பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜனவரி 11

ஆண்டிகள் மடம்

PM-led meeting on price rise ends inconclusively 

இந்திய அரசின் மத்திய வேளாண் அமைச்சறு திருவாளர் ஷரத்து பவாரு, பொருளாதார/நிதி அமைச்சறு திருவாளர் பிரனாப்பு முகர்சி , உள்ளுதுரை அமைச்சறு சிதம்பரம், அப்புறம் கேபினட்டு செகரடரியாம் ..சந்திர சேகரு ,திட்டகமிஷன் துணைதலீவராம் மொன்டகு சிங்கு அலுவாலியா (எங்கேயிருந்துதான் பேருவெச்சிப்பான்களோ ) அப்புறம்....கவுச்சிக்கு பாசு -சீப் எகனாமிக் அட்வைசர் ..யாருக்கு - நிதி அமைச்சரகம் இவங்க எல்லாம் நம்ம இந்திய நாட்டு பிரதமர் , பொளாதார மேதை மண்ணு மோகன சிங்கு தலைமைல கூட்டம் போட்டிருக்காங்க. கூட்டம் ..தப்பு தப்பு .. அது கலந்து ஆலோசனை . எதை பத்தியாம்? நாட்ல விலைவாசி நொம்ப நொம்ப கூடிப்போச்சாம்.சனங்க எல்லாம் துன்ன சோறு இல்லாம, குடிக்க தண்ணி இல்லாம ,இருக்க எடம் இல்லாம சந்தியில நிக்கிறாங்களாம். சனங்க படுற கஷ்டத்த எப்படி ,அத என்ன பண்ணி குறைகிரதுன்னு, வெல வாசிய கொறைச்சு கீழே கொண்டு வர்றதுன்னு கூடி பேசுனான்கலாம் .

என்ன ஆச்சாம்?

ஒன்னும் ஆவள,. ஒரு முடிவும் எடுக்காம கூட்டம் முடிஞ்சுதாம்.

வேளாண் அமைச்சறு திருவாளர் ஷரத்து பவாரு:
 // நா இந்த கூட்டத்துக்கு வந்ததே முழு வெற்றிதான். எனக்கு இனிமே I P L  மேட்சி வேல வேற ஆரம்பிச்சாசு லைவ்வா பாத்தாகணும். ஆளா விடங்க. //



உள்ளுதுரை அமைச்சறு சிதம்பரம்:
 // நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்கள் இளவல் கார்த்திக் சிதம்பரம் அவர்களை மற்றும் அவர்களின் தொண்டர்களை எப்படி வெற்றி பெற வைப்பது என்பதில் நான் ஆழ்ந்த சிந்தனையுடன் இருக்கின்றேன்//



 பொருளாதார/நிதி அமைச்சறு திருவாளர் பிரனாப்பு முகர்சி:
 // என்ன விடுங்கையா. எனக்கு கடுப்பு கடுப்பாதான் வருது. எத்தனை நாளைக்கு நா இந்த டம்மி பிரதமர் வேலையவேற சேத்தே பாக்குறது?//


திட்டகமிஷன் துணைதலீவரு மொன்டகு சிங்கு அலுவாலியா:
 //  உலக வங்கியின் கட்டளைகளை தாமதமின்றி நிறைவேற்றவேண்டும் என்று இந்த அமைப்பின் மூலம் கேட்டுக்கிறேன்// 

நாட்ல எந்த விஷயமும் இவர்களின் கட்டுப்பாட்டில் இல்ல.
 U.P.A. கவர்ன்மெண்டு எல்லா வகையிலேயும் சீரழஞ்சு சிரிப்பா சிரிச்சி நிக்குது. வாரா வாரம் ஒரு புது ஊழல் பட்டியல் .வகை வகையா வித விதமா ஊழல் - ஊர அடிச்சி (உலையில் இல்ல ) அந்நிய நாட்டு வங்கிகளில் போட தயக்கம் இல்ல.பணவீக்கம் மேலே மேலே அதிகமா போறதா பொருளாதாரம் படிச்ச பெரியவுங்க சொல்லிகிட்டே இருக்காங்க.

அதுசரி, இவங்க இத்தன பேரும் பேசி என்னாத்த கிழிக்க போறாங்க . பேசாம அந்த சோனியா அம்மாவாவது கொஞ்சம் தயவு பண்ணி இந்திய நாட்டு நாதாரி சனங்க இப்படி நாதி இல்லாம் போச்சேன்னு கொஞ்சம் கருண காட்டி ஏதாவது செஞ்சாதா வுண்டு.

மண் மோகன் சொல்லி இனிமே யாரும் அவுங்க கும்பல்ல கேக்க போறது இல்ல. பின்ன எதுக்கு இந்த பித்தலாட்டம்? ஆலோசனை, கூட்டம் ??

 நீங்க பேசாம ராஜினாமா பண்ணிட்டு போய்டுங்க மிஸ்டர் மண் மோகன் ஜீ. அதுதான் உங்க ஆரோக்கியத்துக்கும் நல்லது . இந்த நாட்டுக்கும் நல்லது.

நீங்க எங்கேயும் வெளிநாடு பயணம் போவீங்களே?... இப்ப போவலையா ஜீ...?



20 comments:

எல் கே சொன்னது…

அண்ணே, உங்கப் பதிவில் நடுவில் எதோ ஒரு விளம்பரம் வருகிறது. பதிவை சரியாகப் படிக்க இயலவில்லை

பொன் மாலை பொழுது சொன்னது…

எனக்கு ஒன்றும் அப்படி இல்லையே?
சரியாய் தானே திறக்கிறது .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உங்கப் பதிவில் நடுவில் எதோ ஒரு விளம்பரம் வருகிறது. பதிவை சரியாகப் படிக்க இயலவில்லை

எல் கே சொன்னது…

இப்பொழுது சரியா வருது. அப்பா ஹிட் கவுண்டருக்கு கீழே எதோ ஒரு ப்ளாஷ் விளம்பரம் வந்தது

Unknown சொன்னது…

இந்த நாதாரிகள் தன்ன காப்பாத்திக்க தானே அந்த பெரிய முதியோர் இல்லத்துல வசிக்குதுங்க!?

பொன் மாலை பொழுது சொன்னது…

எனக்கு எப்போதும் போல எளிமையாகவே திறக்கிறது. திரட்டிகளில் விளம்பரம் இணைத்திருப்பார்கள் என்று நினைக்கிறன்.
எல் கே மற்றும் நண்டு @நொரண்டு - நன்றி நண்பர்களே.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி விக்கி உலகம் அவர்களே

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//அண்ணே, உங்கப் பதிவில் நடுவில் எதோ ஒரு விளம்பரம் வருகிறது. பதிவை சரியாகப் படிக்க இயலவில்லை //

பலமுறை உங்களிடம் சொல்லி இருக்கேன். நீங்க சரியா கவனிக்கலை என்று நினைக்கிறேன் ...இப்போ பல பேரு உங்க கிட்ட சொல்றாங்க :)

முடிஞ்சா டெம்ப்ளேட் மாத்துங்க ...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//எனக்கு ஒன்றும் அப்படி இல்லையே?
சரியாய் தானே திறக்கிறது .//

அப்படின்னா நாங்கல்லாம் பொய்யா சொல்றோம் ?

பொன் மாலை பொழுது சொன்னது…

யூர்கன் மாப்ள, ஒழுங்கா என்ன பண்ணனும்னு சொல்லு. உடனே பண்றேன்.
இன்டலி ,தமிழ் மணம் இரண்டிலும்தான் இணைத்துள்ளேன். நான் திறக்கும் பொது விளம்பரம் எதுவும் வருவதில்லையே மாப்பு? அதனாலேயே அது எனக்கு தெரியல.

பொன் மாலை பொழுது சொன்னது…

மாப்ஸ் டெம்ப்ளேட் மாதி பாக்குறேன் நீயே ஒன்னு செலக்ட் பண்ணி குடு

எல் கே சொன்னது…

டெம்ப்ளேட் பிரச்சனை இல்லை. எனக்கென்னவோ அந்த ஹிட் கவுண்டர் மேல சந்தேகம் இருக்கு

Unknown சொன்னது…

ippoluthu sari agi vitathu ... nanri

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி அக்பர். மீண்டும் வருக :))

எப்பூடி.. சொன்னது…

எல்லாரு போட்டோவும் இடது கரையில இருக்கு, மன்மோகன் சிங்கு போட்டோ மட்டும் எதுக்கு நடுவில? ஏங்க இந்த ஓர வஞ்சனை :-)))))

பொன் மாலை பொழுது சொன்னது…

எல்லாரு போட்டோவும் இடது கரையில இருக்கு, மன்மோகன் சிங்கு போட்டோ மட்டும் எதுக்கு நடுவில? ஏங்க இந்த ஓர வஞ்சனை :
இப்பூடி.

அவரு பாவமையா , விட்டுடுவோம். நடுவுலே இருக்கட்டும் நல்ல மனுஷன் தான் .அவுரு கெரகம் "இப்பூடி " படுத்துது.

ப.கந்தசாமி சொன்னது…

நான் இந்தப் பதிவைப் பார்க்கும்போது விளம்பரங்கள் ஒன்றும் வரவில்லை.

யாசவி சொன்னது…

காரம் கம்மி :)

பொன் மாலை பொழுது சொன்னது…

// நான் இந்தப் பதிவைப் பார்க்கும்போது விளம்பரங்கள் ஒன்றும் வரவில்லை.//
------DrPKandaswamyPhD சொன்னது.

நீங்கெல்லாம் வர்றதுக்கு முன்னாலேயே டெம்பிளேட் மாத்திட்டேன். ஒரு வேல அதனால இருக்கும்.
நீங்கதா இப்போ நம்ம பக்கமெல்லாம் வர்றதே இல்லையே? :((

பொன் மாலை பொழுது சொன்னது…

காரம் கம்மி :)

யாசவி சொன்னது…

நான் வேண்டுமென்றேதான் அப்படி மாற்றிகொள்கிறேன். எப்போதும் ஒரே மாதிரி சூடாக / காரமாக பதிவுகளை இட்டால் அது ஒரு பிராண்டாக மாறும் தன்மையது. அது பிடிப்பதில்லை. எல்லாம் கலந்து பல் சுவையாக இருந்தாலே வாசகர்கள் விரும்புவார்கள் என்று எண்ணம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக