நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் இவர் கண்ட உயர்வு தாழ்வுகள்,புகழ்ச்சி, இகழ்ச்சி, பதவி, ஏற்றம், இறக்கம் என ஒரு இந்திய அரசியல் வாழ்வின் அத்தனை முகங்களையும் கண்டவர் இன்று இப்படி இந்த வயதில் பரிதவித்து நிற்பது பாவமாக உள்ளது. எல்லாம் இவரே உண்டாகிக்கொண்டதுதான் என்பது உண்மையே. கட்டுப்பாடு அற்ற அளவு கடந்த ஆசையே இவர்களை இன்று கீழே தள்ளும் அளவிற்கு கொண்டுபோயுள்ளது. உண்மையை சொன்னால் தமிழர்களின் அளவற்ற கோபத்திற்கும் வெறுப்புக்கும் இன்று இந்த மொத்த குடும்பமும் ஆளாகியுள்ளது. தி.மு. க. கட்சியின் இறுதி தொண்டன் வரை இவர்களை வெறுக்க ஆரம்பித்து விட்டனர் என்பது அவர்களின் விரக்தியான பேச்சிக்களில்தெரிகிறது.
கட்சியில் உள்ளவர்களை அனைவரையும் புறம் தள்ளிவிட்டு தன் மனைவிமார்களின் பிள்ளைகளின், குடும்ப நபர்களை ஒருவர் பாக்கி இன்றி நேற்று பிறந்த பேரக்குழந்தைகள் வரை அனைவரையும் தி.மு.க. விலும், பணம் கொழிக்கும் பிசினஸ் களில் அனைவரையும் உள்ளே பொருத்திவிட்டு முன்னிறுத்திகொண்டது கேவலம் என்ற உணவே இவரிடம் இல்லாமல் போனது இந்த கட்சியின் துயரம். இலங்கையில் போரின் உச்ச கட்டங்களில் கொத்து கொத்தாக அப்பாவி தமிழர்கள் செத்து விழுந்த போதும் கூட தங்களின் குடும்ப உறவுகளின் நச்சரிப்பால் உடம்பால் முடியாது சக்கர வண்டியில் டெல்லி வரை சென்று அங்கு தங்கி இருந்து மத்தியில் தன் மனைவி மார்களின் வாரிசுகளுக்காய், மருமகனின் வாரிசுகளுக்காய் தவமிருந்து பதவிகளை பெற்றுவந்த போதே தமிழ் நாட்டவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் என்ன மனிதர் இவர் ? என்ற கோபத்தில்.
இன்று ஒவ்வொரு தி.மு.க. காரனும் எண்ணுவது இதுதான். கிழவர் கட்சியை விட்டு பதவியை விட்டு போகவேண்டும். ஸ்பெக்ட்ரம் ராசாவையும் கனிமொழியையும் இவர்கள் வெறுத்து ஒதுக்குவது நியாயமே. தி.மு.க . என்ற பிராந்திய கட்சியின் பெயரை தேசிய அளவில் கெடுத்து குட்டிசுவர் ஆகியவர்கள்தான் கனிமொழியும் ராசாவும் என்ற இவர்களின் கோபத்திற்கு என்ன சொல்வது?
மற்ற பிள்ளைகளைப்போல தன் பெண்ணும் பெருந்தலைவராகி செல்வாக்குடன் திகழ வேண்டும் என்ற பேராசை ராசாத்தி அம்மாள் மூலம் செயல் பட அதனால் வந்த வினைதான் இது. "இவர்களுக்குத்தான் வேண்டும் அளவு கோடான கோடி செல்வமும் நிறுவனங்களும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் கொடுத்துள்ளாரே கிழவர் பின்னர் இன்னமும் ஏன் இந்த பேராசை இவர்களுக்கு ? " என்ற அவர்கள் புலம்புவது வெளிப்படை . கனிமொழியும் தன் தகுதி,வரம்பு முறை அறியாமல் எப்படியாவது மதிய அரசில் மந்திரியாக வேண்டும் என்ற ஆசையில் மண் விழுந்தாலும் தங்களின் பினாமியாக ராசா மந்திரியாக வேண்டும் என்று இவர்கள் நடத்திய பேரங்கள் எல்லாம் நீரா நாடியா டேப் முலம் சந்தி சிரிக்க ஆரம்பித்தது இந்திய ஜனநாயகம் என்ற பொய் தோற்றத்தின் உச்சகட்டம்.
தாங்கள் விரும்பியவருக்கு பதவி வேண்டும் என்ற வெறியில் இவர்கள் மு.க. அழகிரியை இவர்கள் கேவலமாக பேசியதெல்லாம் வெளி வந்த போதே ஒரு பெரும் வெடிப்புக்கு நாள் குறித்தாகி விட்டது என்றே தோன்றியது. இன்று அது நிகழ்கிறது. கட்சியிலிருந்து ராசாவையும், கனிமொழி, பூங்கோதை போன்ற வர்களை நீக்க வேண்டும் இல்லையேல் தான் கட்சியில் இருக்கபோவதில்லை என்று போர்க்கொடி உயர்த்திவிட்டார் அழகிரி.
மு.க. அழகிரி தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செல்துவிட்டார் என்றும் தி.மு.க. கட்சியில் இருந்தும் தம் பொறுப்புக்களை ராஜினாமா செய்துவிட்டார் என்று செய்திகள் வந்துவிட்டன. இளவல் மு.க. ஸ்டாலின் கூட இதே போன்ற மன நிலையில்தான் உள்ளார் என்றாலும் சற்று அப்பாவின் நிலை கண்டு அடக்கி வாசிக்கிறார் .
இவைகள் எல்லாம் வெறும் பம்மாத்துதான்.
இருப்பதை இல்லை என்றும், இல்லாத ஒன்றை இருப்பாதாக காட்டும் கண்கட்டு வித்தையில் நோபல் பரிசு வாங்கும் அளவு திறமையானவர் நம் தமிழக முதல்வர்.
// பிரிந்தோம் கண்ணீர் விட்டோம், கூடினோம் புன்முறுவல் பூக்கும் முகங்களுடன் //
என்று தனக்குத்தானே கடிதம் எழுதி அத்தனை தமிழர்களின் காதிலும் மறுபடியும் பூ சுற்றுவார் பாருங்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் எங்கே தான் போனதோ!
செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா.........................
15 comments:
இன்னொரு நாடகம் அவ்வளவுதான் சார் ...
தமிழர் தலைவரின் முகத்திரை கிழிக்கும் கட்டுரை...
/// பிரிந்தோம் கண்ணீர் விட்டோம், கூடினோம் புன்முறுவல் பூக்கும் முகங்களுடன் //
என்று தனக்குத்தானே கடிதம் எழுதி அத்தனை தமிழர்களின் காதிலும் மறுபடியும் பூ சுற்றுவார் பாருங்கள்//
விடுங்க பாஸ்! இதெல்லாம் என்ன புதுசா?
//கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் எங்கே தான் போனதோ!///
தொண்டனுக்கு மட்டும் தான் இது... தலைவருக்கு அல்ல...
என்னங்க.. படத்த போட்டு..
சாமி பாட்டோட முடிக்கறீங்க.. ஏதோ இடிக்குதே..
உண்மைதான் ஈழத்தமிழர்களின் சாபம் பலிக்காமலா போய் விடும்..பொங்கிய மக்களை அடக்கி வைத்த பெருமை உடையவராச்சே
தமிழக அரசியலில் இது கடுமையான நேரம் அதிகார போட்டி எம்.ஜி.ஆர் காலத்தைவிட கடுமையாக இருக்கும்..எதுவும் நடக்கலாம்
கடமை - எப்படியாவது ஆட்சியை பிடிப்பது
கண்ணியம் - எதிர்கட்சிகளும் /செய்திதாள்களும் கடை பிடிக்க வேண்டியது
கட்டுப்பாடு - பதவிகள் குடும்பத்தினருக்கு மட்டுமே
தேர்தல் நேரம் என்பதால் நீங்க திட்டினதுக்கு கூட்ப்ட தன்னை அழகாக திட்டிய கக்கு மாணிக்கத்துக்கு பாராட்டுவிழா; ரஜினி, கமல் சிறப்பு விருந்தினர் என அழைப்பிதல் வந்தாலும் வரும் யாக்கிரதை.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!
இந்த சூழ்நிலையில் பாடல்கள் போடுவதாக இருந்தால் எநத எந்த பாடல்களை போடுவீர்கள்...
1.சட்டி சுட்டதாடா கை வி்ட்டதடா...
2.எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி....
3.யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க...
4.மயக்கமா கலக்கமா....
5.உன்னை சொல்லி குற்றமில்லை.என்னை சொல்லி குற்றமில்லை...
6.அவளா சொன்னால்..இருக்காது.அப்படி எதுவும் நடக்காது...
7.ஆடி அடங்கும் வாழ்க்கையடா...
8.அச்சம் என்பது மடமையடா...
9.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
10.ஏன்பிறந்தாய் மகனே...ஏன்பிறந்தாயோ...
வாழ்க வளமுடன்.
வேலன்.
பொங்கீட்டீங்க அண்ணே..
ஆமாம்.. இந்த மிசா சம்பவத்தில், ஸ்டாலின் , ஆற்காடு, சிட்டிபாபு போன்றவர்களை, உள்ளே விட்டு நொங்கு எடுத்த காங்கிரஸ்காரர்களுடன் எதற்க்கு கூட்டணி வைத்து கும்மி அடிக்கிறார்கள்?..
பணமா?.. இல்லை பாசமா?...
"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"
I VOTE 2 ELECTIONS SO FAR , I VOTE DMK ONLY, BUT AFTER KUSHBOO JOIN DMK I WILL NOTE DMK ANYMORE. I PREFER A.IA.DM.K OR VIJAYAKANTH PARTY
ராசபக்ஷேவும் சோனியாவும் கொலை வெறி கொண்டு அப்பாவி மக்களை கொன்று ஒழித்தபோது பதவிக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நாடகமாடிய இந்த தமிழ் ஈன காவலன் இப்போது மன நிம்மதி இல்லாமல் அழிந்து கொண்டிருக்கிறார்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
கருத்துரையிடுக