பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜனவரி 20

மத்திய காங்கிரஸ் அரசே உடனே பதவி விலகு!




இந்திய தலைநகர் புது டெல்லியில் ரோடு ஓரத்தில் குளிரில் வாழும் குழந்தைகள்.

கருப்புப் பண விவகார வழக்கில் நேற்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம். நாட்டையே கொள்ளையடித்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை திருடியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக கேட்டுள்ளது. இந்தப் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டேயாக வேண்டும் என்றும் கண்டித்துள்ளது.

ஆனால் இதற்கு நேர் மாறாக பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்து நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அமைச்சரவை மாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

  // உச்சநீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் கருப்புப் பணத்தை உடனடியாக மீட்டுக் கொண்டு வர நம்மிடம் எந்தத் தீர்வும் இல்லை //  

என்று கூறிவிட்டார்.

கருப்புப் பணம் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்குத் தெரிவிப்போம். அதேசமயம், இதை பகிரங்கமாக அனைவருக்கும் தெரியப்படுத்த முடியாது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.என்று அவர் கூறியுள்ளார்.


சுப்ரீம் கோர்ட்டார் இந்த விஷயத்தில் விடாமல் தொடர்ந்து தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், முடிந்தால் ஆணையே பிறப்பிக்க வேண்டும். சொலிசிட்டர் ஜெனரல் சொல்வது போல சிக்கல் என்ன வந்துவிடுமோ? தெரியவில்லை!! கூட்டணி பிரச்சினையோ? கொள்ளையர்களை பாதுகாப்பது என்று இந்த பிரதமர் முடிவேசெய்துவிட்டாரா? எல்லா ஊழல் பேர்வழிகளையும் அரவணைத்து செல்வதும், அவர்கள் மீதான விசாரணையை கண்துடைப்பிற்காக நடத்துவதும் நல்ல பிரதமருக்கான செய்கை அல்ல. வருங்காலத்திலே அவர் குற்றவாளி கூண்டிலே நிறுத்தப்பட நேரிடலாம். எங்கே போனார்கள் ஊழலை ஒழிப்பேன் என்று தம்பட்டம் அடித்த சோனியாவும் ராகுலும் ? ஏன் இவர்கள் வாய் மூடி மௌனம் காக்கிறார்கள்??

கிடைத்த தகவல்களைகூட இவர்கள் வெளியிட மறுக்கும்போது இவர்களா இந்த நாட்டை காப்பாற்ற போகின்றனர்? தேச துரோகிகள் என்று தானே இவர்களை சொல்ல வேண்டும் !! மன்னிக்கவே முடியாத குற்றங்களை இந்த காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து செய்து வருகின்றது. எல்லா மட்டத்திலும் ஊழல்கள் மலிந்து வருகின்றன. கூட்டணி கட்சிகளால்தான் பிரச்சினைகள் என்று தப்பிக்க பார்கின்றது. கூட்டணி கொள்ளையர்கள் இவர்கள். ஒப்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாய் நாட்டை சுரண்டுகின்றனர். நாட்டை ஆளும் கட்சியே நாட்டை சுரண்டுகின்றது என்பது ஏற்றுகொள்ளவே முடியாது. அதன் தாக்கம் இந்த காங்கிரஸ் இந்த நாட்டிலிருந்து துடைத்து ஒழிக்கப்படக்கூடும்.! எதிர்க்கட்சி என்கிற மாதிரியான அந்தஸ்தை கூட அது இழக்கக்கூடிய சூழ்நிலை விரைவில் வரும். அந்த தொடக்கம் பீகாரில் ஆரம்பித்து இந்திய நாடு முழுமைக்கும் பரவும்.


இந்திய உச்ச நீதி மன்றத்தின் ஆணையின் படி நாட்டின் பொருளாதாரத்தை திருடியவர்கள் யாராக இருந்தாலும் இப்படிப்பட்டவர்களின் பெயர்களை உடனே பகிரங்க மாக வெளியிட வேண்டும் இல்லையேல் இந்த அரசு பதவி விலக  வேண்டும். இனியும் இவர்கள் இந்தநாட்டை ஆள எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று நாம் அனைவரும் நமது கண்டனங்கள் இவர்களுக்கு தெரிவிப்போம் வாருங்கள். அணைத்து பதிவர்களும் வலையுலக நண்பர்களும் இது குறித்து இந்திய அரசுக்கு நமது மறுப்பையும் கண்டனகளையும் தெரிவிப்போம்.





சற்றும் வெட்கமில்லாமல், பிரதமர் பதவியில் இருக்கும் இவரை மகா பொருளாதார மேதை என்று வேறு காவடிதூக்கிக்கொண்டுஅடிவருடிக்கொண்டு நாமும் இருக்கிறோம்.


மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசே உடனே பதவி விலகட்டும்!