அன்பே வா (1966) படம் எந்த காலத்திலும் எல்லா வயதினராலும் கண்டு களிக்கக்கூடிய ஒரு திரைப்பட விருந்து. காதல் ,காமெடி, சண்டைகள், ஆடல், பாடல் என்று சராசரி இந்திய திரைப்படங்களின் வார்ப்பில் உண்டான படம். ஆனால் இந்த படத்தை தமிழில் தயாரிக்க ஆதாரமாக இருந்தது கம் செப்டம்பர் Come September (1961) என்ற ஹாலிவுட் படம்தானாம்.இதில் நடித்த நடிகை ஜினா லோலா பிரிகிடா அந்நாளைய செக்ஸ் பாம். ஆங்கில படத்தில், அந்நாளில் பிரபலாமாக இருந்த Billy Vaughn இசையமைத்த இந்த இசை,உலகம் முழுவதும் பிரபலம். நாங்கள் அரை ட்ராயர் வயதில் உள்ளூரில் இருக்கும் டென்ட் கொட்டகையில் சினிமா பார்க்க சென்றால் இடைவேளை வரும் போது இரண்டு அல்லது மூன்று பாடல்களை போடுவார்கள். நாலாவதாக இந்த இசைதட்டை போட்டவுடன் அதுவரை வெளியில் நின்று பேசுபவர்கள், டீகடையில் டீ குடித்துவிட்டு, கடலை மிட்டாய் ,முறுக்கு , பீடி, சிகரெட் என்று வாங்குபவர்கள் எல்லாம் அரங்கினுள் ஓடுவார்கள்.அரங்கின் உள்ளே எறியும்விளக்குகள் அணைக்கப்பட்டு சிலைடு போடுவார்கள். பல விளம்பரங்கள் சிலைடு ஷோக்களில் வந்து போகும். அந்த வயதில் இருந்தே இந்த இசை அறிமுகம். பெர்லின் மெலடி என்ற இசையும் இதனுடன் பிரபலம்தான். அந்தநாட்களில் நம் இசையமைபாலர்களின் வீடுகளில் வெளிநாட்டு இசை தொகுப்பு ரிகார்டுகள் (இசைத்தட்டு) சேமிப்பில் நிறைய இருக்குமாம்! அப்போதே குமுதம் ,விகடனில் கிண்டலடிப்பார்கள்!!
Come September - Billy Vaughn.
BILLY VAUGHN - BERLIN MELODY 45RPM DOT 1962
பிற்காலத்தில் 1980 களில் சென்னை வந்த பின்னர் திரைப்படம்பார்க்க சென்றால் இடைவேளையின் போது இதே இசையினை கேட்டபோது எனக்கு ஊரின் ஞாபகங்கள் வந்ததுண்டு. என்ன காரணமோ அந்த நாட்களை எல்லா திரை அரங்குகளிலும் இடை வேலையின் போது இந்த ஒரு குறிப்பிட்ட இசையை ஒளிக்க இடுவது ஒருபொது விதியாக இருந்தது போலும். பின்னாளில் இவைகள் மாறிவிட்டன. சென்னை தேவி தியேட்டரில் அந்த நாட்களில் பிரபலமாக இருக்கும் பாப் இசை பாடல்களை போடுவார்கள்.
சரி , இந்த கம் செப்டம்பர் இசையினை தமிழில் காப்பி செய்த பாடல் ஒன்று உள்ளது தெரியுமா? ராமண்ணா தயாரித்து இயக்கி,ரவிச்சந்திரன்,ஜெயலலிதா,
நாகேஷ்,மனோரமா, முத்துராமன் என ஒரு கூட்டமே நடித்து சில்வர் ஜுப்லி கொண்டாடிய அந்தபடன் "நான்". இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் மனோகரிடமிருந்து சொத்தின் உயில்கள் அடங்கிய அந்த பிரிப் கேசினை கைப்பற்றும் நோக்கத்துடன் ஜெயலிதா ஆடி பாடும் காட்சியில் இந்த பாடல் உள்ளது. எல்.ஆர். ஈஸ்வரி பாடி, இசை அமைத்தவர் டி.கே. ராம மூர்த்தி. ஆமாம். விஸ்வநாதன், ராம மூர்த்தி இணை கலைக்கோவில் படம் பண்ணிய பிறகு பிரிந்தனர்.அதன் பின்னர் அவர்கள் தனித்தனியாக படங்களில் இசை அமைக்க ஆரம்பித்தனர்.
நாகேஷ்,மனோரமா, முத்துராமன் என ஒரு கூட்டமே நடித்து சில்வர் ஜுப்லி கொண்டாடிய அந்தபடன் "நான்". இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் மனோகரிடமிருந்து சொத்தின் உயில்கள் அடங்கிய அந்த பிரிப் கேசினை கைப்பற்றும் நோக்கத்துடன் ஜெயலிதா ஆடி பாடும் காட்சியில் இந்த பாடல் உள்ளது. எல்.ஆர். ஈஸ்வரி பாடி, இசை அமைத்தவர் டி.கே. ராம மூர்த்தி. ஆமாம். விஸ்வநாதன், ராம மூர்த்தி இணை கலைக்கோவில் படம் பண்ணிய பிறகு பிரிந்தனர்.அதன் பின்னர் அவர்கள் தனித்தனியாக படங்களில் இசை அமைக்க ஆரம்பித்தனர்.
பாடலின் இறுதியில் ஜெயலலிதா எத்தனை லாவகமாக அந்த பிரிப் கேசினை பிடுங்கி தண்ணீரில் எறிகிறார்?! :))
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே ........
பதிவை முடிக்கலாம் என்றால் இன்னுமொரு வியப்பான செய்தி ஒன்று வந்து முன்னே விழுகிறது. பிரபல பாப் குழுவான ABBA வின் ஆல்பங்களில் Dancing Queen என்ற ஒரு பாடல் அந்நாளில்(1976) இருந்தே உலக பிரசித்தம். அவர்களின் சொந்த நாடான ஸ்வீடனில் அந்நாட்டு இளவரசியின் திருமண வைபவத்தில் முதல் நாள் மாலையில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்த பாடலை முதலில் பாடி புகழ் பெற்றார்கள். உண்மையில் இந்த பாடலின் மெட்டும் Billy Vaughn அவருடையஆல்பத்தில் அதே தலைப்பில் இருந்துதான் கையாண்டுள்ளனர் என்று இப்போதுதான் புரிகிறது.அந்த அரச குடும்ப நிகழ்ச்சிக்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட பாடல் இது. பாடலின் இறுதியில் ஒரு 'சப்பை ' பிகரை காட்டுவார்கள் அதுதான் அந்த இளவரசியாம் பாருங்கள்.
Dancing Queen By Billy Vaughn orchestra
Dancing Queen Royal Swedish Opera by ABBA World Hit Song
கம் செப்டம்பர் நாயகி ஜினா லோலா பிரிகிடா இவர் ஒரு இட்டாலி நாட்டுக்காரர். ஹாலிவுட் படங்களில் நடித்தார்.கம் செப்டம்பர் தயாரிப்பில் இருந்தபோது அதில் நாயகியாக நடிக்க அந்நாளைய செக்ஸ் சிம்பல் மர்லின் மன்றோதான் தேர்வு செயபடுவார் என்ற வதந்தியை மீறி அதில் ஜினா நடிக்கவைக்கப்பட்டார். சென்ற என்பதுகளில் புது டெல்லியில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
// இந்திய ஆண்கள் என்னை கவர்கின்றனர் அவர்கள் அழகானவர்கள், இங்கிருந்து போகும்போது நான் ஜோடியாக போவேனோ என்ற சந்தேகம் எனக்கே உள்ளது //
என்று பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி, இந்திய பெண்களின் வயிற்று எரிச்சலை கொட்டிகொண்டார் இந்த அம்மணி!
வழியாதீர்கள்!அப்போதே இந்த அம்மா பாட்டிதான் !!
13 comments:
சென்ற என்பதுகளில் புது டெல்லியில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்//
1980-ல் நீங்க ஏன் டிலலி போனீர்கள் என்று இப்போதுதான புரிகின்றது.ம்..ம்..நடக்கட்டும் நடக்கட்டும்....
வாழ்க வளமுடன்.
வேலன்.
எப்போவோ பார்த்தது கேள்விபட்டது.மீண்டும் நினைவைத் தூண்டிவிட்டதற்கு நன்றி கக்கு மாணிக்கம்.
old but informative news
copying is not new ;) to tamil cinema
அண்ணே இது எல்லாருக்கும் தெரிந்ததுதான் நீங்க உதாரணத்தோட காட்டி இருக்கீங்க
என்னக்கு தெரியாத செய்திகள் நன்றி அண்ணா
நிறைய தகவல்கள்; எல்லாம் சுவாரசியம். கம் செப்டம்பர் படம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது மேலும் சில தகவல்கள் தந்திருக்கிறீர்கள். குட்!! :-)
மாறுபட்ட இடுகை சிறப்பாக எழுதி இருக்கிங்க. நல்வாழ்த்துகள்
சூப்பர் தல
the post is different from yr regular style, good.
கம் செப்டம்பர் இசை...தஞ்சை அருள் தியேட்டரில் கூட அதுதான் இடைவேளையை முடிக்கும் இசை! இந்த ட்யூனில் ஹிந்தியில் கூட ஒரு பாட்டு. மாதுரி தீட்சித், அனில் கபூரின் தம்பி நடித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வந்த ராஜா திரைப் படப் பாடல்...'நஜரு மிலே..' என்று தொடங்கும். அழகு மாதுரியின் அழகு நடனத்துடன்..
எல்லா வீடியோவையும் பார்த்தேன், நல்லா இருந்துச்சு, நன்றி.
சாரிண்ணே.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
தப்பிச்சுக்குங்க...
http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html
நமது தளத்தில் கல்விதானம் செய்யுங்கள் என்ற பகுதி பதிவிடப்பட்டு உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்தவும்.http://ujiladevi.blogspot.com/
கருத்துரையிடுக