பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூன் 24

வெட்ககேட்டை வேறு எப்படி சொல்வதாம்?!

 தமிழின் தொன்மையையும் அதன் தனித்தன்மையையும் அறிந்துகொண்டு தமிழை செம்மொழி வரிசையில் கொண்டுவரவேண்டும் என்ற கருத்தினை முதன் முதலில் வெளியிட்டவர் பண்டிதர் சூர்ய நாராயண சாஸ்திரியார் . இன்று எல்லோரும் தொட்டதெற்கெல்லாம் வசைபாடும் 'பார்பன' சமூகத்தில் வந்தவர்தான். 
வடமொழியில் அமைந்த தன் இயற்பெயரை "பரிதி மால் கலைஞர் " என்று தூய தமிழில் மாற்றிகொண்ட உண்மையான தமிழ் மகனார்.

அதற்க்கு பிறகு பல நீண்ட யுகங்களுக்கு பிறகு,மனப்பூர்வமாக முயன்று, 

தமிழை செம்மொழி என்று அறிவிப்பை வெளியிட்டத நமது அப்துல்  கலாம் தான்.
இந்தியாவின் முதல் குடிமகனாக பதவி வகித தமிழர். விஞானத்திலும் சாதனை படைத்த தமிழர்.




ஆனால் நேற்று அவர் மும்பை சென்று , அங்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் டைம்ஸ் ஆப் இந்தியாவின்  கார்டூனிஸ்ட் ஆர். கே . லட்சுமணன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தமிழக அரசு அழைத்திருந்தால் முதல் நபராக ஓடிவருபவர் கலாம். ஏன் வரவில்லை?

ஏன் கலந்துகொள்ளவில்லை என்று ஆளும் வர்க்கமும், கலாம் அவர்களுமே விளக்க வேண்டும்.
என்னதான் காரணமாக இருந்தாலும் அப்துல் கலாம் அவர்கள் இல்லாமல் இந்த செம்மொழி மாநாடு 
வெறும் கருணாநிதியின் வீட்டு களியாட்டம் தான். 

எல்லாம் சுயக்காதலும், "தானே எல்லாம் " ஆக இறுக்க வேண்டும் என்ற அல்ப புத்திகளே காரணம்.

//கல்யாணவீட்டில் மாப்பிள்ளையாய், எழவு வீட்டிலும் மாலை விழும் பிணமாய் //

என்ன தான் வயது ஆனாலும், இவர்களுக்கு உள்ள இந்த 'சின்னத்தனம் ' மாறவே மாறாது!

 இது போன்ற குணங்களில் தமிழக அரசியல் வாதிகள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறி நாறும் மட்டைகளே!
ஆம்பிளை ஜெயலலிதா!! 
வெட்ககேட்டை வேறு எப்படி சொல்வதாம்?!


அடக்கடவுளே ! இது எனது அம்பதாவது இடுகையாம். கணக்கு காண்பிக்கிறது Dashboard!!



17 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அடக்கடவுளே ! இது எனது அம்பதாவது இடுகையாம். கணக்கு காண்பிக்கிறது Dashboard!!
///

வாழ்த்துக்கள் பாஸ்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

தமிழக அரசு அழைத்திருந்தால் முதல் நபராக ஓடிவருபவர் கலாம். ஏன் வரவில்லை?
//

அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே..”அழைத்திருந்தால்”

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//என்ன தான் வயது ஆனாலும், இவர்களுக்கு உள்ள இந்த 'சின்னத்தனம் ' மாறவே மாறாது!//

இது போன்ற குணமுடைய முதல்வர் அமைந்தது துரதிஷ்டம் தான்!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//இது எனது அம்பதாவது இடுகையாம். //

மச்சி .... நூறாவது பதிவிற்குள் அட் லீஸ்ட் ஒரு ஆட்டோவையாவது நாம மீட் பண்ணிடலாம் .....

Menaga Sathia சொன்னது…

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ!!

ப.கந்தசாமி சொன்னது…

நடைமுறைச்சிக்கல்கள் இருந்திருக்கலாம். (Protocol formalities). இந்தக்கூட்டத்திற்கே கோயமுத்தூர் அவினாசி ரோடு தாங்கவில்லை.

சசிகுமார் சொன்னது…

good post

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பட்டா அண்ணே !
எனக்கெனவோ இது பெரும் குறையாகவே படுகிறது.
கலாம் அவர்கள் வந்திருக்க/ வரவழைக்க பட்டிருக்க வேண்டும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

நம்மை ஆள்பவர்களை, அவர்களின் அல்ப /சின்னத்தனங்களை நினைத்து
நாம் அவமானப்படலாம் மாப்ள.

பொன் மாலை பொழுது சொன்னது…

மிக்க நன்றி சகோ. மேனகா.
இதுதான் நிஜ வாழ்விலும் நமக்கு வாய்த்தது .
சகோதரிகளின் பாச வெளிபாடே தனிதான்.

பொன் மாலை பொழுது சொன்னது…

Dr.P.K. சார், உங்கள் மனம் விட்டு சொல்லுங்கள்? கூட்டம் நம்ம ஊரில் எதற்கு தான் வராது?
நாமெல்லாம் தமிழர் என்ற பெருமையை நமக்கு தந்த அந்த மேதையை அல்ப காரணங்களுக்காக
புறக்கணித்தது சரியா?
கலாம் இல்லாத செம்மொழி மகா நாட்டு விழா - அதில் பெருமை பட ஒன்றும் இல்லை எனக்கு.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி சசி குமார்

அன்புடன் அருணா சொன்னது…

50க்கு வாழ்த்துக்கள்!.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ. அருணா !

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//கல்யாணவீட்டில் மாப்பிள்ளையாய், எழவு வீட்டிலும் மாலை விழும் பிணமாய் //

ஒண்ணும் சொல்ல முடியலேண்ணே! இந்த நாதாரிங்கள........ராஸ்கல்ஸ்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//அடக்கடவுளே ! இது எனது அம்பதாவது இடுகையாம். கணக்கு காண்பிக்கிறது Dashboard!!//

சூப்பர்! வாழ்த்துக்கள் பாஸ்!

Guruji சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக