பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், அக்டோபர் 18

கொட்டிக்கிடக்கிறது இங்கே - இசை பிரியர்களுக்கு :


நமக்கு மிகவும் பிடித்துப்போன பாடல் ஒன்று அது எங்குமே கிடைக்க வில்லை. என்ன செய்வது? அந்த பாடலை சொந்தம் கொண்டாடி நம்மிடம் வைத்துக்கொள்ள மனம் ஏங்கும். ஆனால் அந்த குறிப்பிட்ட பாடல் மட்டும் கிடைக்காமல் நம்மை ஏங்க  வைக்கும்.நாமும் சற்று மறந்து போவோம். ஆனால் நாம் ஏதோ ஒன்றை தேட, அந்த சமயம் "இதோ நானும் இருக்கிறேன் பார் " என்று நம் எதிரே வந்து நின்று, நம்மை திக்கு முக்காட செய்யும் பாடல்களும் உண்டு. எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இது. 

நீண்ட நாட்கள் தேடி, என்றோ ஒரு நாளில் அந்த பாடலை அடையும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு இணை இல்லை. ஒன்றை நான் மன நிறைவுடன் சொல்லிக்கொள்ள விழைகிறேன். நான் இது நாள் வரை என் மனதுக்குள் குறித்து வைத்துள்ள அணைத்து பாடல்களையும் இப்போது என்னிடமே பெற்றுக்கொண்டுள்ளேன். அளவற்ற ஆனந்தமும் மன நிறைவும் தந்த அந்த கணங்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசை. மொழி வேறு பாடு இல்லாமல் இசையை ரசிக்கும் கிறுக்குத்தனம் என்னிடம் .மேல் நாட்டு பாப் மியூசிக் ஆகட்டும், இந்தி திரைப்பட பாடல்கள் ஆகட்டும், நம் தமிழ் பாடல்களாகட்டும், ஏன், புராதன இசையாகட்டும்  ( கர்நாடக சங்கீதம் என்று அதனை சொல்லவே மனமில்லை) எதுவாக இருந்தாலும் என் விருப்பங்களில் அடங்கும் அணைத்து தொகுப்புகளையும் இன்று சேமித்து வைத்துள்ளேன்.

நான் பாடல்கள் கேட்கும் முறையே சற்று கேனதனமாகவே இருக்கும். உண்மைதான். தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக பாடல்களை ரசிக்க எனக்கு முடியாது. என்னுடைய i pod இல் அல்லது லாப் டாப் ப்ளேயரில் அல்லது CD/DVD ப்ளேயரில் கூட REPEAT OPTION இல் தான் எப்போதும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்க விரும்பினால் அந்த ஒரு பாடல் மட்டுமே தொடர்ந்து பல நாட்களுக்கு ஓடிகொண்டிருக்கும். பிறகு வேறு  ஒரு பாடல், அதுவும் பல நாட்களாக ஓடிகொண்டிருக்கும். என்னை சந்திக்க வரும் நண்பர்களும் கூட இதனால் என்னை "ஒரு மாதிரியாகவே " பார்ப்பார்கள். எப்படி ஒரே பாடலை தொடந்து நாள் கணக்கில் கேட்டுகொண்டிருகிறாய்?  " அது அப்படிதான்'" என்று பதில்  சொல்லிவிட்டு அவர்களுக்காக வேறு பாடலை மாற்றுவேன். சொல்ல வநத செய்தியை விட்டு விட்டேன்.

இந்த இணைப்பில் சென்று உங்களுக்கு வேண்டிய பாடல்களை வாரிச்செல்லுங்கள். ஆங்கிலம் தவிர மற்றைய மொழிகளில் உள்ள அணைத்து இசை வகை களும் இங்குள்ளது.புராதன இசை அல்லது திரைப்பட இசை, மதம் சார்ந்த பக்தி பாடகள் எதுவும் இங்கு கிடைக்கும். ஆனால்  சற்று பொறுமையுடன் தேடவேண்டும். பாடல் வரிகள், பின்னணி பாடியவர்கள், திரைப்படத்தின் பெயர் அல்லது இசை அமைப்பாளர், படத்தின் ஹீரோ, ஹீரோயின் என்று நமக்கு தெரிந்த முறையில் தேடினாலும் நாம் தேடுவது கிடைத்துவிடும் நிச்சயம். 




இந்த தளத்தில் சென்று வழக்கம் போல உங்கள் கணக்கை தொடக்கி பின்னர் உங்களுக்கு வேண்டிய பாடல்களை தர விரக்கம் செய்யலாம். முற்றிலும் இவைகள் இலவசமே!

பழைய கிராமபோன் ரிகார்டில், பின்னர் ஒலி பேழைகளை மட்டும் இருந்த பாடல்களை MP3 வடிவங்களில் மாற்றி இந்த தளத்தில் ஏற்றி, பிறருக்கும் அவைகள் பயன்படும் வகையில் பணியாற்றியுள்ள அனேக இசை பித்தர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றியினை தெரிவிப்போம். 




13 comments:

பெயரில்லா சொன்னது…

கள்ளி கட்டில் பிறந்த தாயே !
என்னை கல்லோடிச்சி வளர்த்த நீயே !
முல்லுகாட்டில் முளைச்ச நீயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே !
- வைரமுத்துவின் வரிகள் ...மீண்டு ஒரு அம்மாவை பற்றிய பாடல்..
எந்த சூழலில் வளர்ந்த மனிதனாக இருந்தாலும் ஒரு துளி கண்ணீர் நிச்சயம்
படம் : தென்மேற்கு பருவக் காற்று...
இந்த பாடலை கேட்க அல்லது பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை அழுத்தவும்
http://onlinetamilsongs.blogspot.com/2010/10/thenmerku-paruvakatru-songs-download.html

Philosophy Prabhakaran சொன்னது…

சரியாக சொன்னீர்கள்... நானும் cooltoad தளத்தினை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறேன்...

ப.கந்தசாமி சொன்னது…

தகவலுக்கு மிகவும் நன்றி, மாணிக்கம்.

மாணவன் சொன்னது…

அருமை நண்பரே, பயனுள்ள தளம்தான் நானும் பயன்படுத்தி வருகிறேன் பொறுமையாக தேடினால் ஓரளவுக்கு எல்லா பாடல்களும் கிடைத்துவிடும்
பகிர்ந்தமைக்கு நன்றி
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் சொன்னது…

மிக்க நன்றி..அண்ணே...!

RVS சொன்னது…

காவிரிப் பெண்ணே வாழ்க... உந்தன் காதலன் சோழ வேந்தன் வாழ்க... கக்கு வாழ்க.. நல்ல பாட்டு... இது www.coolgoose.com என்ற நாமகரணத்தோட இருக்கும் போதே தெரியும். நல்ல "சைட்" அறிமுகம்.

சசிகுமார் சொன்னது…

உபயோக படுத்தி கொள்கிறேன் நன்றி அண்ணே

தமிழ் உதயம் சொன்னது…

நானும் cooltoad தளத்தினை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறேன்..

எஸ்.கே சொன்னது…

மிக நல்ல அறிமுகம் நன்றி!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

ஆமாம் நண்பா! அருமையானத்தளம். நானும் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் பகிர்ந்துக் கொள்ளாததை நினைத்து வருந்துகிறேன். ஏகப்பட்ட பாடல்கள் குவிந்துக் கிடக்கின்றன. நாம் விரும்பும் பாடல் எந்த இடத்தில் இருக்கும் என்றுக் கண்டுப்பிடிக்க கொஞ்ச பரிச்சயம் ஆகவேண்டும். ஆனால் நிச்சயமாக அங்கு இருந்தே இருக்கும். வாழ்த்துக்கள்!

Gnana Prakash சொன்னது…

அருமையான தகவல் நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லா சொன்னீங்கண்ணே! இந்த வெப்தளம் நானும் நீண்ட நாள் பயன்படுத்தி வருகிறேன். இன்னொரு தளமும் நல்ல கலக்சன்கள் வைத்துள்ளது. www.oruwebsite.com (தேடுவதும் சுலபம்)

மகேஷ் : ரசிகன் சொன்னது…

நல்ல தளம்.. அரிதான பாடல்கள் நிறைய அசால்ட்டாக கிடைக்கின்றன... நீண்ட நாள் பயன்படுத்தி வருகிறேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக