பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜூன் 8

புதிய பதிவர்களே வாருங்கள்-ஒன்று




புதிய பதிவர்கள் சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு பயனாகும் வகையில் சில அன்பர்களின் வலைப்பதிவுகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அணைத்து தளங்களிலும்  பஞ்சமில்லாது தேவையான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. "பழைய இடுகைகள்" அல்லது "Older Posts இந்த பகுதிகளில் சென்று மேலும் உங்களுக்கு வேண்டிய தகவல்களை எடுத்துக்கொள்ளலாம்.இது போன்ற நல்ல தகவல் பரிமாற்று தளங்களை மறவாமல் Book Mark செய்து வைத்துக்கொள்ளவும். 


முதலில் அதே கண்கள் - டவுசர் பாண்டி 

தொழில் நுட்பங்களை "மெட்ராஸ் தமிழில் " எழுதும் இவர் நான் இங்கு வந்து நின்ற போது ,தானாக வந்து "உன்ன போல ஆளுதா தான் அண்ணாத்தே நமக்கு வேணும் ' என்று சொல்லி நிறைய விபரங்களை சொல்லித்தந்தவர். கணணி தொழில் நுட்பங்களை கிண்டலுடன் விளக்கும் இவரின் தளம் அனைவராலும் விரும்பப்படும். காணாமல் போனவர் மீண்டும் வந்துவிட்டதாக அறிகிறேன்.
**********************************
 உங்கள் வலைத்தளம் அமைக்கும் வேளைகளில் உதவிட அதனை மெருகூட்டி உங்கள்  விருப்படி அழகூட்ட கீழே உள்ள தளத்திற்கு சென்று தேவையானவைகளை செய்துகொள்ளலாம்
நண்பர் சசி குமார், இவரின் வலைத்தளம். அழகாகவும்,அருமையாகவும் இருக்கும். சசியின் தளத்தில்
 'தினமும் ஒரு லொள்ளு " அனைவராலும் ரசிக்கப்படும் ஒன்று.

வலைத்தளங்களை உங்கள் விருப்பபடி மாற்றி அழகூட்ட:
வந்தேமாதரம். கீழ்கண்ட Link ஐ கிளிக் செய்துகொண்டு அங்கு செல்லவும்.
***********************************
அடுத்து நண்பர் (மாப்பிளை) வேலன். புதிய பதிவர்கள், "பிரபலமான கொம்பு முளைத்த பதிவர்கள்" என்ற எந்த 
பதவி பித்தும் வேறுபாடும் இல்லாமல் இவர் அனைவரையும் அன்புடன் அரவணைத்து தேவையான தகவல்களை 
அள்ளித்தருவார்.கணணி தொழில் நுட்ப தகவல்கள் பகுதியில் வேலனின் வலைத்தளம் எல்லோராலும் போற்றப்படும் ஒன்று. நிறைய அயல்நாட்டு நண்பர்கள் கூட வேலனிடம் ஆலோசனைகளை பெறுவதுண்டு.
போட்டோ ஷாப் பற்றின அணைத்து முறைகளையும் எளிமையாக விளக்கங்களை இங்கு காணலாம்.
போட்டோ ஷாப் "மாஸ்டர் "வேலன் என்று நான் இவருக்கு கருத்து எழுதுவந்துண்டு   நிறைய அவார்டுகளை 
இவர் தொழில் நுட்பம் பகுதியில் பெற்றுள்ளார்.
 தமிழில் தட்டச்சு செய்யும் பணி முதலில் "நம் தலையை" தின்னும்வேலையாக இருக்கும். அதற்கான மென்பொருள்கள், தட்டச்சு முறைகள் மற்றும் எளிய வழிகளை சொல்லுவார்.பொழுதுபோக்கு ,
மேலும் வித விதமான் கணணி விளையாட்டுக்கள் என்று இவரின் தளம் அனைவரையும் கவரம் ஒன்று.
வேலன் - கீழ்கண்ட Link ஐ கிளிக் செய்துகொண்டு அங்கு செல்லவும்
***********************************
தகவல் தொழில் நுட்பம் ,தமிழர்களுக்காக தமிழில்.இந்த வலைத்தளம் பெயருக்கு ஏற்றமாதிரி தகவல்களை அள்ளித்தருகிறது. 
ஆங்கில வடிவிலும் இதே தகவலகளை பெற இவரின் ஆங்கில தளத்திற்கு செல்ல 








                                                                 






                                                             ***********************************






  






தொழில் நுட்ப செய்திகளுக்கு மற்றொரு தளம் 


நண்பர் வர்மாவின் ஆழ்ந்த அறிவும், அடக்கமும் இவர் இடும் பதிவுகளை மிளிரும். ஆனால் சொல்லிவைத்தர்போல 


ஹிட் இல் வராது, ஓட்டும் விழாதது குறையாக இருக்கும்.இங்கு இவர் எடுத்துகொண்டு விளக்கும் தலைப்புக்கள் பிரமிப்பை உண்டாகும் அளவுக்கு இவரின் தளம் ஒரு தகவல் களஞ்சியமாகும்.


கீழ்கண்ட Link ஐ கிளிக் செய்துகொண்டு அங்கு செல்லவும்



***********************************

மேலும் மோகன கிருஷ்ணனின் புதுவை .காம் மற்றும் ஒரு தகவல் பெட்டகமாகும். கற்போம் கற்பிப்போம் என்ற தலைப்புகளில் நிறய தொழில் நுட்பங்களை வெளியிடுகிறார்.




கீழ்கண்ட Link ஐ கிளிக் செய்துகொண்டு அங்கு செல்லவும்

***********************************

பதிவின் நீளம் கருதி மீதம் (இன்னம் நிறைய) உள்ளவர்களை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம் 
நான் அதிக நேரம் செலவிடும் பதிவுகள் இந்த தொழில் நுட்ப பதிவுகளே.இவைகளை இங்கன்றி வேறு எந்த இடத்திலும் இலவசமாக, இந்த எளிமையான வழிகளில் அதுவும் அழகு தமிழில் பெற முடியாது அல்லவா? ! அதுதான் இத்தளங்களின் சிறப்பு.

தாங்கள் எங்கும் சென்று எவரிடமும் அண்ட வேண்டியதில்ல. இது அணைவருக்கும் பொதுவான தளமானதால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். சுதந்திரமாக இருங்கள்

மீண்டும் சொல்கிறேன் யாருடனும் குழு சேராதீர்கள். குழு சேரும் பட்சத்தில் நீங்கள் அனைவரும் வெறும் "ஜால்ராக்களாக'"
மாற்றப்பட்டு வலைப்பூவின் வார்த்தைப்படி "சொம்பு தூக்கிகளாக " வர்ணிக்கப்டுவீர்கள். தேவையா இது?

இன்று வரை நான் எந்த குழுவிலும் இலலை. ஆனால் நிறைய பாசக்கார நண்பர்களை பெற்றுள்ளேன். 

 பதிவுகள் பிறருக்கு நல்ல பயன்களையும் உதவிகளையும் செய்யும் என்றால் நீங்கள்  தான் உண்மையான பிரபலமான பதிவர்களாக போற்றபடுவீர்கள். இங்கு எவரிடமும் சண்டை இட்டு நாம் அடையப்போவது ஒன்றுமில்லை என்பதை உணருவோம்.

 இன்னமும் நிறைய பதிவர்களைப்பற்றிய விபரங்களை அடுத்த பதிவில் பாப்போம்.

இந்த பதிவில் குறிபிட்டுள்ள அன்பு பதிவர் நண்பர்கள் அனைவரும் என்னை மனிக்கவும். உங்களின் அனுமதி இன்றி உங்கள் தளங்களின் URL ஐ நம் புதிய பதிவர்களுக்கு அறிமுகபடுத்தியுள்ளேன்.வேறு எந்த நோக்கமும் இன்றி.அவர்களையும் இனி உங்களுடன் அரவணைத்து கொண்டு செல்லுமாறு வேண்டிகொள்கிறேன். 

நன்றி.





23 comments:

பொன் மாலை பொழுது சொன்னது…

" புதியவர்களுக்கு ..கவனம் தேவை .."

என்று நான் இட்ட பதிவு வெளியிட்ட சில நிமிடங்களில்
அகற்றப்பட்டு விட்டது. தொழில் நுட்ப காரணங்களோ அல்லது வேறு
என்ன காரணமோ தெரியவில்லை.

எதுவானாலும் இருக்கட்டும். அனபர்களுக்கு அவர்களின் மின் அஞ்சலில்
அதே பதிவின் பிரதியினை அனுப்பி வைக்கிறேன்

பொன் மாலை பொழுது சொன்னது…

kakkoo.sattanathan@gmail.com

பொன் மாலை பொழுது சொன்னது…

மீண்டும் முயன்று அதே பதிவினை வெளியிட்டுள்ளேன்
நன்றி நண்பர்களே!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

திரு வேலன் அவர்களது பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கும்
மிக இனிய நண்பர் .

அப்புறம் டவுசர் பாண்டிக்கு இப்போதைக்கு எதாவது சொல்லனும்னா .....
கம் -ஆன் டவுசர் பாண்டி கம் -ஆன் !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

check this blog too ....

http://padmahari.wordpress.com/

Menaga Sathia சொன்னது…

அனைவரும் நல்ல அறிமுகங்கள்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவர்கள்..
தெரிந்தை அடுத்தவர்களுக்கு சொல்லிக்கொடுக்க மனம் வேண்டும்..

அதற்காக அவர்களுக்கு என்னுடைய சல்யூட்...

தமிழார்வன் சொன்னது…

நண்பர் கக்கு. மாணிக்கம் அவர்களுக்கு,

"அண்ணாத்த" டவுசர் பாண்டி, "மாஸ்டர்" வேலன், வர்மா, மோகன கிருஷ்ணன், சசிகுமார், தகவல் தொழில் நுட்பம் " ஆகிய பதிவுலக நண்பர்களின் பண்புகளையும் வலை இணைப்பையும் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
தமிழார்வன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

டவுசர் வந்தாச்சி மாப்ள,
போயி நாலு முதுகுல சாத்திட்டு அப்புறம்தான் மறு வேல.

பொன் மாலை பொழுது சொன்னது…

நீண்ட நாட்கள் கழித்து
சகோ. மேனகாவிடமிருந்து கருத்துக்கள்.
ஆனால் தவறாமல் ஓட்டு போடும் அன்பர்களில் பட்டியலில்
வந்துவிடுவார். நன்றி சகோ.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி பட்டா அண்ணாதே
அந்த ஒரு காரணம் போதாதா?
நாம் இவர்களை போற்ற?
வருகைக்கு நன்றி.
நேரம் இலலை கும்மி அடிக்க.

பொன் மாலை பொழுது சொன்னது…

தம்பி தமிழ்,

மற்றவர்கள் தங்கள் பதிவிற்கு வருமாறு உங்களை எல்லாம் அழைக்க
நானோ புதியவர்களை "பிரபலமான பதிவர்கள்" பக்கம் அனுப்புகிறேன்.
கருத்துக்கு நன்றி.

தமிழ் உதயம் சொன்னது…

பயனுள்ள பதிவு.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி தமிழ் உதயம்
கழுத்த வலிக்காதா??
எவ்வளோ நாழிதா குனிஞ்சி பழத்த
கடிபீங்க ?

ஜெய்லானி சொன்னது…

நா போற இடம்தான் இருந்தாலும் புதியவர்களுக்கு தவராமல் பார்பது நல்லதுதான் ....நன்றி...!!

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி நண்பர் ஜெய்லானி

பொன் மாலை பொழுது சொன்னது…

Thu, June 10, 2010 10:44:25 AM
Made Popular : புதியவர்களுக்கு...! ..கவனம் தேவை...!!.
From:
Tamilish Support
View Contact
To: manickanathan@ymail.com

Hi kakkoo,

Congrats!

Your story titled 'புதியவர்களுக்கு...! ..கவனம் தேவை...!!.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th June 2010 06:44:25 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/271590

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

****************************************
பின்னூட்டமிட்டும், கருத்துக்களை பகிர்ந்துகொண்டும்
வாக்களித்த அணைவருக்கும் என் நன்றியினை
சொல்லிக்கொள்கிறேன்.
கக்கு-மாணிக்கம்

வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…

நண்பர் மாணிக்கம் அவர்களே! உங்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி வேண்டும். என் பிளாக்கரை தமிழிஸ்-ல் இணைக்க வழி சொல்லுங்களேன். எனக்கு கனினியின் அறிவு குறைவே! ஆனாலும் என் (கவி) படைப்புக்கள் அனைவரையும் சென்றடையனும் என ஆசை. தயவு செய்து உதவுங்களேன். நன்றி!

pichaikaaran சொன்னது…

useful one

பொன் மாலை பொழுது சொன்னது…

நண்பர் சலீம் பாட்ஷா,

உங்கள் மெயில் முகவரி என்ன என்று என்னுடன் தொடர்பு கொள்ளவும். என் மெயில் முகவரி மேலேயே உள்ளது பாருங்கள்.உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்
நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி திரு பார்வையாளன் அவர்களே.

Sai Gokulakrishna சொன்னது…

நன்றி! எனக்கு உங்கள் வலை பதிவின் தலைப்பு ரொம்ப பிடிக்கும்! இது ஒரு பொன் மாலை பொழுது.., பாடலை போல.
நான் பலமுறை தங்கள் வலைப்பதிவை பார்வையிட்டுள்ளேன்.என்னை போன்ற நிறைய புதிய வலைபதிவர்களை ஆதரித்து பலருக்கும் அறிமுகப்படுத்துவதற்கு மிக்க நன்றி! என்னை போன்ற பலர் கணினி புலமையின்றி வலைப்பதிவை மெருகூட்ட முடியாமல் தவிக்கையில் தங்களின் பதிவர் அறிமுகம் மூலமாக பல தொழில்நட்ப பதிவுகளை கண்டு கொஞ்சம் மெருகேற்ற முடிந்தது!
இன்னமும் follower widget google connect , மற்ற பிடித்த பதிவுகளின் URL லிங்க் போன்றவற்றை இணைக்க தெரியவில்லை. சற்றுமுன் வசந்த், ராம்மோகன் ப்ளாக் மூலம் தமிழில் எழுதலாம் வாருங்கள் பக்கம் சென்று கற்றுக்கொண்டேன்.
நன்றி!

Varma சொன்னது…

வணக்கம்..
முதலில், என்னைப் பற்றியும் எனது பதிவுகள் பற்றியும் எழுதியதற்கு மிக்க நன்றி தோழரே...

இன்று தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.. நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்...

நீங்கள் சொன்னது போல் எனது பதிவுகளுக்கு ஹிட்ஸ் கிடைப்பது குறைவு தான்.. நேரம் போதாதமையால் சில பதிவுகளையே இட முடிகின்றது...
நன்றி...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக