பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மே 28

என்ன கொடுமை இதெல்லாம் ...!

பிரியாணியை வீட்டில் செய்துமட்டுமே சாப்பிடுங்கள், ஹோட்டல் பிரியாணிகளை  தவிருங்கள்.



Kumar Kandasamy

ஹலோ ஹவ் ஆர் யூ
என்றபடி உள்ளே நுழைந்தாள்
பக்கத்து வீட்டு பெண் குழந்தை ரதன்யா
2மாத பள்ளி விடுமுறையில் வெளியூர் சென்றவள் நேராக என்னை பார்க்க வந்து விட்டாள்
she is really a darling of our apartment
டீவி ஓடிக்கொண்டிருந்தது
ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்
அந்த நேரத்தில் எனக்கு வேறு ஏதோ அலைபேசி ‌அழைப்பு அதில் மும்முரமாக இருக்க திடீரென ரதன்யா சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டாள்
அவள் காண்பித்தது டிவி நியூஸ்
கரூர் தலப்பாகட்டி பிரியாணி பற்றிய செய்தி
என்ன அங்கிள் என்று என்னை உலுக்கி எடுத்து விட்டாள்
சத்தம் கேட்டு ஓடிவந்த அவள் அப்பா அவளை சமாதானப்படுத்த முயன்றார்
பிறகு அவர் சொன்னது சார் அவளுக்கு பிரியாணி மீன் என்றால் மிகவும் பிடிக்கும் இன்று கூட மாலை நாங்கள் வெளியே சென்று அசைவம் சாப்பிட நினைத்திருந்தோம்
இந்த செய்தியை நானும் பார்த்தேன் இது அவளை மிகவும் பாதித்திருக்கலாம் என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றார்
ஏற்கனவே வெள்ளை இதில் முகமெல்லாம் ரத்த சிவப்பு
அவளை வீட்டில் விட்டு விட்டு திரும்ப வந்தவர் இந்த செய்தியை பற்றி பேசினார்
அதாவது பிரியாணி சீக்கிரம் வேக வேண்டும் என்றால் ஒன்று அல்லது இரண்டு சொட்டு டீங்சர்
சேர்ப்பார்களாம் ஒருவேளை அது கிடைக்காமல் தெருவில் கிடக்கும் ரத்தக்கறை படிந்த பேண்டேஜை உபயோகப் படுத்தி இருக்கலாம் தலையெழுத்து என்று சொல்லிச் சென்றார்
சில வருடங்களுக்கு முன் நான் எழுதியது நினைவுக்கு வந்தது
திருச்சியில் தனியாக வேலை பார்த்து வந்த ஒருவர்
அவர் மெடிக்கல் ரெப்
சில நாட்களாக அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி
டாக்டரிடம் காண்பித்தார்
மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார் வலி நிற்கவில்லை
ஸ்கேன் எடுக்கப்பட்டது அதைப் பார்த்த டாக்டர் அவரிடம் அவரது உணவு பற்றி கேட்டார்
மதியம் சாப்பாட்டிற்கு திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ஒரு பிரியாணி கடையில் தினமும் மட்டன் பிரியாணி சாப்பிடுவதாகவும் மிகவும் டேஸ்டாக உள்ளதால் அதே கடையில் 10 நாட்களாக சாப்பிட்டதாகவும் கூற அந்தக் கடையிலிருந்து தனக்கு ஒரு பக்கெட் பிரியாணி வாங்கிவரச் சொன்னார் அந்த மருத்துவர்
அந்த பிரியாணி உணவு சோதனைக்கு அனுப்பப்பட்டது
முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது பிரியாணியில் ஆஸ்பிரின் கலந்திருப்பதாக தெரிந்தது
பிறகு விசாரணையில் ஆட்டுக்கறி க்கு பதிலாக பீப் பயன்படுத்தி அது விரைவில் வேக ஒரு ஒரு கிலோ மாமிசத்தில் 100 ஆஸ்பிரின் கலக்கப்பட்டது தெரிந்தது
அஸ்பிரின் கலக்கப்படும் பொழுது அந்த மாமிசம் வெகுவிரைவில் கொதி நிலையை அடைந்து பஞ்சு பஞ்சாக ஆட்டு மாமிசம் போல் ஆகிவிடுமாம்
பாவம் அந்த மனிதரின் குடலில் ஓட்டைகள் விழுந்து இறந்தே போனார்
அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்
என்ன அந்தக் கடை சீல் வைக்கப்பட்டது சிறிது நாட்களுக்குப் பிறகு அதே மனிதர் திருச்சி உறையூரில் சக்கைபோடு போடு வதாக‌ கேள்வி
எனது கவலை
எப்படியாவது ரதன்யாவை அழைத்து Baskin & Robinson
ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து சமாதானப் படுத்த வேண்டும்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக