பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, டிசம்பர் 5

ஸ்டீவி ஒன்டர் ( Stevie Wonder)

நாம் எழுதி இங்கு எதுவும் மாறிவிடப்போவது இல்லை என்று தெரிந்தாலும்,சரி, பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தான் எழுதுகிறேன்.சூடாக, கோபமாக எதையாவது எழுதிவிட்டு மண்டை காய்வதை சற்று தள்ளிவைக்கலாம்.

ஸ்டீவி ஒன்டர் ( Stevie Wonder) என்ற பாப் இசை பாடகரின் ஆல்பங்கள் உங்களுள் பலருக்கு தெரிந்திருக்கலாம்.1985 ஆம் வருடம் என்று நினைவு,  சென்னை தூர்தர்ஷன் ஒளி பரப்பு வண்ணத்திற்கு மாறியது. முதன் முதலில் டி.வி. (கலர் ) வாங்கியதும் அப்போதுதான். அப்போதெல்லாம் தமிழ் நிகழ்சிகளின் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். மற்ற நேரங்களில் டெல்லி நிகழ்ச்சிகள் தான் அதிகம் வரும். வேறு வழி இன்றி அதையே பார்க்கும் போது அதனால் நிறைய நல்ல இந்தி சீரியல்கள், இந்தி மற்றும் ஆங்கில படங்கள் என்ற அறிமுகமாகியது.

ஒருநாள் இரவில் ஐரோப்பாவில் அந்த வருடம்  நிகழ்ந்த கிராமி அவார்ட் நிகழ்ச்சியை காட்டினார்கள். இசை உலகில் விற்பன்னர்களுக்கு ஐரோப்பாவில் கிராமி அவார்ட் வாங்குவது என்பதே உச்ச கட்ட நோக்கம். அன்று அந்த விழாவில் ஸ்டீவி ஒன்டர் பெயர் அறிவிக்கப்பட்டு, பெருத்த ஆரவாரங்களுக்கு இடையே அவர் இந்த புகழ் பெற்ற பாடலைத்தான் பாடி மகிழ்வித்தார். அப்போதுதான் எனக்கு ஸ்டீவி ஒன்டர் பாடல்கள் அறிமுகம் ஆயின. Woman in Red என்ற ஆல்பத்தில் பிற பாடல்களுடன் இந்த அருமையான பாடலும் இருக்கும். 

காதல் உணர்விற்கும்,பிரிவிற்கும், பருவ காலங்களின் மாறு பாடுகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு போலும். இந்த பாடல் அதைத்தான் எனக்கு உணர்த்தியது.அமைதியான இசையும் பாடல் வரிகளும் நம்மை கண் மூடி கிறங்க வைக்கும்.நீங்களும் தான் அதனை அனுபவித்து சற்று ரிலாஸ் செய்துகொள்ளுங்களேன். 

I JUST CALLED TO SAY I LOVE YOU!




32 comments:

எப்பூடி.. சொன்னது…

அவர் பாடிறது ஒண்ணுமே புரியல !!!!! அவருக்கு சரியா தமிழ் வராதுபோல :-)

Philosophy Prabhakaran சொன்னது…

// அவர் பாடிறது ஒண்ணுமே புரியல !!!!! அவருக்கு சரியா தமிழ் வராதுபோல :-) //
Same Feeling...

இதுக்கு உதித் நாராயன் பாடுற தமிழ் பாடல்களையே கேக்கலாம்...

எஸ்.கே சொன்னது…

நல்லா ரசிக்கும்படியா இருக்கு சார்!

Gayathri சொன்னது…

தெய்வமே இந்த பாட்டு பெருதேரயாம வெறும் ராகம் மட்டும் ஞாபகம் இருந்து ரொம்பவே தேடினேன்..
எதிர்பார்க்காம உங்க பதிவுல பார்த்துட்டேன்..நன்றி

இதுலேந்துதானே அந்த ஹிந்தி பாடு காப்பி அடிசுருக்காங்க..maine pyar kiya la

மாணவன் சொன்னது…

அருமையான ரசனை,

பகிர்வுக்கு நன்றி சார்

தொடரட்டும் உங்கள் பணி

Madhavan Srinivasagopalan சொன்னது…

Present Sir

vanathy சொன்னது…

super song!

pichaikaaran சொன்னது…

நல்ல பகிர்வு

பொன் மாலை பொழுது சொன்னது…

// அவர் பாடிறது ஒண்ணுமே புரியல !!!!! அவருக்கு சரியா தமிழ் வராதுபோல :-) //
-------எப்பூடி சொன்னது.

கிண்டல் நல்லாத்தான் இருக்கு. இந்த பாட்டு தமிழ் பாட்டுத்தான். மறுபடியும் கேட்டு பாருங்க கண்ணா!

பொன் மாலை பொழுது சொன்னது…

// இதுக்கு உதித் நாராயன் பாடுற தமிழ் பாடல்களையே கேக்கலாம்...//

-----philosophy prabhakaran சொன்னது…

நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//நல்லா ரசிக்கும்படியா இருக்கு சார்//

----------எஸ்.கே. சொன்னது.

நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// இதுலேந்துதானே அந்த ஹிந்தி பாடு காப்பி அடிசுருக்காங்க..maine pyar kiya la //
---------------காயத்ரி சொன்னது.

நம்ம குட்டிபாப்பா காயத்ரிக்கு என்ன ஒரு இசை ஞானம் ?
காயத்ரி பாப்பா சொலவது சரியே. இந்தப்பாடல்தான் மைனே பியார்கியா இந்திப்படத்தில் டைட்டில் மியுசிக்காக வரும்.
நம்ம எஸ்.பி. பாலா தான் பாடியிருப்பார்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// அருமையான ரசனை,

பகிர்வுக்கு நன்றி சார் //
-----// மாணவன் சொன்னது

வருகைக்கு நன்றி. ஆனா உங்க பாராட்டு எனக்கு வெட்கமா இருக்கு!):))))

பொன் மாலை பொழுது சொன்னது…

// Madhavan Srinivasagopalan சொன்னது…
Present Sir


வருகைக்கு நன்றி சார்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// vanathy சொன்னது…
super song! //

நன்றி வானதி. அழகான பெயர்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//பார்வையாளன் சொன்னது…
நல்ல பகிர்வு//


நன்றி.

சிவராம்குமார் சொன்னது…

செம பாட்டுங்க!!! ஸ்டீவி ஒன்டரைத்தான் "மின்சாரக் கனவு" படத்தில் நாசர் நகல் எடுத்திருப்பார்!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அவர் பாடிறது ஒண்ணுமே புரியல !!!!! அவருக்கு சரியா தமிழ் வராதுபோல :-)//


ஏன் போயி கத்து குடுங்களேன்......:]]]

Good citizen சொன்னது…

இந்த பாடல் 1988 என்று நினைக்கிறேன் நான் கேட்டு சளிக்காத பாடல்,ஸ்டீவிஹோண்டர் கண் பார்வையற்றவர்,,இருந்தாலும் அவர் பாடிக்கொண்டே பியானோ வாசிக்கும் ஸ்டைலே தனி அழகு. நம்மூர் தமிழாங்கிலப் பாடகி உஷா உதுப் தான் பாடும் எல்லா மேடைகளிலும் இந்த பாடலை பாடாமல் இருக்கமாட்டார்,,ஸ்டீவின் "Partime lover" ,, "For your love ,Ijust do anything" என்க்கு ரொம்பவும் பிடிக்கும், அதுதான் அவருடைய பிரபலமான கடைச்சி பாடல் என்று நினைக்கிறேன்
links are below,,Listen and Enjoy

http://www.youtube.com/watch?v=jN2AdOjI4FI

http://www.youtube.com/watch?v=jZ1TJjHmPEM&feature=related

பொன் மாலை பொழுது சொன்னது…

// செம பாட்டுங்க!!! ஸ்டீவி ஒன்டரைத்தான் "மின்சாரக் கனவு" படத்தில் நாசர் நகல் எடுத்திருப்பார்!!!
------சிவா என்கிற சிவராம்குமார் சொன்னது
நன்றி. உங்களின் ஊகம் சரிதான். மின்சார கனவு படம் பார்க்கும் போதே நாங்கள் அணைவரும் இதே போன்ற
ஊகங்களை பரிமாரிக்கொண்டதுண்டு.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி நாஞ்சில் மனோ

பொன் மாலை பொழுது சொன்னது…

// இந்த பாடல் 1988 என்று நினைக்கிறேன் நான் கேட்டு சளிக்காத பாடல்,ஸ்டீவிஹோண்டர் கண் பார்வையற்றவர்,,இருந்தாலும் அவர் பாடிக்கொண்டே பியானோ வாசிக்கும் ஸ்டைலே தனி அழகு. நம்மூர் தமிழாங்கிலப் பாடகி உஷா உதுப் தான் பாடும் எல்லா மேடைகளிலும் இந்த பாடலை பாடாமல் இருக்கமாட்டார்,,ஸ்டீவின் "Partime lover" ,, "For your love ,Ijust do anything" என்க்கு ரொம்பவும் பிடிக்கும், அதுதான் அவருடைய பிரபலமான கடைச்சி பாடல் என்று நினைக்கிறேன்
links are below,,Listen and என்ஜாய் //

------------------moulefrite சொன்னது

தகவல் பகிர்வுகளுக்கு நன்றி. உண்மைதான் அவருடைய கடைசி பாடல் I just do anything என்றுதான் அவருடைய வாழ்கை குறிப்பிலும் படித்துள்ளேன்.உலகம் போற்றிய உன்னத இசைமேதைகளுள் அவரும் ஒருவர்.
வருகைக்கு நன்றி.

Azhagan சொன்னது…

One of my favorites!. Thank you

மோகன்ஜி சொன்னது…

நல்ல ரசனை உங்களுக்கு கக்கு!

THOPPITHOPPI சொன்னது…

என்னங்கண்ணே இப்படி திடிர்னு வித்தியாசமான பதிவு

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி அழகன்

பொன் மாலை பொழுது சொன்னது…

// மோகன்ஜி சொன்னது…
நல்ல ரசனை உங்களுக்கு கக்கு //

மிக்க நன்றி மோகன்ஜி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// என்னங்கண்ணே இப்படி திடிர்னு வித்தியாசமான பதிவு//
............THOIPPITHOPPI சொன்னது.
உண்மையில் இப்படித்தான் நான் எழுதிவருகிறேன். காட்டமாக ,சூடாக எழுதிக்கொண்டேயிருப்பேன் பின்னர் சற்று தளர்ந்து, வேறு பல திசைகளிலும் சென்று ஒரு ரவுண்ட் வருவதற்குள் ஏதாவது வேறு ஓரு நிகழ்வு நடந்துவிடுகிறது.
மறுபடியும் சற்று சீரியஸ் பதிவுகள் . பின்னர் மீண்டும் வேறு மாதிரியானவை. நீங்கள் என்னுடைய முந்தய, பழைய பதிவுகளை ஒருதரம் மேலோட்டமாக பார்த்தாலே இது புரியம்.

Unknown சொன்னது…

உங்கள் variation bowling super.

Thoduvanam சொன்னது…

you have a singing heart with musical ears..

பொன் மாலை பொழுது சொன்னது…

Kalidoss சொன்னது…
//you have a singing heart with musical ears..//
:)))))))) May be!
வருகைக்கு நன்றி !

பொன் மாலை பொழுது சொன்னது…

விக்கி உலகம் சொன்னது…
உங்கள் variation bowling super

Thanks a lot Boss.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக