பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, மே 26

தமிழ்நாட்டை சூழும் பொய்களின் விஸ்வரூபம்

பதிவு: மாரிதாஸ்.
தமிழக தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன??? எப்படிப் புரிந்து கொள்வது? திராவிட மண் பெரியார் மண் என்று ஆரம்பித்துவிட்டார்களே அது பற்றி கருத்தென்ன??
திமுக கூட்டணி வாங்கிய வாக்கு சதவீதம் : 52.64%
{திமுக 32.8% , காங்கிரஸ் 12.76% , CPI 2.43% , CPM 2.40% , முஸ்லிம் லீக் 1.11 , விசி மதிமுக தலா 2 % வரை உண்டு விசி அதே சின்னத்தில் போட்டியிட்டனர் என்பதால் தனியாக மதிப்பீடு இல்லை.}
அதிமுக கூட்டணி : 30.28%
{அதிமுக 18.5% , பாமக 5.42% , பாஜக 3.66%, தேமுதிக 2.19%, மீதம் பிறகட்சிகள் }
தினகரன் அமமுக : 5.25% {SDPI உடன் சேர்த்தால் சில வித்தியாசம் உண்டு}
கமல் மநீம: 3.7% {இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியாத சூழல்}
நாம் தமிழர் : 3.8% {ஒரு தொகுதியில் போட்டியிட முடியாத சூழல்}
---------------------------------------------------------
அதிமுக கூட்டணி தோல்விக்குக் காரணம் , திமுக கூட்டணி வெற்றிக்குக் காரணம்
1.மோடி எதிர்ப்பு என்ற விஷயத்தைத் திட்டமிட்ட மக்கள் மத்தியில் வெறுப்பாகக் கொண்டு சேர்த்தது. அதற்காகக் கடந்த 3 ஆண்டுகள் மேல் தீவிரமாக வேலை செய்தது திமுக அதன் ஆதரவாளர்கள். எந்த திட்டமும் அவர் கொண்டுவராத திட்டங்கள் அனைத்தையும் அவர் தான் காரணம் என்று நம்பவைத்தது மட்டும் அல்லாது பிரதமர் நினைத்தால் நிறுத்த முடியும் என்று நம்ப வைத்தார்கள் மக்களை. அதன் விளைவு மோடி வெறுப்பு.
ஈரோடு , சேலம் , தர்மபுரி , கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டது ; தஞ்சை பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகத் தூண்டிவிட்டது என்று மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர் திமுகவினர். அதை மோடி தான் கரணம் என்று மாற்றினார்கள்.
{இந்தவிதமாக வெறுப்பு அரசியல் அனைத்து எதிர்க்கட்சியும் செய்யும் ஆனால் ஒரு வரைமுறைக்குள் இருக்கும் இந்த திமுக நீட தேர்வு வரை அந்த அரசியலைச் செய்தி எவன் செத்தாலும் பரவாயில்லை நாம் ஆட்சியை கைபற்றி ஆகவேண்டும் என்று வேலை செய்தது. அதனால் தான் எந்த மாநிலமும் பள்ளி குழந்தைகள் விசயத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை ஆனால் திமுக அதையும் விட்டு வைக்கவில்லை.}
2.மாநிலம் முழுவதும் கிருஸ்தவ , இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக நின்று பாஜக எதிர்ப்பை காட்டியது. ஒருபடி மேலே சென்று சர்ச்சுகள் அனைத்திலும் பெரும்பாலும் பாஜக மோடி அரசுக்கு எதிராக வாக்கு செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி ஒரு தொகுதி மிக மிகச் சரியான எடுத்துக்காட்டு யார் மதவெறி அரசியல் செய்கிறார்கள் என்று. இங்கே இருக்கும் பெரும்பாலான நடுநிலையாளர் எவரும் பேசுவது இல்லை இந்த விஷயத்தை. மதம் அரசியல் என்று பச்சையாக பாஜகவைக் குற்றம் சாட்டும் இவர்கள் தான் மிகக் கொடூரமான மதவெறி கும்பல். மாநிலம் முழுவதும் 5000க்கும் மேற்பட இடங்களில் சர்சுகள் மதம் மாறும் மிசிநெரிகள் வந்துள்ளார்கள் அவர்களுக்கு வந்த நன்கொடை வழி அடைக்கப்பட்டது காரணமாக ஒன்று கூடி தங்கள் மத வெறியைக் காட்டியுள்ளார்கள். இதற்கு லயோலா போன்ற கல்லூரிகள் வலுவான ஆதரவும் கிட்டியது.
3.பத்திரிகைகள் ஊடகங்கள் திமுக என்ற கட்சிக்கு மறைமுகமாக வேலை செய்தது.
கெயில் எரிவாயு திட்டம் என்றால் என்ன? LPG NPG வித்தியாசம் என்ன எதனால் எரிவாயு திட்டம் மிக முக்கியமானது , 30% அளவிற்குச் செலவு மிச்சம் என்பதைத் தாண்டி பாதுகாப்பானது இந்த LPG சிலிண்டரை விட என்ற ஆயிரம் நல்ல விஷயத்தைக் கூறாமல் விவசாயம் கெயில் என்று முடிச்சு போட்டு பிரச்சனையைத் தூண்டிவிட்டது ஆரம்பித்து நீட் தேர்வு வரை அனைத்தையும் தூண்டிவிட்டது முழுக்க முழுக்க பத்திரிக்கைகள் தான்.
4.தேர்தல் நேரத்தில் ஒரு பக்கம் பொள்ளாச்சி விஷயம் கிளப்ப , இன்னொரு பக்கம் அடைமானம் வைத்த நகைகளை மீட்டுத் தருவோம் என்று திமுக வாக்குறுதி கொடுக்க என்று தேர்தலுக்குத் தகுந்த விதமாக மக்களைத் தூண்டவும் கவர்ந்திழுக்கும் வேலையையும் திமுக செய்து இறுதி வரை அதை வாக்காக மாற்றி வெற்றி பெற்றனர்.
அந்த வகையில் முடிவில் எப்படி 20ரூபாய் டோக்கன் கொடுத்து தினகரன் ஆர்கே நகர் மக்களை முட்டாள் ஆக்கினாரோ அதே வரிசையில் திமுக நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லி மக்களை முட்டாள் ஆக்கிவிட்டது. அது போதாது என்று அனைத்து வகையான கடனையும் தள்ளுபடி செய்யும் என்ற விதமாகச் செய்திகளைப் பரப்பியது.
5.மாநிலம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கும் பன்னீர் செல்வத்திற்கும் அத்துடன் தினகரனுக்கும் விசுவாசமாக காட்டிக்கொண்டனர். விளைவு தேர்தல் வேளையில் சுணக்கம் ஏற்பட்டது. '
ராமநாதபுரம் , விருதுநகர் , தஞ்சாவூர் , சிவகங்கை , திருச்சி என்று பல இடங்களில் அதிமுக முழுவதும் கட்டமைப்பைத் தெளிவு இல்லாமல் வேலை செய்தார்கள். இது மாநிலம் முழுவதும் தெரிகிறது. அதிமுக 18% வாக்கு கூட இன்று இல்லை என்பது நிதர்சனமான உண்மை. காரணம் கட்டமைப்பு பலவீனமாகியுள்ளது.
6.இயற்கை ஆர்வலர்கள் , போராளிகள் என்ற பிம்பத்தில் ஒரு கும்பலைக் கடந்த 4ஆண்டுகள் மேலாக நக்சல் ஆதரவாளர்களைத் தீவிரமாக வளர்த்து வருகிறார்கள் இங்கே. அவர்களுக்கு வலுவான பிஜேபி அரசு அதற்கான ஆதரவு அரசு இங்கே அமையக் கூடாது என்ற நோக்கம் காரணமாக அவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு பிரச்சாரங்கள்.
7.பாஜக தலைவர்கள் சிலரின் அவசியமற்ற சச்சரவு தூண்டும் பேச்சுக்கள். நலத்திட்டங்கள் மற்றும் தங்கள் கட்சி சித்தாந்தம் பேசுவதை விட்டுவிட்டு சச்சரவுகளைக் கையில் எடுப்பது போன்ற செயல்கள்.
--------------------------------------------------------
சில எடுத்துக்காட்டு:
திராவிட மண் பெரியார் மண்ணில் பாஜக வரமுடியாது என்று வசனம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது :
அரக்கோணம் தொகுதி திமுக ஜெகத்ரட்சகன் வெற்றி - மொத்த வாக்கு சதவீதம் 57% ; அடுத்த இடத்தில் வந்தவர் பாமக வேலு அவர்கள் வாங்கி வாக்கு - 29%.
இந்த தொகுதி அறிவித்தவுடன் தெரிந்து விவரம் இந்த தொகுதியிலிருந்து 12% இஸ்லாமியர் வாக்கு , 11% கிறிஸ்தவர்கள் வாக்கு , பட்டியலின சமூகத்தினர் 24% வாக்கு பெரும்பாலும் பாமக கூட்டணிக்குச் செல்லாது. சிறுபான்மையினர் வாக்கு பாஜக மீது பரப்பப்பட்ட வெறுப்பு பிரச்சாரத்தால் கிடைக்காது , அடுத்து பாமக பட்டியலின மக்கள் வாக்கு கிடைப்பதில் சிக்கல். ஆக சுமார் 40%க்கும் மேலான வாக்குகள் நிச்சயம் கிடையாது என்ற நிலையில் அடுத்து 26% வன்னியர் மக்கள் வாழும் இந்த பகுதியில் திமுக நிருத்தியுள்ளவரும் அதே சமூகத்தைச் சார்ந்தவர் தான்.
இந்த இடத்தில் பெரியார் மண் என்று கூறும் எவனையும் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் " ஜெகத்ரட்சகன் என்பவர் யார்??? வீர வன்னியர் பேரவை என்ற இயக்கம் தொடங்கிய நபர்தானே... அவரே அங்கே ஒரு பெரும் ஜாதி வெறி பிடித்த நபர் தான்". எனவே ஜாதி ஒழிப்பு அது இது என்று பேசுவது எல்லாம் திமுக அதன் அடிவருடிகள் செய்யும் பித்தலாட்டம். அந்த வகையில் 26% வாக்குகளைப் பிரிக்கும் வழியும் தெரியும் திமுகவிற்கு. மொத்தமாகக் கூறினால் இந்த தொகுதி வேட்பாளராக அறிவித்திடத் தெரியும் அவர் தான் வெற்றி பெறுவார் என்று. ஆனால் அதிமுக பாமக இருவரின் கூட்டணி கணக்கு??? அதில் அதிமுக வாக்கு பாமகவிற்குச் செல்லவில்லை. 6% வாக்குகளைத் தினகரன் பிரிக்கிறார் - அத்துடன் அதிமுகவை அமைப்பு ரீதியாக பலவீனப்படுத்துகிறார். இதனால் அதிமுக ஜெயா இருந்த நாட்கள் போல் வேலை செய்யவும் இல்லை.
உண்மையில் அமைப்பு ரீதியாக அதிமுக மிகப் பலவீனமாக இருக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை. யாருக்கு வேலை செய்தால் நமக்கு லாபம் அவ்வளவு தான் நிர்வாகிகள் கணக்கு. எனவே எவரையும் பகைத்துக் கொள்ள விருப்பம் இல்லை வேகமாக வேலை செய்யும் எண்ணமும் இல்லை.
ராமநாதபுரம் : பாஜக : 32% , முஸ்லிம் லீக் : 44% , தினகரன் : 14% பிரித்தார். நாம் தமிழர் : 4%;
விருதுநகர் : காங்கிரஸ் : 43.8% , தேமுதிக : 30% , தினகரன் : 10% , கமல் : 5.3% , நாம் தமிழர் : 5%
திருச்சி : தேமுதிக : 15% ; காங்கிரஸ் : 59% , கமல் : 4% , நாம் தமிழர் : 6.2% , தினகரன் : 10%
தஞ்சாவூர் : தமிழ் மாநில காங்கிரஸ் : 21% , திமுக : 56% , தினகரன் : 10% , நாம் தமிழர் : 5.4%, கமல் : 2.2% {2019ல் இதே தொகுதியில் தனித்து அதிமுக 50% வாக்குகளை கைபற்றியது.}
சிவகங்கை : காங்கிரஸ் : 52% , பாஜக : 21.5% ; தினகரன் : 11% , நாம் தமிழர் : 6.5% , மக்கள் நீதி மையம் : 2%
இந்த தொகுதிகளில் பெரும்பாலும் தினகரன் ஆட்களுடன் சேர்ந்து பெரிய அளவில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் வேலை செய்தனர் அதிமுகவினர். அதிமுக வாக்கு அப்படியே கூட்டணி கட்சியினருக்குச் செல்லவில்லை இன்னொரு பக்கம் அடுத்து மக்கள் நீதி மையம் , நாம் தமிழர் சேர்ந்து நடுநிலையாளர்கள் வாக்கைக் கவர்வது.
ஸ்ரீ பெரம்பலூர்: திமுக : 56% , பாமக : 20% , மக்கள் நீதி மையம் : 10% , நாம் தமிழர் : 6% , தினகரன் 3%.
மதுரை : கம்யுனிஸ்ட் : 44% , அதிமுக : 30% , மக்கள் நீதி மையம் : 9% , தினகரன் : 9% , நாம் தமிழர் : 4%
கோவை : பாஜக ஒன்றில் வெற்றிபெறும் என்றால் அது கோவையாகத் தான் இருக்கும் என்று பலரும் கணித்த தொகுதி பெரும் தோல்வி. காரணம் கமல் மக்கள் நீதி மையம் நடுநிலையாளர்கள் வாக்கைப் பிரித்தது அவர் பெற்ற வாக்கு 12%. பாஜக பெற்றது 31.34%. அதிமுக கூட்டணி கட்சியினர் வேலை செய்தார்கள் தான் ஆனால் வாக்குகள் செல்லவில்லை. கம்யூனிஸ்ட் 45.6% வாக்குகள் பெற்று வெற்றியைப் பிரித்துள்ளார்கள். இங்கே நாம் தமிழர் வாங்கிய வாக்கு 5% , தினகரன் வாங்கிய வாக்கு 3% ஆகும்
-----------------------------------------
இறுதியாக :
நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் அழிவைச் சந்தித்துவிட்டனர். மேற்கு வங்காளம் என்று மாநிலத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த பொருளாதார மேன்மையை முழுவதும் அழித்து ஒழித்து அடங்கிய கம்யுனிஸ்ட் கட்சியை அங்கே மக்கள் துடைத்து எறிந்துள்ளார்கள். ஆனால் கெடுவாய்ப்பாக இங்கே நாம் வாய்ப்பு கொடுத்துள்ளோம். உலகம் முழுவதும் ஒரு புற்றுநோய் போலப் பரவி ஆடி அடங்கியுள்ள கம்யுனிஸ்ட் சித்தாந்தம் தேவை இல்லாமல் தமிழகம் இடம் கொடுக்கிறது. சர்வ நாசம் ஆக்காமல் ஓயமாட்டான் கம்யூனிஸ்ட்.
நல்லது செய்வது போல் இருக்கும் ஆனால் சர்வ நாசமும் செய்யு கம்யூனிசம், அது ஒரு மனநோய் அவ்வளவு தான் அது என்மட்டத்தில். நலல் இதயம் உள்ளவனை அது வசிகரிக்கும் ஆனால் அது நல்ல மூளை உள்ளவனால் தான் புரிந்து கொள்ள முடியும் பெரும் கேடு விளைவிக்கும் நோய் என்று. {உடனே சீனா ரஷ்ய என்று ஆரம்பிப்பார். ரஷ்ய கம்யூனிஸ்ட் இல்லை ; சீனா கம்யுனிஸ்ட் சித்தாந்தத்தை 1980களிலேயே குழி தோண்டி புதைத்துவிட்டது.}
அந்த வகையில் ஒரு பெரும் கேடுகெட்ட கூட்டத்தை நாம் அனுமதித்துள்ளோம். ஒன்றுக்கு 100முறை சிந்திக்க வேண்டும் கம்யுனிஸ்ட் விசயத்தில். இல்லை இங்கே பெரும் வறட்சியை உருவாக்கி அதற்கு முதலாளிகள் தான் காரணம் என்று அப்போதும் ஒரு கேவலமான வெறுப்பு பேச்சு மட்டுமே பேசி திரிவான். ஒரே ஒரு கம்யுனிசத் இங்கே அவன் சொல்லும் கொள்கை படி ஒரு தொழிற்சாலை நடத்திக் காட்டச் சொல்லுங்கள் நான் நாட்டை காலி செய்கிறேன்.
எனவே கம்யுனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்த நபர்களுக்கு நான் சொல்ல வேண்டியது " நல்ல இதயம் உள்ளவனை அது வசிகரிக்கும் ஆனால் அது நல்ல மூளை உள்ளவனால் தான் புரிந்து கொள்ள முடியும் கம்யுனிசம் என்பது ஒரு பெரும் கேடு விளைவிக்கும் நோய் என்று". அதன் வரலாற்று உண்மை இது. 19ஆம் நூற்றாண்டில் மிக பெரிய அழிவை உருவாக்கியது , சர்வாதிகாரிகளை கொடுத்தது எல்லாமே கம்யூனிஸ்ட் தான். இது அசைக்க முடியாது உண்மை.
எனவே தமிழகம் திமுக என்ற கட்சியைத் தேர்வு செய்ததில் கூட ஒருவிதத்தில் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கம்யூனிஸ்ட் அழித்தொழிக்க வேண்டிய ஒரு வியாதி அந்த வியாதியை அனுமதித்து நல்ல விஷயம் அல்ல.
-மாரிதாஸ்


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக