாதாரணமாக வார்த்தைகளை வைத்து மிக அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளீர்கள்..
ஆனால் எல்லோர்க்கும் நெகிழ்வுடம் நினைவு கூறப்படும் தந்தை அமைவதில்லை.//.

பாரத்... பாரதி... சொன்னது…

வருகைக்கு நன்றி பாரத் ...பாரதி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// மிக அருமையான கவிதை சகோ//,
ஆயிஷா சொன்னது…

கருத்துக்கு நன்றி சகோதரி ஆயிஷா.

பெயரில்லா சொன்னது…

எனது அப்பாவிற்கு எழுதியது போன்றிருக்கின்றது நன்றி

டக்கால்டி சொன்னது…

நான்காம் கவிதை படிக்கும் போதே கண்ணின் ஓரம் நீர்த்திவலைகள் எட்டிப்பார்த்தது...
அருமை தோழா..

டக்கால்டி சொன்னது…

சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு//

இது ரொம்ப பிடிச்சிருக்கு...மறுபடியும் மறுபடியும் படித்தேன்.. அருமை சகா...

பொன் மாலை பொழுது சொன்னது…

// நான்காம் கவிதை படிக்கும் போதே கண்ணின் ஓரம் நீர்த்திவலைகள் எட்டிப்பார்த்தது...
அருமை தோழா..//

டக்கால்டி சொன்னது…

உங்க படத்தை பார்த்தா நம்ம பன்னி குட்டிஞாபகம் தான் வருது. :)

தங்களின் வருகைக்கு நன்றி

எம் அப்துல் காதர் சொன்னது…

தல இந்த கவிதைய நான் இங்கே போன வருஷமே போட்டுவிட்டேன்!!
http://mabdulkhader.blogspot.com/2010/06/5.html

பொன் மாலை பொழுது சொன்னது…

//தல இந்த கவிதைய நான் இங்கே போன வருஷமே போட்டுவிட்டேன்!!//
// எம் அப்துல் காதர் சொன்னது…

இருக்கலாம். நானும் போன வருடம் போட்டு,இப்போதும் மீள் பதிவு இட்டேன். சொல்லியது போல இது துபாய் நண்பர் எனக்கு அனுபிய மெயில்தான்.நன் உங்கள் பதிவை இன்னமும் காண வில்லை. .பார்கிறேன் .
நன்றி.

vasan சொன்னது…

அப்பா ஒவ்வொருவரின் வாழ்விலும் வாழும் முத‌ல் க‌தாநாய‌க‌ன்.
அப்பா இல்லாத‌ வாழ்வு வெறும் அரை வாழ்வுதான்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// அப்பா ஒவ்வொருவரின் வாழ்விலும் வாழும் முத‌ல் க‌தாநாய‌க‌ன்.
அப்பா இல்லாத‌ வாழ்வு வெறும் அரை வாழ்வுதான்.//

vasan சொன்னது.

மிக்க சரிதான். அவர்கள்தான் நமது வாழ்வில் ஹீரோக்களாக வேண்டும்.பெற்றவர்களின் அருமை தெரியாமல் உதாசீனம் படுத்தி சினிமா காரர்களை நாம் கொண்டாடி கூத்தடிக்கும் இந்த கேடு கேட்ட நிலை மாறவேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன்.

vanathy சொன்னது…

super post!

பொன் மாலை பொழுது சொன்னது…

// super post! //
vanathy சொன்னது…

Thank you Vanathy.

சமுத்ரா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி...nice

சிவகுமாரன் சொன்னது…

அப்பாவை நினைத்து அழுது விட்டேன்

மதி சொன்னது…

ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

superb lines.. captures the entire life of a father-son relation in a single sentence. just like the father's hand press!! congrats.

Jeevan சொன்னது…

நன்றாக உள்ளது உங்களின் கவிதை.

அன்புடன்,
ஜீவன்.
International Business Directory

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக