பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, டிசம்பர் 3

கூட்டு கலவாணிகள் !


இடது புறம் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள். 
Courtesy Times of India  

இந்த அமெரிக்க பெண்மணி, அதுதான் அமெரிக்க வெளி உறவு துறை செயலர் ஹில்லாரி கிளிண்டன் என்ன நினைத்துக்கொண்டிருகிறாள் ? "இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்க துடியாய் துடிக்கிறது "என்று நக்கல் பண்ணினாள் என்று விக்கிலீக்ஸ் போட்டு உடைகிறது. நம்ம ஊர் இத்தாலிய அடிமைகளோ சற்றும் வெட்கம் இன்றி இதற்கு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. இதுபோன்ற அமெரிக்காவின் கமெண்ட்ஸ் எங்களை கேவலப்படுத்துகிறது என்று சொல்லவும் லாயக்கிலாமல் அமெரிக்காவுக்கு பூட்ஸ் துடைபதிலேயே கவனமாக உள்ளனர். 

அதுதான் போகட்டும் என்றால் இன்றுவெளி வந்த விக்கிலீக்ஸ் செய்திகளில் பாகிஸ்தானும் அமெரிக்காவும் பயங்கரவாதத்தை உலகில் மற்ற இடங்களில் பரப்புவதை ஒரு உடன் பாட்டுடன்தான் செய்கின்றனர் என்ற விளக்கத்தை அளிக்கிறதே!
26/11 மும்பை தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு, அந் நாட்டு ராணுவம்  மற்றும் உளவு துறையான I S I மூலகாகவே கூட்டாக லக்சர் -இ -தொய்பா ஆட்கள் மூலம் மிக திறமையாக செயல் படுத்தப்பட்டது என்ற உண்மையை கூட வெளியிடாமல் மறைத்து வைக்கும்படி இந்தியாவை வற்புறுத்தினார்கள் என்பது.

பாகிஸ்தானும் அந்நாட்டின் ராணுவ மற்றும் உளவு துறையும் இணைந்து செயல் பட்டதை இந்தியமக்கள் அறிந்துகொண்டால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள பதட்டம் அதிகரித்துவிடுமாம்.

பாகிஸ்தானின் I S I தலைவன் அஹமத் சுஜா பாட்ஷா வின் முக்கியமான பங்களிப்பை இந்தியா வெளியிட கூடாதவாறு அவர்களை (இந்தியாவை) நிற்பந்திக்கவேண்டும் என்ற செய்தி இஸ்லாமாபாத் இல் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து தங்கள் நாட்டிற்கு (அமெரிக்காவிற்கு ) செல்கிறது .

பாகிஸ்தானில்எப்போதும்  நடப்பது ஒரு ராணுவ, மத வாத ஆட்சிதான் என்பது கூட இந்த செய்தியில் தெளிவாகிறது.
அந்நாட்டு ஆசிப் அலி சர்தாரி (பெனாசீர் கணவன் ) 26/11 மும்பை தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கப்பட தன் நாட்டு உளவு துறை I S I அஹமத் சுஜா பாட்ஷாவை இந்தியா அனுப்பிவைக்க எத்தனித்தபோது அதனை தடுத்து நிறுத்தியதும் அந்நாட்டு ராணுவ ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் க்யாணி தான் என்பதும் வெளிப்படை. முழு முதல் குற்றவாளி இந்த பாகிஸ்தான் தான் என்பதை பல வழியிலும் அறிந்துள்ள அமெரிக்கா இன்னமும் அதனுடன் நல்லுறவு கொண்டு உதவிகளையும் தளவாடங்களையும் வாரி வழங்கிய வண்ணம் உள்ளது.அவைகள் அத்தனையும் இந்தியாவை நோக்கியே எதிராக திருப்பிவிட படுகின்றன.பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இந்தியஅரசு ஏன் இன்னமும் அமெரிக்காவின் கை பொம்பையாக இருக்க வேண்டும்?  புரியவில்லை. 

நம்மை, நம் நாட்டை நம் மக்களை காத்துக்கொள்ள நமக்கு உரிமை இல்லையா? 
நாம் ஏன் இன்னமும் இந்த அமெரிக்கர்களை நம்ப வேண்டும்? 
ஏன் ஒவ்வொன்றுக்கும் அவர்களின் கருத்துக்களை அறிந்தே நாம் செயல்பட வேண்டும்?
அமெரிக்காவிடம் நாம் ஏன் ஒவ்வொரு தடவையும் இவர்கள் பற்றி முறை இட வேண்டும்? 

இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்கர்களுக்கு வியாபாரம் தவிர வேறு ஒருஅக்கறையும் நம் நாட்டின் மீது இருக்க வழி இல்லை. 
பயங்கரவாதம் இல்லையென்றால் தனக்கு நாட்டாமை  செய்ய இடமிருக்காது அதனால் ஆயுதங்கள் விலைபோகாது என்ற எண்ணத்தில் தான் அமெரிக்கா பாகிஸ்தானை இன்னமும் போற்றி வளர்த்து வருகிறது. என்றாவது ஒருநாள் இந்தபாகிஸ்தானியர்களே  அமெரிக்கா வின்  வெள்ளை மாளிகையையும் தகர்த்து எறிவார்கள். உலகில் பயங்கர வாதிகளை உற்பத்தி செய்வது இஸ்லாம் அல்ல . மாறாக இந்த அமெரிக்காவே !












13 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

வக்காளி ஏன் இப்படி பண்றானுங்க?
இதுல ஒபாமாவுக்கு என்னா வரவேற்பு ?
காங்கிரஸ்க்கு சீக்கிரம் முடிவு கட்டுங்கப்பா ..

புலிகுட்டி சொன்னது…

இந்தியா பிரிட்டிஷிடம் விடுதலை பெற்று,அமெரிக்காவிடம் அடிமையாகிவிட்டது.காரணம் காங்கிரஸ்ஸூம்,அந்த அமெரிக்க உலவாளியும்தான்.

pichaikaaran சொன்னது…

கருத்து ஏற்கத்தக்கது...

அவள் , இவள் ஏற்கத்தக்கதல்ல

bandhu சொன்னது…

முடிந்தால் சமீபத்தில் வெளிவந்த Ghostwriter படம் பாருங்கள். அதில், பிரிட்டனின் டோனி ப்ளைர் ஏன் கிட்டதட்ட அமெரிக்காவின் அடிமையாகவே இருந்தார் என்பதற்கு ஒரு விடை அளித்திருப்பார்கள். எனக்கென்னவோ நம் மன்மோஹனுக்கும் அந்த விடை பொருத்தம் என்று தோன்றுகிறது!

மாணவன் சொன்னது…

//நம்மை, நம் நாட்டை நம் மக்களை காத்துக்கொள்ள நமக்கு உரிமை இல்லையா?
நாம் ஏன் இன்னமும் இந்த அமெரிக்கர்களை நம்ப வேண்டும்?
ஏன் ஒவ்வொன்றுக்கும் அவர்களின் கருத்துக்களை அறிந்தே நாம் செயல்பட வேண்டும்?
அமெரிக்காவிடம் நாம் ஏன் ஒவ்வொரு தடவையும் இவர்கள் பற்றி முறை இட வேண்டும்?//

நியாயமான கோபத்துடன் அனைவரையும் சிந்திக்க தூண்டுகின்ற வரிகள்....

அருமை

//உலகில் பயங்கர வாதிகளை உற்பத்தி செய்வது இஸ்லாம் அல்ல . மாறாக இந்த அமெரிக்காவே !//

உண்மையான கருத்து

THOPPITHOPPI சொன்னது…

எனது பயமெல்லாம் ஒபாமா எதற்க்காக இந்தியா வந்து சென்றார் என்பது தான். இங்கு இருப்பவர்கள் அடிக்கும் கொள்ளை பாத்தாதென்று அவர்கள் நாட்டு தொழில் அதிபர்களையும் லிங்க் செய்துவிட்டான் .

டிலீப் சொன்னது…

தகவல் உலகம் - விருதுகள்
http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

எஸ்.கே சொன்னது…

//இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்கர்களுக்கு வியாபாரம் தவிர வேறு ஒருஅக்கறையும் நம் நாட்டின் மீது இருக்க வழி இல்லை// முற்றிலும் உண்மை!

Unknown சொன்னது…

//வக்காளி ஏன் இப்படி பண்றானுங்க?
இதுல ஒபாமாவுக்கு என்னா வரவேற்பு ?
காங்கிரஸ்க்கு சீக்கிரம் முடிவு கட்டுங்கப்பா//

எங்க முடிவு கட்டபோரானுங்க.. குவாட்டருக்கு கோடி புடிக்கிற தொண்டனுங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அமெரிக்கா.. இத்தாலி..
ஒரே வெளி நாட்டுப்போரா இருக்கு..

ஆமா பாஸ்.. இப்ப நாம யார் ஆட்சீயில இருக்கோம்?..

:-)

தினேஷ்குமார் சொன்னது…

நம்மை, நம் நாட்டை நம் மக்களை காத்துக்கொள்ள நமக்கு உரிமை இல்லையா?
நாம் ஏன் இன்னமும் இந்த அமெரிக்கர்களை நம்ப வேண்டும்?
ஏன் ஒவ்வொன்றுக்கும் அவர்களின் கருத்துக்களை அறிந்தே நாம் செயல்பட வேண்டும்?
அமெரிக்காவிடம் நாம் ஏன் ஒவ்வொரு தடவையும் இவர்கள் பற்றி முறை இட வேண்டும்?

Unknown சொன்னது…

விடுங்க பாஸ், இன்னும் எததனை நாளக்கைக்குதான் வலிக்காத மாதிரியே நடிப்பாங்கன்னு பார்ப்போம்.

சிவராம்குமார் சொன்னது…

முதுகெலும்பு முறிந்தவர்கள்தான் பதவியில் உள்ளனர்! அவர்கள் இப்படித்தான்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக